இரகசிய உரையாடல்

April 17, 2009 at 7:48 pm 12 comments

      இந்த வலைப்பூவை படிப்பவர்களில் சிலர் கடந்த தினத்தன்று ஒரு பிரபலமான வலைத்தளத்தில் கதைத்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட உரையாடல் தொகுப்பு.  இதை அனுப்பி வைத்தவர் தன் பெயரை இரகசியமாக வைத்திருக்கும்படி கூறியிருக்கிறார். 

 

(ஜாபர், விசுரேஷ் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்) அப்போது வருகிறார் ஜிகார்த்தி.

ஜிகார்த்தி   : வணக்கம், நண்பர்களே.  உங்கள் கருத்துகளை  ஷேர் ஹண்டர் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன்.  நலம்தானே?

ஜாபர் : வணக்கம், கார்த்தி அவர்களே.  யாவரும் நலமே.

ஜிகார்த்தி :  இந்த வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறீர்களா?

ஜாபர் : ஆம். நெடுநாட்களாக படித்து வருகிறேன். என்றாவது ஒருநாளாவது புரியும் மாதிரி எழுதமாட்டாரா என்பதுதான் என் அவா.

விசுரேஷ் :  நடுநடுவில் சினிமா விமர்சனம், கதை, கவிதை போன்றவகைளெல்லாம் எழுதுகிறார்.  சமயத்தில் எது கதை, எது பங்கு சந்தை கருத்துகள் என்பதே புரியமாட்டேங்கிறது.

ஜாபர் : அவரிடம் நாசுக்காக இதைப் பற்றி நாம் சொல்ல வேண்டும்.  மென்மையாக, அவர் தவறாக நினைக்கா வண்ணம் இதைப் பற்றி எழுதவேண்டும்.

அனானி : இந்த வரி எப்படியிருக்கிறது என்று பாருங்கள். ‘உனக்கு தெரிஞ்சதை மட்டும் எழுது’. எப்டி?

ஜிகார்த்தி : ஏங்க நீங்க யாருங்க? 

விசுரேஷ் : அவரை ப்யூச்சர்ஸ் பற்றி எழுத சொல்லலாம்.

ஜாபர் :  நல்ல ஐடியா. நீங்க என்ன நினைக்கிறீங்க கார்த்தி?

ஜிகார்த்தி  : அவருக்கு ப்யூச்சர்ஸ் பற்றி ஒன்னும் தெரியாதுங்க.

ஜாபர், விசுரேஷ் (அதிர்ச்சியுடன்) :  என்னங்க சொல்றீங்க?

ஜிகார்த்தி :  ஆமாங்க. ஒரு தபா அவர கேட்டேன், நிப்டி ப்யூச்சர்ஸ் எப்டி இருக்கும்னு. அவரு சொன்னாரு.  இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.  ஒரு வருஷம் கழிச்சு நல்லா இருக்கும்னு.

ஜாபர்  : உங்கள் கருத்தை அவர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் அல்லவா?

ஜிகார்த்தி : நானும் அப்டிதான் நினைச்சு ஆப்ஷன் பத்தி கேட்டதற்கு அவர் சாய்ஸ்  கொடுங்கன்னு சொல்றாரு. புட் வாங்கலாமா கேட்டதற்கு பட்டுன்னு புட் வாங்குங்கன்னு கால் கொடுக்க மாட்டேங்கிறாரு.

ஜிகார்த்தி :  ஆனா ஒன்னுங்க. அவரால சில நேரத்துல நஷ்டத்துலந்து தப்பிச்சுருக்கேங்க.

விசுரேஷ் (ஆச்சரியத்துடன்) :  அப்படியா?  எப்டி?

ஜிகார்த்தி :  சிலசமயம் அவரு என்னா எழுதியிருக்காருன்னு படிச்சவுடனே தலை அப்டியே கிர்ருன்னு ஆயிடும்.  அந்த சமயத்துல கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு வந்துட்டு திரும்பறத்துக்குள்ளே சந்தை முடிஞ்சு போயிடும். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள்.

விசுரேஷ் :  அவரு ஏன் பங்குகள் வாங்க பரிந்துரைகள் செய்ய மாட்டேங்கறாரு?

அனானி : தெரிஞ்சாதானே?

ஜாபர் :  ஒருவேளை அனானி சொல்ற மாதிரி அவருக்கு தெரிஞ்சத மட்டும் எழுத சொல்லலாமா?

அனானி:  எழுதறத நிறுத்திட்டாருன்னா?

(அனைவரும்) : எதுக்கு வம்பு? எதுவும் பேசமா காலையிலே அவரு எழுதியிருக்கிறத படிச்சுட்டு சுவத்துல நாலு தடவை முட்டிகிட்டு மார்க்கெட் போயிடலாம்.

 

      Happy weekend, friends. 🙂

Entry filed under: நகைச்சுவை.

17-04-2009 Kiki’s Delivery Service – விமர்சனம்

12 Comments Add your own

 • 1. King Viswa  |  April 17, 2009 at 8:21 pm

  Dear ShareHunter,

  it takes Lot of Guts to make fun out of self. Bravo.

  //விசுரேஷ் : நடுநடுவில் சினிமா விமர்சனம், கதை, கவிதை போன்றவகைளெல்லாம் எழுதுகிறார். சமயத்தில் எது கதை, எது பங்கு சந்தை கருத்துகள் என்பதே புரியமாட்டேங்கிறது.// என்ன கொடுமை சார் இது?

