Archive for April 16, 2009
16-04-2009
பொருளாதார மந்தம் முடிவடைந்துவிட்டது என்றெல்லாம் பரவலாக பேசிக் கொள்கிறார்கள். இந்நேரம் அமெரிக்க சந்தை 8400 என்ற நிலையை இலகுவாக தாண்டியிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்க சந்தையோ இந்த நிலைக்குளேயே Consolidate ஆகிக் கொண்டிருக்கிறது.
நமது சந்தையோ காம்ப்ளான் (இல்ல ஹார்லிக்ஸ்) குடித்த பையன் போல துள்ளிக் கொண்டிருக்கிறது. புதிய நிலைகள் பற்றி நிறைய ஹேஷ்யங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க சந்தை 130 புள்ளிகள் இறங்கினாலும் 100 புள்ளிகள் ஏறினாலும் நமது சந்தை ஏறி இறங்கினாலும் முடிவில் ஏற்றத்துடனே தொடர்ந்து முடிவடைந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு புதிய அரசாங்கம் அமையவிருக்கும் தேர்தல் நேரத்தில் இவ்வளவு உற்சாகமாக சந்தை இருப்பது ஆச்சரியமளிக்கவில்லை?
இலாபத்தை உறுதி செய்ய தயங்காதீர்கள். இந்த அறிவுரையை பொதுவாக கரடிகள்தான் சந்தையை இறக்க வேண்டுமென்கிற போது தருவார்கள். ஆனால் இந்த சமயத்தில் பயன்படுத்த வேண்டிய அறிவுரை இது. புதிய நிலைகள் எடுக்கும்போது தீர யோசித்து இறங்குங்கள்.
நிப்டி ப்யூச்சர்ஸ் கவனியுங்கள். வியப்பாக இல்லை?
Read Dislciamer.
Good Morning to you all!
Recent Comments