Archive for April 29, 2009
29-04-2009
இம்மாதத்தின் ப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் முடிவடையும் நாள். மாதத்தின் கடைசி நாளும் கூட. இது போன்ற சமயங்களில் சந்தை இவ்வாறு தான் இருக்கும் என தெளிவாக கணிக்க இயலாது. எனினும், உலக சந்தைகளில் தற்போது ஏற்பட்டு வரும் சுணக்கத்தை பார்க்கும்போது (குறிப்பாக அமெரிக்க சந்தை) இது நமது சந்தையையும் பாதிக்கும் என தெரிகிறது.
டோ 8000 என்ற நிலையை தாண்டி சில வாரங்கள் ஆகியும் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. ஒரு நல்ல கெட்ட செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறாற்போல தெரிகிறது. அது கிடைத்ததும் மீண்டும் பின்னோக்கி செல்ல வாய்ப்பு அதிகம்.
இன்றைய சந்தையை பொறுத்த வரையில் தின வணிகர்களும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்தை. சிறு முதலீட்டாளர்கள் இன்னும் ஒரு வாரம் வரையிலாவது ஒதுங்கி இருப்பது நல்லது.
நிப்டி பங்குகளில் நிறைய Over Bought Zone இருக்கின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவன பங்குகள்.
பொறுமை. பொறுமை. பொறுமை. தற்சமயம் இதுதான் முக்கியம். (நான் சாந்தி சாந்தி சாந்தி என எழுதலாம் என்றிருந்தேன். உடனே யார் அந்த சாந்தி என நிறைய பின்னுட்டங்கள் வர வாய்ப்பிருப்பதால் மாற்ற வேண்டியதாகிவிட்டது.)
Read Disclaimer!
Have a good day!
Recent Comments