  //ஜிகார்த்தி : ஆனா ஒன்னுங்க. அவரால சில நேரத்துல நஷ்டத்துலந்து தப்பிச்சுருக்கேங்க.
  விசுரேஷ் (ஆச்சரியத்துடன்) : அப்படியா? எப்டி?
  ஜிகார்த்தி : சிலசமயம் அவரு என்னா எழுதியிருக்காருன்னு படிச்சவுடனே தலை அப்டியே கிர்ருன்னு ஆயிடும். அந்த சமயத்துல கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு வந்துட்டு திரும்பறத்துக்குள்ளே சந்தை முடிஞ்சு போயிடும். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள்.// மிகவும் ரசித்தேன்.

  //விசுரேஷ் : அவரு ஏன் பங்குகள் வாங்க பரிந்துரைகள் செய்ய மாட்டேங்கறாரு?
  அனானி : தெரிஞ்சாதானே?// ஹா ஹா ஹா.

  //ஜாபர் : ஒருவேளை அனானி சொல்ற மாதிரி அவருக்கு தெரிஞ்சத மட்டும் எழுத சொல்லலாமா?
  அனானி: எழுதறத நிறுத்திட்டாருன்னா?
  (அனைவரும்) : எதுக்கு வம்பு? எதுவும் பேசமா காலையிலே அவரு எழுதியிருக்கிறத படிச்சுட்டு சுவத்துல நாலு தடவை முட்டிகிட்டு மார்க்கெட் போயிடலாம்//ஆமாம், ஒரு வேலை எழுதறத நிருத்திட்டாருனா?

  கிங் விஸ்வா
  Carpe Diem.

  தமிழ் காமிக்ஸ் உலகம்

 • 2. shankar visvalingam  |  April 17, 2009 at 8:45 pm

  –எழுதறத நிறுத்திட்டாருன்னா?

  புஜ்ஜி பாபு, அதை மட்டும் செய்து விடாதீர்கள்.
  உங்களிற்காகவே தீ “அணைப்பு” படைத் தலைவி தீபா அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

 • 3. King Viswa  |  April 17, 2009 at 8:54 pm

  நண்பர்களே,

  பாடு புஜ்ஜி பாடு என்று ராமகிருஷ்ணன் எழுதியதை போல //http://www.sramakrishnan.com/view.asp?id=242&PS=1 // நாமும் எழுது புஜ்ஜி எழுது என்று ஒரு இயக்கம் ஆரம்பிப்போமா?

  கிங் விஸ்வா.
  Carpe Diem

  தமிழ் காமிக்ஸ் உலகம்

 • 4. வால்பொண்ணு  |  April 17, 2009 at 11:24 pm

  GOOD JOKE …

 • 5. டுமீல் ராஜா  |  April 18, 2009 at 12:45 am

  கார்த்தி கலக்கீட்ட மாமு

 • 6. V.SURESH, SALEM  |  April 18, 2009 at 7:03 am

  keep it up sir.

 • 7. Rajkumar  |  April 18, 2009 at 9:15 am

  பங்கு சந்தை பற்றி தினமும் இதேபோல் கேள்வி பதில் மேதொடில் நீங்கள் எழுதலாம் .

 • 8. ஜுடோ ஜோஸ்  |  April 18, 2009 at 1:40 pm

  //விசுரேஷ் : அவரு ஏன் பங்குகள் வாங்க பரிந்துரைகள் செய்ய மாட்டேங்கறாரு?
  அனானி : தெரிஞ்சாதானே?//

  இதனை வன்மையாக கண்டித்து தமிழ் நாட்டில் இருக்கும் கோடானு கோடி வருத்தமில்லா வாலிபர் சங்க தொண்டர்களும், குண்டர்களும் இன்று டீ குடிப்பார்கள். (ஏதோ, எங்களால முடிஞ்சது).

  ஜுடோ ஜோஸ்.
  When Judo Josh gives you the finger, he’s telling you how many seconds you have left to live.

 • 9. Karthikeyan G  |  April 19, 2009 at 9:06 pm

  யாரு சார் ஜிகார்த்தி, ஏதோ ஜிகர்தண்டா வியாபாரி பேரு மாதிரி இருக்கு.

 • 10. Rafiq Raja  |  April 20, 2009 at 11:08 am

  வேட்டையரே, தன்னை பற்றியே விமர்சித்து கொள்ளும் தைரியம் சில பேருக்கு மட்டும் தான் உண்டு, அந்த விதத்தில் நீங்கள் டாப் டக்கருங்கோ…. சம்பாஷனை செம்ம சூப்பர். இது போல பங்கு சந்தை பற்றியும் ஏன் நீங்கள் நானே கேள்வி, நானே பதில் என்ற விதத்தில் நகைச்சுவையாக எழுத கூடாது?

  ஆமாம், இந்த உரையாடலில் பங்கு கொண்ட இளஞ்சிங்ககளான ஜிகார்த்தி, ஜாபர் மற்றும் விசுரேஷ் இங்கு ஏன் அவர்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை….. தங்கள் இரகசிய உரையாடல் வெளி வந்து விட்டதே என்று கடுப்பா…. இல்லை இப்படியாவது தாங்கள் கூறியதை இந்த வலைப்பக்கத்தின் கதாசிரியர் (பங்காளி என்று சொல்லாமல் தடுக்கவே) புரிந்து கொள்வார் என்ற நப்பாசையா 🙂

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

 • 11. BALAJI  |  April 21, 2009 at 12:26 pm

  தலைவரே 1/2 மணி நேரமா சிரிப்பா அடக்க முடியல, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு supperrrrrrrrr

 • 12. rajendrann  |  April 21, 2009 at 1:25 pm

  நல்ல நல்ல நகைச்சுவை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
April 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: