28-05-2009
May 28, 2009 at 8:08 am 5 comments
அமெரிக்க பொருளாதாரத்தில் ஆட்டோ மொபைல்ஸ் துறை ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்துறையை நம்பி ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் டெட்ராய்ட்டில் மட்டும் அல்ல நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன.
நம் கிராமத்தில் 500 குடும்பங்கள் உள்ளன என வைத்துக் கொண்டால் கார் வைத்திருப்பவர்கள் என பார்த்தால் 20 கூட தேறாது. ஆனால் அங்கேயோ 200 குடும்பங்கள் என வைத்துக் கொண்டால் குறைந்தபட்சம் 600-க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும். அது சார்ந்த தொழில்களான கார் மெக்கானிக் ஷாப், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் என ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் துறை அது. பள்ளியிறுதியை முடிக்கவில்லையென்றாலும் காரை துடைக்கக் கற்றுக் கொண்டு வேலையில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 கார்களாவது சேவைக்கு வரும்.
ஒரு கிராமத்திலேயே இவ்வாறு என்றால் நகரங்களில் இந்த துறையை நம்பி ஏகப்பட்ட சேவை மையங்கள் இருக்கும். அங்கே பல்லாயிரக்கணக்கானோர் இது தொடர்பான சேவையை அளிக்கின்றனர். முதல் அடி ஜப்பான் நாட்டு கார்களின் இறக்குமதியால் விழுந்தது. பின்னர் சமாளித்துக் கொண்டது என்றாலும், அடுத்த அடி நீண்ட நாள் கழித்து இப்போது விழுந்திருக்கிறது. இருப்பினும், ஜெனரல் மோட்டார் இத்துறையில் ஒரு முக்கிய குழுமம். இவர்களின் கார்கள் அமெரிக்காவில், உலகில் பல பகுதிகளில் விற்பனைக்கு உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவின் மிகப் பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார் திவாலாகும் நிலையில் உள்ளது. ஒரு கார் கம்பெனிதானே என நமக்கு தோன்றினாலும், அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் மிக பழைமையான குழுமம் இந்த நிலைக்கு வந்தது பற்றி முதலீட்டாளர்கள் வட்டத்தில் ஒரு அதிர்வுகள் கண்டிப்பாக இருக்கும்.
ஒரு உதாரணத்திற்கு, உதாரணத்திற்கு மட்டுமே, நம் தகவல் தொழில் நுட்பத் துறையில் மகுடமாக விளங்கும் இன்போஸிஸ் இந்நிலைக்கு தள்ளப்பட்டால் நம்மில் பலர் தகவல் தொழில் நுட்பத் துறையில் இல்லையென்றாலும், நம் உணர்வுகள் எவ்வாறு பாதிக்குமோ அந்நிலையில்தான் அங்கே அமெரிக்க பங்கு சந்தையானது உள்ளது.
இது தொடர்பாக அக்குழுமத்தை காப்பாற்றும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஒருவேளை காப்பற்றவும் படலாம். ஆனால் அது ஏற்படுத்திய அதிர்வுகள் இருந்துக் கொண்டேதான் இருக்கும். எத்தனை குழுமங்களைதான் அமெரிக்க அரசாங்கம் காப்பாற்றும்? இதற்கு முன்னால், வங்கிகள், இப்போது ஆட்டோமொபைல், அப்புறம்? இது ஒரு தொடர்கதையாகவே செல்ல வாய்ப்புள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அமெரிக்க சந்தையானது கரடிகள் சந்தையில் சிக்கி, பொருளாதார மந்தம் சூழ்ந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பொருளாதார மந்தம் முடிந்தது என அறிக்கையெல்லாம் விடப்பட்டு சந்தைகளெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மிகப்பெரிய குழுமம் இந்நிலைக்கு வந்திருக்கிறது என்றால்…….
உண்மையில் பொருளாதார மந்தமானது இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்து விட்டதா என்பதை பற்றி இன்னொரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.
