19-06-2009

June 19, 2009 at 8:21 am 2 comments

     First of all, I’m Back (அட அல்ப!)     

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சந்தை எடுத்த வேகம் அசாதாரணமானது என்பது சந்தேகமில்லை.  மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.  எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போடும் இடது சாரிகளின் படுதோல்வி.  சந்தை உற்சாகமடைந்ததில் தவறே இல்லை.  1000 புள்ளிகள். கொஞ்சம் அதிகம்தான். 

      காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் பொருளாதார மந்தம் தொடங்கியது.  அதனை போக்க உலக நாடுகள் அனைத்தும் மிகக் கடுமையாக முயற்சிகள் எடுத்தன.  அமெரிக்க பிரபல நிதி நிறுவனங்கள் தடுமாற தொடங்கின.  பொருளாதார தூண்கள் என நம்பப்பட்ட நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசி கொடுக்க ஆரம்பித்தன.

      ஆனால் கடந்த சில வாரங்களாக பொருளாதார மந்தம் முடிவடைந்தவிட்டதாக உலக சந்தைகள் ஏற ஆரம்பித்தன.  நம் சந்தையோ பறக்க ஆரம்பித்தது.  பொருளாதார மந்தம் என்பது ஏதோ சிலமாதங்கள் வந்து போகிற விஷயம் அல்ல.  பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் வரும் காலங்களுக்கு பிறகே வரக் கூடிய ஒரு தவிர்க்க முடியாத விஷயம். குறைந்த பட்சம் இரு வருடங்களுக்காவது அதன் பாதிப்பு இருக்கும்.

      இந்த பொருளாதார மந்தத்தில் என்ன விசேஷம் என்றால் அமெரிக்க குழுமங்கள் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட ஆரம்பித்தன.  சில தவறுகள் இன்னும் வெளிப்பட வில்லை என்பது குறிப்பிடதக்கது. கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குழப்படிகள் அகல கால் வைத்தது எல்லாம் சேர்ந்து பயங்கர பாதிப்புள்ளாகின.

       எதற்கு இப்போது பழைய கதையெல்லாம்?  கதை இன்னும் முடியவில்லை.  ஒரு திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென்றால் நல்ல கதை வேண்டும்.  அது போலவே ஒரு வலுவான காளைச் சந்தைக்கு மிகவும் அடிப்படையாக ஒரு கதை வேண்டும்.  இந்தியா உலக சந்தையில் மிகப் பெரிய இடத்தை பெறப்போகிறது.  உண்மைதான்.  ஆனால் இன்னும் சில வருடங்கள் ஆகும் அதற்கு.

    நாட்டின் மொத்த உற்பத்தி விகிதத்தை (ஒன்பது முதல் நான்கு வரை) பிரதமர் முதல் அவர் அலுவலக கடைநிலை ஊழியர்வரை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வு பூஜ்யத்தை நெருங்கிவிட்டது.  நான்கு பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் பெட்ரோல் விலை என சேர்த்து கணக்கிட்டு குறைத்து விட்டார்கள்.

    தற்போது பெட்ரோலின் விலை ஏற்றப்பட உள்ளது.  முதல் விளைவு பெட்ரோலின் விலை ஏறிவிடும் ( 🙂 ). பறந்துக் கொண்டிருக்கும் விமான போக்குவரத்து நிறுவனங்களின் பங்கு க்ராஷ் லேண்ட் ஆகிவிடும். விலைவாசி உயர்வு சடாரென மேலேற ஆரம்பிக்கும்.  இதனை தவிர்க்க இப்போதிருக்கும் முழு மெஜாரிட்டி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவுமே முதலில் கசப்பான மாத்திரைகளை சந்தைக்கு கொடுப்பதை தவிர்க்க இயலாது.

     இந்திய நிறுவனங்களில் கேஷ் ப்ளோ என்கிற துட்டு பிரச்சினை வெகுவாக எழுந்திருக்கிறது.  உபரி விஷயங்களை விற்க ஆரம்பித்து பணத்தை திரட்ட ஆரம்பித்திருக்கின்றன. QIP அடிக்கடி இப்போது நீங்கள் கேள்வி படலாம்.  Insider Trading சற்று அதிகமாக உள்ளது.  இவ்விஷயத்தை நன்கு கூர்ந்து கவனிக்கவும். 2000-2004 போன்ற வருடங்களில் புதிய குழுமங்களை தன்னுடன் இணைத்துக் கொண்ட குழுமங்கள் அனைத்தும் பெரிய நிதி சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.  அவற்றில் சில நிப்டி மற்றும் சென்செக்ஸ் பகுதியில் இருப்பதால் இவைகளும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. 

