Archive for May 7, 2009
07-05-2009
நேற்றைய தினம் சந்தை இலாபம் உறுதி செய்தலினால் சிறிதளவு இறங்கியே முடிந்திருந்தது. நேற்றைய அமெரிக்க சந்தை 100 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. தற்போதைய ஆசிய சந்தைகளும் ஏற்றத்துடனேயே இருக்கின்றன.
அவுட்சோர்ஸிங் தொடர்பாக ஒபாமா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அவர் நாடு இருக்கும் நிலையில் இவ்வறிவிப்பு புரிந்துக் கொள்ளக் கூடியதே. நமது நாட்டின் தகவல் தொழில்நுட்ப குழுமங்கள் எவ்வாறு இதை சமாளிக்கப் போகின்றன என தெரியவில்லை. இதுவரை செய்தித்தாட்களில் இது பற்றிய உண்மை நிலவரம் தெரிவிக்கப்படவில்லை. சமாளித்து விடலாம் என்றே வருகின்றது. உண்மை நிலவரம் அடுத்த காலாண்டு அறிக்கைகளில் எதிரொலிக்கலாம்.
ம்யூட்சுவல் நிதி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விற்க தொடங்கினால் சந்தை மெல்ல மெல்ல சரிய தொடங்கலாம். இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைய லாபிக்கள் நடைபெறும் என தெரிகிறது. இது எவ்வளவு பாதிக்கும் என்பதை வரும் தினங்களில் பார்க்கலாம்.
இன்றைய தினம் இதுவரை பாஸிட்டிவ்வாகவே இருக்கிறது. சந்தையானது துவக்கத்தில் ஏற்றத்துடன் துவங்க வாய்ப்புண்டு. 3700 என்ற நிலையை தொட வாய்ப்புண்டு.
தின வணிகர்கள் மற்றும் குறுகிய கால வணிகர்கள் மட்டும் மிகமிக எச்சரிக்கையாய் சந்தையை அணுகுவது நல்லது. சந்தையின் ஒவ்வொரு ஏற்றத்திலும் உள்ளூர பயம் இருப்பதை உணரமுடிகிறது. ஒவ்வொரு ஏற்றத்தையும் அப்நார்மலாகவே எடுத்துக் கொள்கிறோம். மே 18 வரை சந்தையின் நிலையை இவ்வாறே இருக்கும் என அறுதியுட்டு கூற முடியாத நிலைதான் உள்ளது.
Read Disclaimer
Good Morning to you all!
Recent Comments