21-04-2009

April 21, 2009 at 7:36 am 4 comments

     நேற்றைய தினம் ஐரோப்பிய சந்தைகள் சரிந்துக் கொண்டிருந்தபோதிலும், அமெரிக்க டோவின் ப்யூச்சர்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டும், நம் சந்தை அவ்வளவாக ரீயாக்ட் செய்யவில்லை. 

      மத்திய அரசின் கடைசி நாட்கள் எண்ணிப் பட்டுக் கொண்டிருக்கும்போது, சந்தையானது 7 சதவீதம் வளர்ச்சி என்ற கோஷத்திற்கேற்க மேலேறிக் கொண்டிருக்கிறது.  நேற்றைய தினம் அமெரிக்க சந்தையானது 280 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்கு நிலையிலேயே இருக்கின்றன.

     இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு நமது சந்தை இறக்கத்துடன் தொடங்கும் என்றாலும், சில ‘புதிய காளைகள்’ சந்தைக்கு வந்துள்ளதால் மேலேற வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு தீர யோசித்து விடுவது நல்லது.  வரவிருக்கும் மத்திய அரசு காங்கிரஸ் அல்லது பாஜக யாராக இருந்தாலும் பொருளாதார கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

     தேர்தலுக்கு முந்தைய நாட்களில் காணப்படும் சுணக்கம் நமது சந்தையில் தற்போது காணப்படுவதில்லை.  வரும் நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பழைய கடன்கள் ஏதாவது இருந்தால் அடைத்து விடுவது நல்லது.  (கடன் வாங்கி முதலீடு செய்வது பற்றி நிறைய பல அனுபவங்களை கேட்டிருக்கிறேன். இது பற்றி தனியாக எழுதலாம் என்றிருக்கிறேன். )

      இன்றைய சந்தை இறக்கத்துடன் தான் ஆரம்பிக்கும்.  சென்ற நாட்களில் இருந்தது போல் பணப்புழக்கம் இருந்தால் சந்தை இறக்கத்துடன் ஆரம்பித்து முன்னேற ஆரம்பிக்கும்.  இல்லாவிட்டால் மெள்ள மெள்ள சரிவுகள் இவ்வாரம் முழுவதும் தொடர வாய்ப்புண்டு.

      இன்றைய சந்தையானது -148 முதல் -75 வரை ஆட வாய்ப்புண்டு. ஒருவேளை ஏற்றத்துடன் முடிந்தால் இலாபத்தினை தவறாது உறுதி செய்து கொள்ளுங்கள்.

 Read Disclaimer

Good Morning to you all!

Entry filed under: Market Analysis. Tags: .

20-04-2009 23-04-2009

4 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM 9842551176  |  April 21, 2009 at 7:54 am

    Market may face selling pressure, but may rise during the day.
    This is my prediction. Intraday traders, trade according to market trend.

    Wishing a successful trading.

    Short term Investors can wait for correction. Those who already invested during the beginning of this bear market bull run, can book profits now.

  • 2. Anonymous  |  April 21, 2009 at 8:15 am

    Thank you

  • 3. டுமீல் Raja  |  April 21, 2009 at 10:12 am

    Good work Jose.

  • 4. DG  |  April 21, 2009 at 7:18 pm

    //ஒருவேளை ஏற்றத்துடன் முடிந்தால் இலாபத்தினை தவறாது உறுதி செய்து கொள்ளுங்கள்//
    thanks

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: