Archive for May 12, 2009
12-05-2009
தொடர்ந்து இரு நாட்களாக சந்தையில் லாபத்தினை உறுதி செய்வது நடந்துக் கொண்டிருக்கிறது. சந்தையும் கிட்டதட்ட 150 புள்ளிகளுக்கு மேலாக இழந்திருக்கிறது. நேற்றைய தினம் அமெரிக்க சந்தையும் 150 புள்ளிகளை இழந்திருக்கிறது. ஆனால் தற்போது ஆரம்பித்திருக்கிற ஆசிய சந்தைகள் ஒரளவு ஏற்றத்துடன் ஆரம்பித்திருக்கின்றன.
நமது சந்தை இன்று ஏற்றத்துடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த வாரத்தின் கடைசி இரு நாட்களில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலையே நிலவுகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் பார்ட்டிசிபேடரி நோட்ஸ் தொடர்பான தங்கள் அதிருப்தியை அமைய போகும் புதிய அரசாங்கத்திடம் வெளி காட்டுவார்கள் என நினைக்கிறேன்.
அமையவிருக்கும் புதிய அரசாங்கமானது நல்ல மெஜாரிட்டியில் அமையும் என கணித்திருக்கின்றார்கள். அது சந்தைக்கு ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் புதிய அரசு அமைந்த உடன் சந்தையானது சிறிதளவு இறங்கி நாளடைவில் ஏற்றம் காணும் என்றே நான் நினைக்கிறேன்.
இன்றைய தினம் முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் ஏதுமில்லை. சந்தையில் ஆரம்பக் கட்ட விற்பனையை வாங்குபவர்கள் ஈடு செய்வார்களா என்பதை பொறுத்தே அமையும். ஆதலால் முதல் 30 நிமிடங்கள் மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Read Disclaimer!
Good Morning to you all!
Recent Comments