நிதிநிலை அறிக்கை 2009

July 7, 2009 at 7:55 am 6 comments

     மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிதிநிலை அறிக்கை மங்களகரமாக 06.07.2009 அன்று வெளியாகிவிட்டது. எதிர்பார்த்தவாறே சந்தையும் 280 புள்ளிகள் வரை இறங்கி தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறது.

        கடந்த வெள்ளியன்றே, உப்புசப்பற்ற ரயில்வே நிதிநிலை அறிக்கையின்போதே, அமெரிக்க சந்தை 280 புள்ளிகள் இறங்கியபோதிலும், நமது சந்தை ரயில்வே அமைச்சரை பாராட்டி 75 புள்ளிகள் ஏறி முடிந்தது.  அதை கெட்ட சகுனமாகவே நினைத்தேன்.  நேற்றைய காலைவரை சந்தை 30 புள்ளிகளில் ஏறி மெள்ள மெள்ள விற்பனை பளு அதிகரிக்கும்போதும் நிறைய பேர் சுதாரித்துக் கொள்ள வில்லை என தெரிந்தது. 150 புள்ளிகள் இறங்கிய பின்னரும் மீண்டும் ஏறிவிடும் என நம்பி வாங்கியவர்கள் நிறைய பேர் என கேள்விபடுகிறேன்.

     இதற்கெற்றாற்போல் நிதிநிலை அறிக்கைக்கு பிறகு சந்தை 5 முதல் 10 சதவீதம் வரை ஏறும் என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.  பொதுவாக நிதிநிலை அறிக்கை வெளியாகும்போது ஒருவித பொது மனநிலைக்கு சந்தை தள்ளப்படும். அன்றைய தினம் கரடிகள் கை ஒங்கியிருந்தால், நல்ல முடிவுகளும் தவறாக எண்ணப்படும்.  காளைகள் சந்தையில் தவறான முடிவுகளும் சரியாக எண்ணப்படும்.

      நிதியமைச்சர் அறிக்கையை படிக்கும்போது வெளியாகும் சின்னச் சின்ன அறிவிப்புகளை வைத்து ஒரு முழு நிதிநிலை அறிக்கையை அளக்க முடியாது.  எதிர்கட்சிகள் பொதுவாக இது ஒரு வெத்துவேட்டு பட்ஜெட் என்பார்கள்.  ஆளுங்கட்சியினர் இது ஏழைகளின் பட்ஜெட் என்பார்கள்.  குறைந்தபட்சம் 24 மணி நேரம் சென்றபிறகு தான் இந்த நிதி நிலை அறிக்கை எவ்வாறு என்பது தெரியும்.  ஒவ்வொரு நிதி அமைச்சரும் தன்னுடைய ஸ்டைலில் சமர்பிக்க வேண்டிய அறிக்கை இது.  மறைமுகமாக அவர் புகுத்தியிருக்கும் சில செய்திகளை அறிய சிறிது கால அவகாசம் கொடுத்தே படிக்கப்பட வேண்டிய அறிக்கை இது.

      நிதிநிலை அறிக்கை படித்தாயிற்று, சந்தையும் ஆடி அடங்கிவிட்டது. அடுத்தது என்ன? என மறந்து விடக் கூடாது.  அடுத்த பனிரெண்டு மாதங்கள் வரை இதன் தாக்கம் எவ்வாறு என்பதை சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டாமா?   இந்த நிதிநிலை அறிக்கை படிப்படியாக சிறிது விரிவாக  எழுதலாம் என்றிருக்கிறேன்.  தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட புதிய வேலை பளுவினால் இணையம் பக்கமே வர முடியாமல் போய்விட்டது.  இருப்பினும் எழுத நேரம் ஒதுக்கி முயற்சிக்கிறேன். 

         தினமும் இங்கே கருத்தினை எதிர்பார்த்து வந்த நண்பர்களுக்கு என் நன்றியையும், என் இயலாமையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

       Thanks for your support, guys!

Advertisements

Entry filed under: Hunter's Mind.

22-06-2009 நிதி நிலை அறிக்கை #1

6 Comments Add your own

 • 1. Rafiq Raja  |  July 7, 2009 at 11:42 am

  நிதிநிலை அறிக்கையை விட, பெட்ரோல் டீசல் விலை உயர்வையே மக்கள் பயங்கர கண்ணோட்டத்துடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள்…. அதன் தொடர்பாக விலைவாசி ஏறி, அது சந்தையை மறைமுகமாக எவ்வகையில் பாதிக்கலாம் என்பதை பற்றியும் உங்கள் அடுத்த பதிவில் முன்னோட்டம் இடுங்கள் வேட்டையரே.

  சொந்த வேலைகளை முடித்து விட்டு புத்துணர்ச்சியுடன் களத்தில் இறங்குங்கள். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

 • 2. Karthikeyan G  |  July 7, 2009 at 3:52 pm

  welcome again…

  🙂

 • 3. DAVID RAJA  |  July 8, 2009 at 1:03 am

  Thank you sir !!!

 • 4. kvrtex  |  July 8, 2009 at 7:32 am

  thank you jhosh.

 • 5. surya  |  July 8, 2009 at 3:54 pm

  Welcome back..

  Keep rocking…

 • 6. rahman  |  July 8, 2009 at 4:07 pm

  உங்களுடைய கட்டுரை மிக பயனுள்ளதாக இருந்தது,மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

July 2009
M T W T F S S
« Jun   Aug »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: