Archive for May, 2009
15-05-2009
தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. சந்தையோ பெரிய அளவில் ரீயாக்ட் எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் அல்லது பிஜேபி இருவரில் ஒருவரே மெஜாரிட்டியை பெறுவார்கள் எனவும், மூன்றாவது அணியானது சிதறி இவர்களில் யாரையாவது ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அமைச்சர் பதவி பெற்றுக் கொள்வார்கள் எனவும் கருத்துக் கணிப்புகளில் காணப்படுகின்றன.
எது எப்படியோ, எந்த கட்சி ஜெயித்தாலும் தனியாக 200 இடங்களை வென்றாலே நமது பங்கு சந்தை மேலேறி விடும். நாளை பார்க்கலாம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. மூன்றாவது அணி என்று சொல்லிக் கொள்ளும் அணியைத் தவிர. சந்தையின் மிகப் பெரிய பயமே இதுதான். அவை ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என கடைசிக் கட்ட தேர்தல்களின் போதே தெரிந்து விட்டதால் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்பில்லை என தோன்றுகிறது.
இன்றைய உலக சந்தைகள் ஏற்றத்துடன் இருக்கின்றன. நமது சந்தை இன்றும் ஊசலாட்ட சந்தையாகவே காணப்படும். நாளைய முடிவினை வைத்து தொடர்ந்து அடுத்த வாரமும் தொடரலாம். பெரும்பாலும் ஞாயிறன்றே எக்கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிந்துவிடும் என நம்புகிறேன்.
இன்றைய சந்தையானது ஆரம்பத்தில் ஏற்றத்தில் துவங்கி பின்னர் இறங்க வாய்ப்புண்டு. ஊசலாட்டம் அதிகமாக இருக்கும் என நம்புகிறேன். விலகியிருந்து வேடிக்கை பார்ப்பது நல்லது.
Read Disclaimer.
Good Morning to you all!
14-05-2009
ஒருவழியாக தேர்தல் முடிந்து விட்டது. இன்றும், நாளையும் சந்தை வதந்திகளால் அலைகழிக்கப்படும் நிலை இருக்கிறது.
நிலையான ஆட்சியே அமையும் சூழ்நிலை இருக்கிறது என்பது சமீபத்திய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள். சந்தை இதை உள்வாங்கிக் கொண்டு மேல்நோக்கி செல்ல முயலும். இன்றைய உலக சந்தைகள் இறக்கத்துடன் காணப்படுவதால், அதையும் கணக்கில் கொண்டு சந்தை இன்று இறக்கத்துடன் துவங்கவே வாய்ப்புள்ளது.
புதிய நிதி நிறுவனங்கள் வாங்க தொடங்கினால் சந்தை மேலேற வாய்ப்புள்ளது. பிற்பகலுக்கு மேல் இவை நடக்கவும் வாய்ப்புள்ளது. இவ்விரு நாட்களும் சந்தையில் தின வணிகம் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய தருணங்கள். மதிய உணவுக்கு போய் வருவதற்குள் சந்தையின் நிலை தலைகீழாக மாறிவிடலாம்.
குறுகிய கால வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிதானமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். இன்றைய சந்தை ஊசலாட்ட சந்தை. சில எதிர்பார்ப்புகளை முறியடிக்கக்கூடிய சந்தை என நினைக்கிறேன்.
கவனமாக இறங்குங்கள்.
Read Disclaimer.
Good Morning to you all!
12-05-2009
தொடர்ந்து இரு நாட்களாக சந்தையில் லாபத்தினை உறுதி செய்வது நடந்துக் கொண்டிருக்கிறது. சந்தையும் கிட்டதட்ட 150 புள்ளிகளுக்கு மேலாக இழந்திருக்கிறது. நேற்றைய தினம் அமெரிக்க சந்தையும் 150 புள்ளிகளை இழந்திருக்கிறது. ஆனால் தற்போது ஆரம்பித்திருக்கிற ஆசிய சந்தைகள் ஒரளவு ஏற்றத்துடன் ஆரம்பித்திருக்கின்றன.
நமது சந்தை இன்று ஏற்றத்துடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த வாரத்தின் கடைசி இரு நாட்களில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலையே நிலவுகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் பார்ட்டிசிபேடரி நோட்ஸ் தொடர்பான தங்கள் அதிருப்தியை அமைய போகும் புதிய அரசாங்கத்திடம் வெளி காட்டுவார்கள் என நினைக்கிறேன்.
அமையவிருக்கும் புதிய அரசாங்கமானது நல்ல மெஜாரிட்டியில் அமையும் என கணித்திருக்கின்றார்கள். அது சந்தைக்கு ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் புதிய அரசு அமைந்த உடன் சந்தையானது சிறிதளவு இறங்கி நாளடைவில் ஏற்றம் காணும் என்றே நான் நினைக்கிறேன்.
இன்றைய தினம் முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் ஏதுமில்லை. சந்தையில் ஆரம்பக் கட்ட விற்பனையை வாங்குபவர்கள் ஈடு செய்வார்களா என்பதை பொறுத்தே அமையும். ஆதலால் முதல் 30 நிமிடங்கள் மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Read Disclaimer!
Good Morning to you all!
Recent Comments