வட கொரியா பற்றி தனியாக எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும் தற்போதைய நிலையில் முக்கிய விஷயமாகவே படுகிறது.
Entry filed under: Market Analysis.
1.
Rafiq Raja | May 29, 2009 at 11:02 am
பொருளாதார மந்தம் குறைவது போல் தெரிவது ஒரு மாயைதான். எப்படியும் இந்த வருடம் முடியும் வரை அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். பல நாடுகளில் புதிய அரசாங்கங்கள் பதவிக்கு வந்திருப்பதால், முடிவடைந்தது போல ஒரு பிரம்மை தோற்றம் தான் இருக்கிறது.
வட கொரியா பற்றி தனியாகவா, கட்டாயம் எழுதலாம். மாமாவுக்கே தண்ணீ காட்ட ஒரு நாடு இருக்கு என்று சந்தோஷம் தான். 🙂
ÇómícólógÝ
2.
shankar visvalingam | May 31, 2009 at 12:27 pm
நண்பரே,
அமெரிக்காவில் மட்டுமன்று, ஐரோப்பாவிலும் கூட தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டோமொபைல் துறையே.
இதில் வேடிக்கை என்னவென்றால் பிரான்சில் உற்பத்தி செலவு அதிகம் என்று முன்பு சில தொழிற்சாலைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித வலு மலிவான விலையில் கிடைக்கும் நாடுகளிற்கு மாற்றினார்கள்.
தற்போது கட்டாய விடுப்பு, ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி, 2 வாரம் தொழிற்சாலையை மூடல் என முடிவுகளை நிர்வாகம் எடுக்க திகைத்துப் போயிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
ஆட்டோமொபைல் துறையுடன் நெருங்கிய சம்பந்தம் கொண்ட டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மற்றும் வாகன உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என தாக்கம் ஒர் சங்கிலி போல் கீழிறங்கி செல்கிறது. continental எனப்படும் டயர் உற்பத்தி நிறுவனத்தின் விவகாரத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
வடகொரியா பற்றி எழுதுங்கள், ஆவலுடன் காத்திருக்கிறேன்.
3.
Rafiq Raja | June 4, 2009 at 11:19 am
ஆட்டோமொபைல் முன்னோடியான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமே துண்டை போட்டு கொண்டு திவாலாகி விட்ட நிலையில் இருக்கிறது உலக பொருளாதாரம்.
1984 ல் இருந்து வீழ்ச்சியில் சென்று கொண்டிருந்த அந்த நிறுவனத்தை இத்தனை வருடங்கள் சால்ஜாப்பு செய்து நடத்தியவர்களை சும்மா விடலாமா? எத்தனை முதலீட்டாளர்களுக்கு ஆப்பு வைத்து விட்டார்கள்.
முதலாளித்துவ ஆளுமைக்கு பலி அப்பாவி நடுத்தர மக்களின் கணவுகள் தாம். நம் நாட்டில் ஜெனரலை நம்பி பல தொழில்நுட்ப கம்பனிகள் ஆயிர கணக்கில் வேலைக்கு எடுத்த ஆட்களின் நிலைமை என்னவோ…? கடவுள் விட்ட வழிதான் போல.
60 சதவிகித உரிமையாளர்கள் ஆகி விட்டதால். அமெரிக்க அரசாங்கமே கார்களை கூவி விற்கும் நிலைதான் இனி 🙂
இந்த களேபரத்தில், நமக்கு ஒரு லட்ச ரூபாயில் டாடா நானோ போல, ஏதாவது மெர்சிடிஸ் பென்ஸ் கார் கிடைக்குதான்னு பார்க்கனும் 🙂 மார்கட்டுக்கு காய்கறி வாங்க உபயோகபடுத்தலாமே 😉
ÇómícólógÝ
4.
V.SURESH, SALEM 9842551176 | June 11, 2009 at 8:55 am
We expect your daily updates on share market levels
5.
மோகன். | June 14, 2009 at 10:50 pm
yahoo id: globeknr
http://www.aathiinvestors.blogspot.com
வாழ்த்துகளுடன் மோகன்.