     சரி, மார்க்கெட் அனாலிஸ் பகுதியை ஏன் தொடர்ந்து எழுதவில்லை.  இது போன்ற நேரங்களில் சந்தையில் ஒரு இடைவெளி விடுவது நல்லது என நினைக்கிறேன்.  சந்தையும் எவ்வித டெக்னிகல் பகுதிகளிலும் சிக்காமல் ஆடும்.  ஒரே நாளில் 150 புள்ளிகள் இறங்க, மறு நாளில் 125 புள்ளிகள் ஏறிய சீ-சா ஆட்டம். இந்த மாதிரி சமயங்களில் சந்தையை பற்றி நான் யோசிப்பதேயில்லை.  முன்னரே சொன்னதுபோல் 3500 என்பது தற்போதைய சரியான நிலை.  அதற்கு மேல் சந்தையானது 600 புள்ளிகள் காற்றின் மீது இருப்பது போல இருக்கிறது. 

   சரி, என்ன செய்யலாம்?  ஒதுங்கி இருத்தல் நலம்.  அடுத்த இறக்கம் சந்தையை புதிய பள்ளங்களுக்கு எடுத்து செல்ல வாய்ப்பிருப்பதாக உள்ளூர நினைக்கிறேன்.  இது என் எண்ணம் மட்டுமே.  புதியவர்கள் சந்தையை விட்டு விலகியிருப்பது நல்லது. 

     தின வர்த்தம் செய்பவர்கள் செய்யலாம்.  இன்ஸ்டன்ட் லாட்டரி போல அன்றைக்கே முடிவு தெரிந்து விடுவதால் எந்த பிரச்சினையும் இருக்காது.  கூடுமானவரை டெர்மினல் அருகே இருக்குமாறு பார்ததுக் கொள்ளுங்கள்.

    நீண்ட கால முதலீடு செய்பவர்கள் பொறுத்திருக்கலாம்.  நல்ல விலையில் பங்குகளை கொடுக்க சந்தை காத்திருக்கிறது.  நீங்களும் காத்திருங்கள்.

    இந்த நேரத்தில் நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.  இசை, உடல்நலம், உடற்திறன், சுற்றுலா என எவ்வளவோ இருக்கிறது.  அத்தனையையும் சந்தைக்காக தியாகம் செய்ய வேண்டுமா?  அடுத்த முறை சிக்ஸ்-பேக்குடன் சந்தைக்கு சென்றால் எவ்வளவு பெருமித உணர்வு நமக்கு ஏற்படும்.

     சந்தையின் தினசரி நடவடிக்கைகளை பற்றி எழுதாமல் வேறு சில டெக்னிகல் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என பார்க்கிறேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

Di Di – ரய் இசை பாடல் 22-06-2009

2 Comments Add your own

 • 1. Rafiq Raja  |  June 19, 2009 at 9:05 am

  வெல்கம் பேக் பங்கு வேட்டையரே.

  சந்தையின் அபாய கட்டம் இது என்பது உண்மைதான். புதியவர்கள் ஒதுங்கி இருக்கவும், பழையவர்கள் கவனத்துடன் இருக்கவும் நீங்கள் கூறிய ஆலோசனை சரியான ஒன்று. என்னை பொறுத்த வரை பொறுத்திருந்து வேடிக்கை மட்டும் பார்க்க போகிறேன்.

  இன்னும் எத்தனை நிறுவனங்கள் பணச் சிக்கலில் தவிக்க போகின்றன என தெரியவில்லை. இந்த பணத் தட்டுபாடு இந்த வருடம் முழுவதும் தொடரும் போல. பாரம்பரியமிக்க மற்றும் லாபக்கணக்கில் பலமான டாடா கூட தன்னுடைய சமீபத்திய கோரஸ் விலை வாங்கல் ஒரு தவறான நேரத்தில் நடந்து விட்டதாக கூறி இருப்பதே அதற்கு சான்று.

  இந்த நேரத்தில், சந்தையை அலசுவதை விட்டு விட்டு டெக்னிகல் சமாச்சாரங்களை விவாதிக்கலாம் என்பதற்கு நானும் ஓகே. நிறைய கத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்…. சிக்ஸ் பேக் கிடைக்காமல் போனாலும் 🙂

  காமிக்கியல்

 • 2. sriram  |  June 21, 2009 at 8:38 pm

  welcome back
  with bang
  thanks
  sriram

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: