Archive for May 18, 2009

18-05-2009

     எதிர்பார்த்தது போல் மூன்றாவது அணிக்கு பெருத்த தோல்வியே கிட்டியது.  சந்தைக்கு முக்கிய உற்சாகத்தை அளிக்கக்கூடிய மற்றொரு செய்தி இடதுசாரிகளின் தோல்வி.  முந்தைய அரசே மீண்டும் பதவியேற்பதால் தொழில் சார்பான கொள்கைகளில் பெருத்த அளவில் மாற்றம் வராது என நம்பலாம்.

        மத்திய அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என நினைக்கிறேன்.  குறிப்பாக, நிதி மற்றும் வர்த்தகம் துறைகளில்.  இன்றைய உலக சந்தைகள் இறக்கத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. நமது சந்தையும் அவ்வாறே ஆரம்பிக்கும் என்றால் யாரும் நம்பபோவதில்லை.  தேர்தல் முடிவுகளின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது.  சந்தையின் துவக்கம் ஏற்றத்துடன் அமையும் என அனைவருமே எதிர்பார்க்கின்றார்கள்.  விற்பதற்கு ஆள்கள் குறைவாக உள்ளதாலும், வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும் துவக்கம் அதிகப் புள்ளிகளில் துவங்கலாம்.

      இந்த உற்சாகம் 200 முதல் 300 புள்ளிகள் வரையே நீடிக்கும். இன்னும் இரு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கலாம்.  பின்னர் பழைய கதைதான்.   உலக சந்தைகளில் குறிப்பாக அமெரிக்க சந்தையில் ஒரு சரிவினை இம்மாதத்தில் எதிர்பார்க்கிறேன்.  அது உலக சந்தைகளை பாதிக்கும்.  நம் சந்தை எவ்வாறு ரீயாக்ட் செய்யும் என்பது தெரியவில்லை.

      சந்தையானது தற்போதைய நிலையில் 3500 என்ற நிலையே நல்ல சப்போர்ட் நிலையாக உள்ளது.  மீண்டும் சந்தையானது இந்நிலையை சோதிக்கும்போதுதான் சந்தையின் உண்மையான நிலை தெரியும்.  அதுவரை நமது சந்தை காளைகளின் கைகளில்தான் இருக்கும்.

     காளைகளின் ஒட்டத்தில் இதுவரை நான் கவனித்தது என்னவென்றால், முதலீட்டாளர்கள் மற்றவர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை. இன்றைக்கு சந்தை ஏறும் அப்புறம் என்ன? என்ற மனநிலைதான் இருக்கும்.  சந்தையானது கரடிகளின் பிடியில் சிக்கியவுடன் எல்லோர் அறிவுரைகளையும் கேட்க ஆரம்பிப்பார்கள். 

    எனவே இன்னும் சில தினங்களுக்கு  ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் இருந்தொலொழிய புதியதாக எழுதுவதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதால் இப்பகுதியில் எழுதபோவதில்லை. 

     இது ஆரம்பகட்ட காளைகள் சந்தை இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  சந்தையின் மொத்த பிடியும் இன்னும் கரடிகள் கைகளில் உள்ளது.  இந்த உற்சாக குமிழ் உடையும்போது கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும்.  கவனமாக வணிகம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

Read Disclaimer!

Good Morning to you all!

May 18, 2009 at 8:52 am 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
May 2009
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031