NPA அப்டீன்னா?

July 16, 2009 at 12:07 am 7 comments

       வங்கிப் பங்குகளில் முதலீடு செய்து கோடீஸ்வரர் யாரும் லட்சாதிபதி ஆனதாக கேள்விப்பட்டதில்லை.  பொறுமையுடன் காத்திருக்க முடிந்தால் வங்கி பங்குகளில் முதலீடு செய்வது ஒரளவு பாதுகாப்பானது என்றே கூற முடியும்.  மற்றவை போல் வெகு வேகமான ஆட்டம் எல்லாம் இவ்வகை பங்குகள் காட்டாது.  அதனாலேயே தின வர்த்தகத்திற்கு இவ்வகை பங்குகள் ஏற்றதில்லை.

     ஏன் இந்திய வங்கி பங்குகள் பாதுகாப்பானது?

    அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் போல் நமது வங்கிகள் அகல கால் விரிக்காது.     பெடரல் வங்கி போன்ற அமைப்புகள் இருந்தும் அவற்றின் கட்டுப்பாட்டில் அயல்நாட்டு வங்கிகள் இயங்குவதில்லை.  நமது நாட்டிலே  ரிசர்வ் வங்கி கையிலேயே குடுமி இருக்கும்.அதனால் ஒரே நாளில் மஞ்சக் கடுதாசி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. ரிசர்வ் வங்கியும் அதற்கு அனுமதிப்பதில்லை.  எவ்வளவு மோசமான நிலையிலும் வங்கியினை காப்பாற்றவே பார்க்கும்.  (ஒரியன்டல் பேங்க் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்).

       ஆனால் மிக பெரிய வளர்ச்சி எதையும் உடன் அடைந்துவிடுவதில்லை.  ஒட்டப்பந்தயத்தில் முதல் ரவுண்ட்டில் போட்டி போட விட்டாலும், பந்தயத்தின் நடுவே காலை உடைத்துக் கொள்வதில்லை.

       நமது வங்கிகள்   அமெரிக்க வங்கிகள் போன்று எல்லோருக்கும் கடன் கொடுத்துவிடாது.  இந்தியாவை பொறுத்த மட்டில் வங்கியில் கடன் வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தானே உழைத்து இந்த தொகையை சம்பாதித்து விடலாம் என தோன்றி விடும். அத்தகைய தன்னம்பிக்கையை நமது வங்கிகள் ஒரு சாமான்யருக்கு கொடுத்துவிடும்.

           வங்கிகள் வரவு செலவுக் கணக்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி இங்கே பார்ப்போம்.  அதுதான் NPA. Non-Performing Assets.

      முதலில் நாம் வங்கியில் சேவிங்ஸ் கணக்கிலும், ரொக்க முதலீடு செய்யும் தொகையை வங்கிகள் வரவாகவோ அல்லது சொத்தாகவோ எடுத்துக் கொள்ளாது.  இவை அனைத்தும் கடன் பிரிவிலேயே வரும்.  இவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரிசர்வ் வங்கியில் டெபாஸிட் செய்துவிட வேண்டும்.

     ஒருவேளை வங்கி திவாலாக நேர்ந்தாலும் வங்கியில் சேவிங்ஸ் கணக்கு மற்றும் ரொக்க முதலீடு செய்பவரின் பணம் ஏறக்குறைய முழுமையாக கிடைப்பதற்கு இந்தியாவில் வாய்ப்புண்டு.  ஏனென்றால் அவர் வங்கியின் கடன்தாரர். வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வதருக்கு அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் அவர் முதலீட்டாளர்.

     பங்கு சந்தை நீதி: கடன்தாரரை ஏமாற்றக்கூடாது. முதலீட்டாளர் விதிவிலக்கு.

      இவ்வாறு நம்மிடமிருந்து எந்த கேள்வியுமின்றி பெற்ற பணத்தை ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு தேவையுள்ளவர்களுக்கு கடனாக அளிக்கிறது. அது மட்டுமில்லாது இந்த தொகையை கடன் பத்திரங்கள் சந்தையிலும் உலவ விட்டு (லோக்கல் பாஷையில் சொன்னால் ‘ரொடேஷன்’) வட்டித் தொகை சம்பாதிக்கின்றன.

      வங்கிகளின் வரவு செலவு அறிக்கையில் நாம் டிமாண்ட் டிராப்ட் வாங்க கொடுக்கும் கமிஷன் எல்லாம் சொற்ப பங்குதான்.  இது போன்று கடன்பத்திர சந்தையில் பணத்தை புரட்டி சம்பாதிக்கும் வரவே அதிகம்.

       நம்ப பணத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தவுடன் அத்தொகையானது வங்கியின் சொத்துப் பகுதியில் சேர்ந்து விடும்.  அதாவது நம்முடைய டெபாஸிட் தொகை  வங்கியின் கடன் பகுதியில் இருக்கும்.  அதிலிருந்து வங்கி மற்றொரு பார்ட்டிக்கு கொடுக்கும் கடன் வங்கியின் சொத்து பகுதியில் வந்து விடும்.

      இந்த கடன் பெற்றுக் கொண்ட புண்ணியவான்கள் வங்கிக்கு வட்டித் தொகையை தவறாது செலுத்தி வர வேண்டும் என்பது ஐதீகம்.  இருப்பினும் சிலர் குறிப்பிட்ட நாளுக்கு பிறகும் (பொதுவாக 90 நாட்கள்) வட்டித் தொகையை செலுத்தாமல் ‘வாங்கின கடனை திருப்பிக் கொடுக்கிறது என் வாழ்க்கையிலே இல்லை’ என்ற குறிக்கோளை பின்பற்றினால் அந்த கடன்கள் அனைத்தும் இந்த NPA (Non-Performing Assets) என்ற வகையில் வந்து சேர்ந்து விடும்.

     ஒவ்வொரு வங்கியும் தனது காலாண்டு அறிக்கையில் இந்த வாராக் கடன்கள் பற்றிய விவரங்களை மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டும் என்பது செபியின் கட்டளை.  போன வருஷத்தை விட இந்த வருஷம் லாபம் அதிகம் அப்புறம் போன வருஷத்தை விட இந்த வருஷம் என்பிஏவும் அதிகம் ஐ ஜாலி… இந்த வங்கி பங்கில் முதலீடு செய்யலாம் என முடிவு எடுத்து விடக் கூடாது.

       எல்லா வங்கியிலும் வாராக் கடன்கள் இருக்கும். அதன் சதவீதம் வருடத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.  அதன் வழியாக வங்கியின் நடுநிலை மேலாண்மை எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.  இந்த விகிதமானது குறைந்துக் கொண்டே வந்தால் வங்கியின் நிர்வாகம் சீராக இயங்குகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

    பொதுவாக இந்திய வங்கிகளின் என்பிஏ வெளிநாட்டவருடன் ஒப்பிடுகையில் குறைவாகதான் இருக்கும்.  அரசு துறை வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே கடன் கொடுக்கின்றன. வாராக்கடன்களை வசூலிக்கவும் சில தனியார் வங்கிகள் தனியே ஆட்டோமேன்  ….ச்சே…. ஆம்பட்ஸ்மேன் வைத்துள்ளன.

 NPA (Non Perofirming Assets க்கும்  Bad Debts என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.  இரண்டாம் வகையை சேர்ந்தவை காந்தி கணக்கில் வரக்கூடியவை.  வசூலிக்கவே முடியாத கடன். இதனை எவ்வாறு உதாரணம் சொல்லி விளக்குவது என யோசித்துக் கொண்டிருக்கையில் தன் தமையன் வெகு எளிதான உதாரணத்துடன் எனக்கே விளக்கி விட்டான்.

      ‘ஒரு வங்கி எனக்கு கடன் கொடுத்தா அது NPA-ல் வரும்.  உனக்கு கொடுத்தா அது Bad Debts.’ 

 

       கால்குறிப்பு (Footnote-ன் தமிழாக்கம்) NPA என்பதை ஒரு எளியதாக விளக்க முயற்சி செய்துள்ளேன்.  இதில் இன்னும் நிறைய சொல்லாத விஷயங்கள் இருக்கின்றன.  இந்த பகுதிக்காக வங்கியின் வரவு செலவு கணக்கு ஆண்டாய்வு அறிக்கையில் நிறைய பக்கங்கள் ஒதுக்கப்படும்.   ஒருமுறை அதனை படித்து பாருங்கள்.

Entry filed under: Hunter's Mind.

நிதி நிலை அறிக்கை #1 Princess Mononoke – திரை விமர்சனம்

7 Comments Add your own

  • 1. shankar visvalingam  |  July 16, 2009 at 1:23 am

    // ‘ஒரு வங்கி எனக்கு கடன் கொடுத்தா அது NPA-ல் வரும். உனக்கு கொடுத்தா அது Bad Debts.’//

    நண்பரே, உங்களை நினைத்து உண்மையிலேயே பெருமைப்பட வைத்து விட்டீர்கள்.

    இந்தக் குத்து டயலாக்கை – பன்ச் டயலாக்கின் தமிழாக்கம்- வங்கி வரவேற்பறைகளில் மாட்டி வைக்க முடியாதா :))

  • 2. kvrtex  |  July 16, 2009 at 7:13 am

    “இந்தியாவை பொறுத்த மட்டில் வங்கியில் கடன் வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தானே உழைத்து இந்த தொகையை சம்பாதித்து விடலாம் என தோன்றி விடும். அத்தகைய தன்னம்பிக்கையை நமது வங்கிகள் ஒரு சாமான்யருக்கு கொடுத்துவிடும்.” ஹா ஹா கலக்கறீங்க தலைவா .

  • 3. rajendrann  |  July 16, 2009 at 9:46 am

    nice postings

  • 4. vimal  |  July 17, 2009 at 9:33 am

    ஆஹா அருமையான கட்டுரை !

    நன்றி

  • 5. Baski  |  July 19, 2009 at 9:45 pm

    Romba Nalla irruku.Keep Writing …

  • 6. Rafiq Raja  |  July 22, 2009 at 8:55 pm

    வேட்டையரே, இந்திய வங்கிகளின் கட்டுபாட்டு கேந்திரத்தை பற்றிய தங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். தேவைபடும் நேரங்களில் நாசூக்காக குட்டு வைத்து வங்கி முதலாளிகளை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் தந்திரம் நம் ரிஸர்வ் வங்கியிடம் தாரளாமாக தென்படுகிறது. க்ளோபல் டிரஸ்ட் மற்றும் யெஸ் பேங்க் நடவடிக்கைகளை அவர்கள் ஒடுக்கியதே அதற்கு சிறப்பான சான்று. கூடவே நம் பணத்தை எடுப்பதற்கு இவ்வகை தானியங்கி கருவிகளை பயன்படுத்த வேண்டும், அப்படி இல்லையேல் சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஏகாபத்திய முறையை கைபிடித்து கொண்டிருந்தவர்களை சமீபத்தில் அடங்கி போக செய்த விஷயம், அமெரிக்காவில் கூட நடந்தது இல்லை.

    வங்கி திவாலானால் முழுமையாக சேமிப்பு பணம் கிடைக்க வாய்ப்பிருப்பது உண்மைதானா….? கடைசியாக நான் கேள்விபட்டவரை ரிசர்வ் வங்கி அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் தான் ஜவாப்தாரி என்று கூற்று இருக்கிறதே…. எது உண்மை ?

    நமது தேசியமயக்கபட்ட வங்கிகளின் கடன் முறை பற்றி என்ன சொல்ல…. கடைசியாக ஒரு நிலம் வாங்க நான் பூர்த்தி செய்த நடைமுறை பத்திரங்கள், தேர்வுகளில் நான் மூன்று மணி நேரத்தில் எழுத முடிந்த பக்கங்களை விட அதிகம் இருந்தது, ஒரு சோக காரியம். 🙂

    தனியார் வங்கிகளில் ஆம்படஸ்மேன் இருக்காரே இல்லையோ ஆட்டோமேன்கள் அதிகம்… அவர்கள் பார்வையில் இருந்து மறைந்து கொள்ள டெர்மினேட்டர் ஜான் கானர்ஸிடம் நம் அப்பாவிகள் பாடம் கற்று கொண்டாலும் உதவாது… 🙂

    கடைசியாக, யாரையாவது அவர்கள் வீட்டில் நீ ஒன்றுக்கு உதவாத தண்டம் என்று ஒரு வைதால், அவர்கள் NPA வகையறாவா… இல்லை Bad Debts ஆ, கொஞ்சம் விளக்குங்களேன். 🙂

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

  • 7. reader  |  July 28, 2009 at 10:44 pm

    Very nice article.

    //வங்கி திவாலானால் முழுமையாக சேமிப்பு பணம் கிடைக்க வாய்ப்பிருப்பது உண்மைதானா….? கடைசியாக நான் கேள்விபட்டவரை ரிசர்வ் வங்கி அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் தான் ஜவாப்தாரி என்று கூற்று இருக்கிறதே…. எது உண்மை ?//

    True. Refer to this.

    http://www.dicgc.org.in/GuideToDepositInsuranceInIndia.htm#q3

    3. What is the maximum deposit amount insured by the DICGC?

    Each depositor in a bank is insured upto a maximum of Rs.1,00,000 (Rupees One Lakh) for both principal and interest amount held by him in the same right and same capacity as on the date of liquidation/cancellation of bank’s licence or the date on which the scheme of amalgamation/merger/reconstruction comes into force.

    7. Can deposit insurance be increased by depositing funds into several different accounts all at the same bank?

    All funds held in the same type of ownership at the same bank are added together before deposit insurance is determined. If the funds are in different types of ownership or are deposited into separate banks they would then be separately insured.

    8. Are deposits in different banks separately insured?

    Yes. If you have deposits with more than one bank, deposit insurance coverage limit is applied separately to the deposits in each bank.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 8 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 9 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 10 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 10 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 10 years ago
July 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: