Archive for May 5, 2009
05-05-2009
நேற்றைய சந்தையில் காளைகள் தங்கள் பலத்தினை நிருபித்தனர். நேற்றைய அமெரிக்க சந்தையும் நல்ல ஏற்றத்துடனே முடிந்தது. இந்த வாரம் முழுக்க சந்தை இவ்வாறாகவே இருக்குமென பெரும்பாலான ஊடகங்கள் சொல்கின்றன.
கரடிகளின் பிடியிலிருந்து விடுபட்டு மெள்ள மெள்ள காளைகளின் கைகளுக்கு சந்தை மாறிக்கொண்டிருக்கும்போது சந்தையை மிக எச்சரிக்கையாக அணுகுவது நல்லது. கரடிகள் சந்தையில் கூட சிறு முதலீட்டாளர்கள் இன்னும் சிறிது இறங்கலாம் என காத்திருப்பார்கள். காளைகள் சந்தையில் அந்த பொறுமை எல்லாம் இருக்காது. நாளைக்கே 10, 20 ரூபாய் ஏறிவிடும் என பங்குகளை விரட்டி வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.
வாங்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டால் சிறிது சிறிதாக வாங்க முயற்சி செய்யுங்கள். 3800 என்ற நிலை வரை சந்தை செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேல் செல்ல உலக காரணிகளை விட உள்ளூர் காரணிகளே முக்கியம். அந்த உள்ளூர் காரணிகளுக்கு வரும் புதிய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள்தான் காரணமாக இருக்கும். நிலையான அரசு அமையும் பட்சத்தில் ஜூலை மாதத்திற்கு பின்னரே ஒரு உறுதியான நிலை சந்தையில் நிலவ வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.
இன்றைய சந்தை துவக்கத்தில் சிறிதளவு இலாபத்தினை உறுதி செய்வது நடக்கலாம். தின வணிகர்கள் லாங் பொஸிஷன் என்றால் சந்தையானது ஆரம்பத்தில் உயர்ந்து, நண்பகல் நடுவே ஒரு சிறிய தடுமாற்றம் நடக்கலாம்.
சந்தையில் காத்திருந்து நுழையவும்.
Read Dislclaimer.
Good Morning to you all!
Recent Comments