Fundamental Analysis #Capital : What is Q.I.B?
May 4, 2009 at 7:27 pm 10 comments
முதலில் நான் மறந்து போய்விடுவதற்குள் Q.I.B. என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். Qualified Institutional Buyer என்பது தான் அர்த்தம்.
நிப்டியில் இருக்கும் யுனிடெக் குழுமம் Q.I.Bக்கு சில இலட்சம் பங்குகளை விற்றது என வணிகசெய்தித்தாட்களில் படித்திருப்போம். இதனால் அப்பங்கின் விலை ஏறுமா? அல்லது இறங்குமா? இது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்பதற்கு முன்னால் Q.I.B என்றால் என்ன என்பதை சற்று விளக்கமாக பார்ப்போம். இனிவரப்போகும் காலங்களில் இவர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதால் இவர்களை பற்றி அடிப்படையாக தெரிந்துக் கொள்ளளலாம். மிக அடிப்படையாகவே விளக்க முயற்சிக்கிறேன். தெரிந்தவர்கள் விலகிக் கொள்ளலாம்.
ஒரு எளிய உதாரணத்தின் மூலமாக புரிய வைக்க முயற்சி செய்கிறேன்.
நீங்கள் கல்லுாரியில் படிக்கும் ஒரு கட்டழகு வாலிபர் (குழுமம்) என நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு புதிய தெலுங்கு படம் பக்கத்தில் உள்ள மல்ட்டிப்ளக்ஸில் வந்திருக்கிறது. நீங்கள் படித்துக் கொண்டிருப்பதால் உங்களிடம் ரொக்கம் இருக்காது (வேலைவெட்டி எதுமில்லாமல் இருப்பதால்). நீங்கள் அப்படத்தை பார்க்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள் (குழுமத்தின் ஆரம்ப கட்ட முயற்சிகள்).
உங்கள் பெற்றோர்களிடம் பணம் கேட்கின்றீர்கள். உடனே கொடுத்து விடுவார்களா? அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டுமல்லவா? அந்த தெலுங்கு திரைப்படம் (தலைப்பு : ” நீ வான்னு சொன்னா நாந் வரமாட்டேன்னா சொல்லப்போறன்” என்கிற மாதிரி இருக்கும்) உங்களின் மேற்கல்வி தொடர்பாக எவ்வாறு உபயோகமாக இருக்கும் என்பதை விளக்கி சொல்லி, பணமும் பெற்று விடுகிறீர்கள் (இதுதான் ஐபிஓ).
உங்களை பார்த்து ரொம்ப நாட்களாக ஒரு மாதிரி சிரித்துக் கொண்டிருக்கும் உங்கள் காலேஜில் படிக்கும் ஒரு பெண் தீடிரென உங்கள் அருகில் வந்து, படபடவென கண்களை சிமிட்டிக் கொண்டே தானும் அப்படத்தை பார்க்க விரும்புவதாகவும் கூட்டிட்டுப்போ என்கிற ரீதியில் உங்களிடம் சொல்கிறாள். (புதிய சந்தர்ப்பங்கள் வருங்காலத்தில் இலாபத்தினை அள்ளித் தரக்கூடிய சந்தர்ப்பங்கள்)
உங்களிடம் இருக்கும் பணம் போதாது (மூலதனம்) என்ற நிலையில் இந்த நல்ல சந்தர்ப்பதை நழுவவிடக் கூடாது என முடிவு செய்து மேற்க்கொண்டு கொஞ்சம் பணம் (கூடுதல் மூலதனம்) திரட்டும் முயற்சியில் இறங்கி விடுகிறீர்கள்.
உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் :
1) பெற்றோர்களிடமே மீண்டும் பணம் கேட்பது (ரைட்ஸ் இஷ்யூ).
இதில் சில பாதகங்கள் உள்ளன. நீங்கள் கடந்த செமஸ்டரில் நல்ல மதிப்பெண்கள் (காளைச் சந்தை) எடுத்திருந்தீர்களானால் தைரியமாக கேட்கலாம். உங்களை பற்றிய சில சரியான வதந்திகள் (குழுமத்தை பற்றிய வதந்திகள்) ‘எதிர்த்த வீட்டு கார்த்தியோட சேந்துக்கிட்டு தெரு முனையில சிகரெட் பிடிக்கிறியாமே?’ ஏகப்பட்ட கேள்விளுக்கு (செபி கேட்கும்) பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
2) உங்கள் கைக்கடிக்காரத்தினை அடகு வைத்தல் அல்லது விற்றல் (நிறுவனர் பங்குகளை அடகு வைத்தல், வாரண்ட் வெளியிடுவது)
3) உங்கள் நண்பனின் கைக்கடிக்காரத்தினை அடகு வைத்தல் (சில குழுமங்கள் இது மாதிரியும் செய்திருக்கின்றன அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்)
4) வேறு ஒரு பசையான பார்ட்டிக்கிட்ட நிலைமையை சொல்லி பதிலுக்கு வேற ஏதாவது பண்றேன் (உன் ஆளுக்கு லவ் லட்டரு நான் கொடுக்குறேன், பரிட்சையில் பிட்டு தயாரித்து தரேன் இது போன்ற உதவிகள்) என வாக்குறுதி கொடுத்து பணம் வாங்குதல். இந்த பசையான பார்ட்டித்தாங்க Q.I.B.
இந்த உதாரணம் மேலும் மோசமான கட்டத்திற்கு போகும்முன் நிறுத்தி விட்டு, இவர்களால் என்ன இலாபம் என பார்க்கலாம்.
பேருக்கேற்றபோல் ஆள் பசையான பார்ட்டி என்பதால் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையிருக்காது. பார்ட்டியும் இது போன்ற விஷயத்தில் கெட்டிக்கார ஆளுங்கறதால டக்குன்னு விஷயத்தை புரிஞ்சிக்கும். அழகான பொண்ணே வந்து சினிமாவுக்கு கூப்பிடுதுன்னா சும்மாவா? நல்ல சந்தர்ப்பம் அல்லவா?
பெற்றோர்களுக்கும் (முதலீட்டாளர்களுக்கும்) நிறைய விளக்க வேண்டியதில்லை. குறைந்த கேள்விகள் (செபியின் விதிகள் அவ்வளவாக கடுமையாக இந்த விஷயத்தில் இருப்பதில்லை).
கடுமையான விதிகள் இதற்கு வேண்டுமா? எவ்வாறு கூடுதல் முதலீட்டினை திரட்டுக்கிறார்கள்? இதனால் குழுமத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பங்கு சந்தையில் உடன் ரீயாக்ஷன் எவ்வாறு இருக்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அடுத்த பகுதியில் இன்னும் விளக்கமாக பார்க்கலாம்.
Entry filed under: Fundamental Analysis.
1.
பங்குவணிகம் | May 4, 2009 at 7:43 pm
நல்லா வந்திருக்கு…வழக்கமான உங்களின் உற்சாகம் பொங்கும் நடையுடன்….தொடருங்கள்.
தமிழக வாக்காளர்களை QIB ஆக கருதலாமா? விளக்கினால் உங்களுக்கு புண்ணியமாய் போகும் 🙂
2.
Rafiq Raja | May 4, 2009 at 7:57 pm
அய்யோ அண்ணாத்தே… எனக்கு ஏதோ கொஞ்சம் நஞ்சம் புரிஞ்சிருந்ததும் இப்போ புரியாம போயிடுச்சே…. இப்ப நான் என்ன பண்ண…. அவ்வ்வ்வவ……… 🙂
3.
sharehunter | May 4, 2009 at 10:49 pm
பங்கு வணிகம்
எனக்கு தர்ம அடி வாங்கிக் கொடுக்க உங்களுக்கு அவ்வளவு ஆசையா? 🙂
Rafiq,
அண்ணாச்சி, எது புரியலைன்னு சொன்னா நாங்களும் கேட்டு வைச்சுப்போம். 🙂
4.
shankar visvalingam | May 5, 2009 at 2:45 am
கொல்லாமல் விட மாட்டேன் – புதிய காப்பி
உற்சாகத்துடன் கொல்லுங்கள்
5.
rajendrann | May 5, 2009 at 10:26 am
ரொம்ப இயல்பா பட்டையா கீளபி சூப்பர்
6.
mbchandar | May 5, 2009 at 1:58 pm
//உன் ஆளுக்கு லவ் லட்டரு நான் கொடுக்குறேன்,//
இந்த மாதிரி பன்னா அவன் என்னுடைய ஆள தள்ளிகிட்டு போக மாட்டானா? 🙂
நீங்கள் சொல்ல வந்தது கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது.
7.
Jaffer | May 5, 2009 at 2:42 pm
இப்படி சொந்த கதையோடு சேர்த்து புரியறமாதிரி சொன்னால்தானே டெக்னிக்கல் (Q.I.B) புரியும். தொடரட்டும்…
8.
nr | May 5, 2009 at 4:12 pm
நல்லா வந்திருக்கு
9.
ரஃபிக் ராஜா | May 5, 2009 at 4:18 pm
// கடுமையான விதிகள் இதற்கு வேண்டுமா? எவ்வாறு கூடுதல் முதலீட்டினை திரட்டுக்கிறார்கள்? இதனால் குழுமத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பங்கு சந்தையில் உடன் ரீயாக்ஷன் எவ்வாறு இருக்கும்? //
அட இத நான் கேக்கலீங்கோ,, அத தான் தெள்ள தெளிவா சொல்லிட்டு இருக்கீங்களே…. நான் கேக்குறது….
// அழகான பொண்ணே வந்து சினிமாவுக்கு கூப்பிடுதுன்னா சும்மாவா? நல்ல சந்தர்ப்பம் அல்லவா? //
இதுக்கு அடுத்த பதிவுல பதில் சொல்லுங்கோ…. அதான் குழம்பி போய் இருக்கேன்.
10.
vivek | May 6, 2009 at 3:09 pm
Really wonderful explanation. Wonderful thanks