Accepted – திரை விமர்சனம்

April 11, 2009 at 10:27 am 5 comments

acc2     

 

 ப்ளஸ் 2  முடித்தவுடன் அடுத்தது நம் உள்ளூணர்வு என்ன படிக்க வேண்டும் என்று சொல்வதை கேட்காமல் மற்றவர்களின் விருப்பத்திற்கிணங்க இன்ஜினியரிங் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை பார்த்திருப்போம்.   ஒரே பள்ளியில் படித்த நண்பர்களுக்குள் சில மோதல்கள் நடக்கும்காலமும் இதுவே.

      பன்னிரெண்டு வருடங்கள் ஒன்றாக படித்து நல்ல நண்பர்களாக இருந்து இன்ஜியனரிங் படிக்கும் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு முறையில் படிக்க ஆரம்பிக்கும் காலம் மிகக் கொடுமையான காலம். என்னைவிட அவனுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்திருக்கிறது என மெல்லிய பொறாமை அரும்பும் காலம். 

      நாம் விரும்பிய கல்வி நிறுவனத்தில் நமக்கு இடம் கிடைக்காவிட்டால் நமக்கு ஏற்படும் துயரம் இருக்கிறதே.  அதை அனுபவித்தால் தான் தெரியும்.  நானும் அனுபவித்திருக்கிறேன். பிரபல மருத்துவ கல்வி நிலையம் என்னுடைய விண்ணப்பத்தினை நான் ப்ளஸ் டூவில் காமர்ஸ் படித்திருப்பதால் நிராகரித்த போது மனம் உடைந்தே போனேன்.  🙂

      இது போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் விவரிக்கும் படம் தான் இது.  சில நகைச்சுவைகள் மெல்லிய வரம்பு மீறலுக்குள் இருக்கும் என்பதால் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க வேண்டிய படம். (சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?)

      பர்ட்ல்பி கேயின்ஸ் என்னும் மாணவன் தன்னுடைய உயர்நிலைப் பள்ளியில் குறும்புகள் செய்து படிப்பினை முடித்து, மேற்படிப்பிற்காக நிறைய கல்லுரிகளுக்கு விண்ணப்பித்துள்ளான்.  ஆனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் அவனுடைய விண்ணப்பத்தினை நிராகரித்து விடுகின்றன.

      தான் மேற்படிப்பு படிக்க போவதில்லை என அவன் தன் குடும்பத்தினரிடம் பல்வேறு சார்ட்கள் மூலம் இரவு உணவின் போது விளக்க முற்படும் கட்டம் மிகவும் சுவையானது. ஆனால் அவனின் பெற்றோர்கள் அவன் மேற்படிப்பு படித்தே ஆகவேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

     அவனின் நண்பனும் கணினி புலியுமாகிய ஹெர்மன்னுக்கு அவன்  விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்து விடுகிறது.  பெற்றோர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் அவனுடைய விண்ணப்பத்தினை நிராகரித்துவிட்ட நிலையில் அவனுக்கு வேறு வழியே தெரியவில்லை.

 

      இவனே ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்குகிறான்.  நிறுவனத்தின் பெயர் South Harmon Institute of Technology (S.H.I.T).

      பெற்றோர்கள் நம்ப வேண்டுமென்பதற்காக தன் நண்பன் ஹெர்மனிடம் ஒரு இணைய தளத்தினை உருவாக்க சொல்கிறான்.  ஒரு க்ளிக்கில் அட்மிஷன் என்பதுதான் ஸ்லோகன். இவனின் சில நண்பர்களும் இது போன்ற நிராகரிப்பை பெற அவர்களையும் சேர்த்துக் கொள்கிறான்.

       பெற்றோர்கள் அந்த கல்வி நிறுவனத்தை பார்க்க வேண்டும் என சொல்கிற போது பொய்யை டெவலப் செய்ய ஒரு பாழடைந்த மனநிலை மருத்துவ நிலையத்தை வாடகைக்கு எடுத்து பெயிண்ட் அடித்து கல்வி நிறுவனமாக மாற்றி விடுகிறார்கள்.

    ஒரு வழியாக அவர்கள் எல்லோரையும் சமாளித்து வழியனுப்பி விட்டு அப்பாடா என நிம்மதியாக உட்காருகையில் வாசல் கதவு தட்டப்படுகிறது.

      போய் பார்த்தால் ஒரு புதிய மாணவன் தான் இந்த நிறுவனத்தில் அட்மிஷன் கிடைத்திருப்பதாக சொல்கிறான். இவன் திகிலடைய, பின்னால் 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் நிற்கிறார்கள்.

     அந்த இணைய தளம் அதனுடைய ஸ்லோகனுக்கு ஏற்ப விண்ணப்பித்த அனைவருக்கும் அட்மிஷனை கொடுத்திருக்கிறது.

      அந்த நிறுவனத்தை அவன் எப்படி வெற்றிகரமாக நடத்துகிறான், இதனால் அருகில் இருக்கும் மற்றொரு கல்வி நிறுவனம் கொள்ளும் சந்தேகம்,  அதனால் வரும் நீதி விசாரணையை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதுதான் மீதிப் படம்.

     படம் முழுவதும் நகைச்சுவை விரவிக் கிடக்கிறது.  இந்த படத்திற்கு இணைய தளங்கள் நெகடிவ் விமர்சனங்களை அளித்துள்ள போதிலும் படம் அருமையான நகைச்சுவை படம். 

     கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்கள் தங்களுடைய பாடங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என சொல்லும்போது ஒரு மாணவன் தன்னுடைய எண்ணத்தால் ஒரு இலக்கை சிதறடிப்பதே நோக்கம் என சொல்கிறான்.  முதலில் அதிர்ந்தாலும், Best of Luck என சொல்லி முயற்சி செய் என சொல்கிறான்.  படம் முடிகையில் அவன் அடுத்த கல்லுரி முதல்வரின் காரை வெடிக்க வைத்து ‘நான் சொன்னேன்ல’ சொல்லும்போது படம் முடிகிறது.

    கல்லுரி நகைச்சுவை என ஒரு படங்களில் ஒரு வகை உண்டு.  அது போன்ற படங்களில் இது மிகவும் சிறந்த படம் எனலாம்.

Advertisements

Entry filed under: திரை விமர்சனம்.

Howl’s Moving Castle – விமர்சனம் 15-04-2009

5 Comments Add your own

  • 1. SHANKAR VISVALINGAM  |  April 11, 2009 at 10:50 am

    நண்பரே,

    இத்திரைப் படத்தினை நான் பார்க்கவில்லை, ஆனாலும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட படங்களில், இளமையும், குறும்பும் என்னை ஏங்க வைக்கும், வருடம் தோறும் தவறாமல் வெளிவரும் திகில் படங்கள் தனி ரகம்.

    இங்கு மாணவர்களிற்கு இருக்கும் சுதந்திரமும், வசதிகளும், கல்வி கற்கும் முறையும் பொறாமை கொள்ள வைப்பன.

    வார இறுதியில் படங்களாக பார்த்து தள்ளுகிறீர்கள். உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் அதிரடியை.

  • 2. சென்ஷி  |  April 11, 2009 at 10:54 am

    :-))

    படிக்கும்போதே பார்க்கணும்னு தோணுது..

  • 3. வயக்கரா தாத்தா  |  April 11, 2009 at 11:16 am

    பேராண்டி ஜோஸ்,

    உலகின் மேன்மை மிகு பல்கலைக் கழகமான பூங்காவனம் பல்கலைக்கழகம் சார்பில், உங்களிற்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

  • 4. ரஃபிக் ராஜா  |  April 11, 2009 at 11:19 am

    // நான் ப்ளஸ் டூவில் காமர்ஸ் படித்திருப்பதால் //

    நீங்களும் நம்ம கட்சிதானா… வெல்கம் டு நம்ம ஏரியா வேட்டையரே. என்னுடைய பள்ளி பொருளாதார ஆசிரியர் அடிக்கடி கூறுவர்… மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சாளர்களை வேலைக்கு வைத்து சம்பளம் குடுக்கும் அளவுக்கு நம் துறை நம்மை கௌரவிக்கும் என்று. அதை நினைத்து அவ்வப்போது மனதை தேற்றி கொள்வேன். 🙂

    0// டெவலப் செய்ய ஒரு பாழடைந்த மனநிலை மருத்துவ நிலையத்தை //

    முன்னா பாய் எம்.பி.பி.எஸ். சை நினைவு படுத்துகிறது.

    // இவனே ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்குகிறான். //

    சும்மா அல்டாப்பு விஷயமா இருக்கே… உண்மையில் சாத்தியமா என்ன… காமடிக்காக ஒத்துக் கொள்ளலாம்…

    // கல்லுரி நகைச்சுவை என ஒரு படங்களில் ஒரு வகை உண்டு //

    பார்த்து விட தூண்டிய வரி. கல்லூரி வாழ்க்கையை திரும்ப சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம். பார்த்து விட்டு கருத்தை பதிகிறேன்.

    வார கடைசியில் படங்களாக பார்த்து தள்ளுவதோடு இல்லாமல், விமர்சனங்களும் போட்டு தாக்குகிறீர்கள்.. கலக்குங்கள்.

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  • 5. King Viswa  |  April 11, 2009 at 3:17 pm

    பங்கு வேட்டையரே,

    நான் மீள் பதிவு என்று கேள்வி பட்டு இருக்கிறேன். இது என்ன மீள் விமர்சனமா?

    இந்தப் படத்தை பார்த்து விட்டு என்னை பார்க்க நீங்கள் சொன்ன பிறகு நானும் பார்த்து ரசித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. நீங்க என்னடான்னா இப்போ விமர்சனம் செய்கிறீர்கள்.

    வர வர எங்களுடைய சோம்பேறித்தனம் உங்களையும் ஆட்கொண்டு விட்டதோ?

    என்ன இருந்தாலும் இது ஒரு சிறந்த படம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க இயலாது. அதிலும் நம்ம ஹீரோ ஜஸ்டின் லாங் (ஜீபர்ஸ் கிரீபர்ஸ் முதல் கதையில் ஹீரோஇன் தம்பியாக வருவாரே அவர், மேலும் இப்போதைய டை ஹார்ட் கடைச் பிரிவில் வருபவர்) கடைசியில் கோர்ட்டில் பேசும் வசனங்கள் சூப்பர். அதனை நீங்கள் கூறி இருக்கலாம்.

    சென்ட் of எ வுமன் படத்துக்கு பிறகு நான் ரசித்த கோர்ட் வசன சீன் இதுவே.

    அட்டகாசம்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: