twit…twit….twit

August 11, 2009 at 8:54 pm 4 comments

        உலக சோம்பேறிகளில் ஒருவரான நான் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளேன்.  என்னுடைய ட்விட்டர் ஐடி

marcopolo7

       இதை கொடுப்பது என்னை தொடர வேண்டுமென்பதற்காக இல்லை.  சந்தை நாளின் ஏதாவது எண்ணங்கள் தோன்றினால் (இதுவரை தோன்றியதில்லை) அதை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான்.

      இன்று நிப்டியானந்தரின் பரிந்துரை பகுதியை புதுப்பித்திருக்கிறேன் (என்னா தமிளு). இது போல….

         எனக்கு மிகவும் பிடித்த பயணிகளில் மார்க்கோ போலாவும் ஒருவர்.  இவர் எழுதிய பயணக்கட்டுரை (இவர் சொல்ல எழுதிய என்றும் சொல்லலாம்) பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.  இன்றும்.  இவரை போலவே நானும் ஆக வேண்டுமென்ற ஆசையும் உண்டு. என்னுடைய பயணக்கட்டுரைக்கு இப்போது பெயர் மட்டுமே வைத்திருக்கிறேன்.  பயணங்கள் இன்னும் முழுமையடையவில்லை.

தலைப்பு:  சுந்தரி பின்னே ஞான்………………

Advertisements

Entry filed under: Uncategorized.

Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள் The Hobbit – மாய காவியம்

4 Comments Add your own

 • 1. Rafiq Raja  |  August 12, 2009 at 12:41 pm

  அன்பின் மார்க்கபோலோ,

  ரொம்ப நாளாக டிமிக்கி குடுத்து கொண்டிருந்த உம்மை இன்று இனம் கண்டு கொண்டேன். சென்ற முறை கடல் பயணம் சென்றபோது என்னிடம் லவிட்டி கொண்டு போன 5000 த்தை, உடனடியாக பைசல் செய்யவும்.

  சுந்தரி பின்னே போய் அந்த பணத்தை செலவழித்தாக தெரிந்ததோ….. அப்புறம் இருக்குது சேதி.

 • 2. sharehunter  |  August 12, 2009 at 5:32 pm

  Dear Rafiq,

  உங்களிடம் வாங்கிய கடன் ரூ.5000- மறப்பேனா? உடன் எடுத்து வருகிறேன். அதற்கு ஈடாக உங்களிடம் விட்டுப்போன என்னுடைய பிஎம்டபிள்யு காரில் பெட்ரோல் நிரப்பி வையுங்கள்.

  வந்து எடுத்துக் கொள்கிறேன்.

 • 3. shankar visvalingam  |  August 12, 2009 at 10:37 pm

  நண்பர்களே,

  நீங்கள் இருவரும் சேர்ந்து என் சின்ன வீடு சுந்தரிக்கு சினிமாவில் ஹீரோயின் சான்ஸ் வாங்கித்தருவதாக கூறி அவளை என்னிடமிருந்து கவர்ந்து சென்று எனக்கு மறுவாழ்வு அளித்தவர்கள் என்பதை நான் என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்:) இருப்பினும் சுந்தரி பின்னே ஞான் எனும் புத்தகம் குறித்த என் கேள்விகள் இதோ..

  1- மார்க்கோபோலோவின் கிளுகிளு யாத்ரைகள் [வவம] நாவல் போல் இதுவும் சூடாக இருக்குமா?

  2- 1000 பிரதிகள் முன்பதிவு செய்தால் மட்டும் தான் புத்தகம் வெளிவரும் எனும் தகவல் உண்மையா?

  3- சதா தபாலில் இப்புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாமா

  இப்படிக்கு ஒர் உண்மையான வாசகன். நீங்கள் அம்போ என்று இறக்கி விட்ட பெயர் தெரியா தீவிலிருந்து…

 • 4. Rafiq Raja  |  September 8, 2009 at 1:14 am

  வேட்டையரே, இருந்தாலும் உங்கள் பேராசை அதிகமய்யா… நீர் விட்டு போன தகர டப்பா சைக்கிளை, இன்னும் பழைய தட்டு முட்டு சாமான் காரன் கூட இனாமாக வாங்க தயாரில்லை….

  திரும்பி வந்ததும், அதை அப்படியே அலம்பல் பாராமல் அள்ளி கொண்டு போயிடுமய்யா… 🙂

  காதலரே கவலையே வேண்டாம்… பங்கு வேட்டையர் தற்சமயம் தலைமறைவாக இருப்பதே… மார்க்கபோலோவின் கிளுகிளு யாத்திரைகள் இரண்டாம் பாகம் எழுதி கொண்டிருப்பதால் தான். 🙂 ஏற்கனவே 600 பிரதிகள் முன்பணம் அனுப்பி காத்திருக்கிறார்கள் நம் வாசக கண்மணிகள்.

  சரி அந்த அம்போ தீவில் இன்னும் என்ன வேலை தங்களுக்கு ? போன முறை கப்பல் வைத்து அழைத்த போது கூட மறுத்தாக கூறுகிறார்களே 🙂 ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

August 2009
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: