தேர்தல் பட்டங்கள் !
May 2, 2009 at 10:16 am 6 comments
நம் மாநிலத்தில் இந்த மாதம் தேர்தல் வருகின்றது. வீட்டின் நிலவறையில் பலநாட்களாக செய்தித்தாட்களை படிக்காமல் இருந்தால் கூட உங்களால் இப்போது உணர முடியும். ஆடித் தள்ளுபடி, அட்சய திரிதியை போல தேர்தல் காலங்களிலும் சில வியாபாரங்கள் கொடி கட்டி பறக்கும்.
இந்த காலத்தை உபயோகப்படுத்தி வருமானம் பார்க்கலாம் என உத்தேசித்துள்ளேன். அதற்கு முன் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் கண்டுபிடித்துக் கொள்வது நல்லது.
இந்த தேர்தலில் முக்கியமான பங்கு வகிப்பது எது?
1) கட்சிக் கொடிகள் (என்னிடத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் வசதிகள் இல்லை)
—–இல்லை.
2) வண்ண போஸ்டர்களா? (என்னிடத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களும் இல்லை)
—–இல்லவே இல்லை)
3) பட்டங்கள் (இதற்கு எதுவுமே, எதுவுமே தேவை இல்லை)
—மிகச் சரியான பதில்.
எனவே தேர்தலை முன்னிட்டு சகல கட்சிகளும் பொதுவாக சில பட்டங்களை உருவாக்கி இங்கே அளித்துள்ளேன். தேவைப்படுவோர் உபயோகப்படுத்திக் கொண்டு, இந்த ஏழைக்கு ஒரு சிறிய அன்பளிப்பினை அளித்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
1) சங்க தமிழின் சகாவே!
– இந்த பட்டத்தினை இளைஞர்களும் பயன்படுத்தலாம். பள்ளி தேர்வில் தமிழில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் இதை பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பு.
2) வரலாற்றை மாற்றி எழுதிய புவியியலே!
– பட்டங்களை ஆராயக்கூடாது அனுபவிக்கணும் என்பது மூத்தோர் சொல்.
3) ஆசியாவின் அடைக்கலமே!
– கொஞ்சம் க்ளோபல் டச் வேண்டுமென்றால்
4) சீனாவின் சிம்ம சொப்பனமே!
– பாராளுமன்ற தேர்தல் என்பதால் மற்றொரு க்ளோபல் டச். சீனர்களுக்கு தமிழ் தெரியாது என்பது உலகறிந்த விஷயம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
5) பாராளுமன்ற பாறையே!
– இதை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு பயன்படுத்தலாம்.
6) காவிரியின் தகப்பனே!
– இது சமயத்தில் வேறுவிதமான அர்த்தத்தினையும் அளிக்கக்கூடியது. கவனமாக உபயோகப்படுத்தவும்.
7) தமிழ்நாட்டின் தர்மதுரையே!
– கேக்கும்போதே சும்மா அதிருதுள்ளே!
8) இசை தமிழின் நாடகமே !
9) நாடகத் தமிழின் இசையே!
– வந்து.. அதாவது தமிழை இரண்டோ மூன்றாகவே பிரிக்கிறார்கள். அதான்.
இப்பட்டங்களை வலைப்பதிவர்களும் பயன்படுத்தலாம் என்றும், அதற்கு பட்ட ஆசிரியரின் முன் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
Entry filed under: நகைச்சுவை.
1.
கிங் விஸ்வா | May 2, 2009 at 11:48 am
என்னிடமும் சில பல பட்டங்கள் உள்ளன.டிரை செய்து பாருங்கள்.
தர்மத்தின் தர்மனே,
பிரான்சின் புயலே
துரதிர்ஷ்டத்தின் அதிர்ஷ்டமே,
தீமையின் நன்மையே,
இப்படி சொல்லிக்கிடே போகலாம்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
2.
shankar visvalingam | May 2, 2009 at 2:43 pm
1-பாண்டி பஜார் மியஷகி
2-உங்கள் அன்பின் அரசன்
3- யாருப்பா காவிரின்னு என் மகள் பெயரைச் சொல்லி கிண்டல் பண்ணுறது. அவளைக் கட்டிக்கிடுங்க சந்தோஷமா அனுப்பி வைக்கிறன். இத விட்டுட்டு பட்டம் கிட்டம் விட்டீங்க, மாஞ்சா போட்டு கயித்த அறுத்திடுவன்.
உற்சாகத்துடன் தொடருங்கள்
3.
rajendrann | May 2, 2009 at 2:45 pm
பதிவிற்கு நன்றி…. பணி தொடர வாழ்த்துக்கள்
by
dmkpmkdmdkcongvcimmtmkaidmk
rajendrann
4.
ரஃபிக் ராஜா | May 3, 2009 at 11:20 am
கலக்கி அடியுங்கள் வேட்டையரே.,.. ஏதாவது அரசியல் கட்சிக்கு மேடை பேச்சு வசனம் எழுதி குடுக்க நீங்கள் உதவலாம்…. ஹி ஹி ஹி….
ÇómícólógÝ
5.
Jaffer | May 3, 2009 at 10:50 pm
ஜோஷ் சார்,
இனிமேல் வாராவாரம் இதுபோல ஏதாவது கலக்கல் பதிவு எழுதவும்.
என்றும் அன்புடன்,
ஜாஃபர்.
6.
Surya | June 25, 2009 at 1:12 pm
தூள்…