Archive for December 19, 2009
வேட்டைக்காரன் – திரை விமர்சனம்
- ப்ளாஷ்பேக் : சென்ற வாரம் பேருந்தில் அமர்ந்திருந்த போது ஒரு பெரியவர் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு போட பணத்தை எடுத்த போது பேருந்து கிளம்பி விட்டதால் அவருக்கு கொடுக்க தூக்கி எறிய வேண்டியதாகி விட்டது. அது புண்ணியம் என நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.
- அறிவுரை : என்னதான் உயிர் நண்பர்கள் என்றாலும் எல்லா விஷயத்திலும் அவர்கள் சொல்வதை ஆராயாமல் முடிவெடுத்து விடக்கூடாது.
- சரி, கதைக்கு வருவோம். கதையின் நாயகன் மகா சக்தி படைத்தவன். ஒரே அடியில் கான்க்ரிட் தூணை உடைப்பவர். முப்பது பேரை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடியவர். மொக்கை நண்பர்களை கொண்டவர் (என்னைப் போலவே).
- அவ்வாறாகப்பட்டவர் காவல் துறையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக வேண்டுமென்று விரும்புகிறார். அது தொடர்பாக மேல்படிப்பு படிக்க சென்னை வருகிறார். கதாநாயகியை சந்திக்கிறார். சற்று சுமாரான பிகரையும் சந்திக்கிறார். அவளை தன் உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக் கொள்கிறார். ஆட்டோ ஒட்டி படிக்கிறார்.
- காவல் துறை, இராணுவம், சிஐஏ போன்ற சக்திளால் தடுக்க முடியாத வில்லன் கும்பல் ஒன்று சென்னையில் அட்டகாசம் செய்து வருகிறது. அவர்களது அட்டகாசங்களை விரிவாக திரையில் காணலாம். ஆனால் அவர்கள் கதாநாயகனின் உடன்பிறவா சகோதரியிடம் சில்மிஷம் செய்ய கதாநாயகன் பொங்கி விடுகிறார்.
- வில்லன் டேமேஜ் ஆகி ஆஸ்பிட்டலில் சேர, போலீஸ் பொங்கி எழுகிறது. கதாநாயகன் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை என்கவுண்டரில் கொல்ல போலீஸ் முயற்சி செய்யும்போது கதாநாயகன் ஒரு அருவியிலிருந்து குதித்து காயத்தை கர்ச்சீப் மூலம் காயத்தை நீக்கி ராம்போக்கள் தமிழ்நாட்டிலும் உண்டு என நிருபித்திருக்கிறார்.
- நடுநடுவில் கதாநாயகன் வண்ணமயமான ஆடைகளை அணிந்து பாடல் காட்சிகளில் ஆடுகின்றார். சமயத்தில் கதாநாயகியையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார். பாடல் காட்சிகளில் கதாநாயகன் போடும் ஆடைகளை நீங்கள் நடைமுறை வாழ்வில் போட நேர்ந்தால் சமூகத்தால் உங்களுக்கு சில விரும்பதகாத விளைவுகள் நேரலாம்.
- இடைவேளைக்கு பின்னர் வில்லனும், கதாநாயகனும் பல சவால்களை விட்டு கொல்கின்றனர். இருப்பினும் பொறுமையாக நீங்கள் இருந்தால் ‘என் உச்சி மண்டை சுர்ருங்குது’ என்னும் குத்து பாடலை இரசிக்கலாம்.
- அப்புறம் வேற என்ன எழுதுறதுன்னு தெரியல. கிர்ருன்னு இருக்கு.
Recent Comments