Howl’s Moving Castle – விமர்சனம்

April 10, 2009 at 11:19 pm 8 comments

     நம் சிறிய வயதில் மாயாஜால கதைகளை தாத்தா, பாட்டியிடமிருந்து கேட்டிருப்போம்.  கேட்ட கதைகளை அசைப்போட்டுக் கொண்டே இரவு நேரத்தில் சிந்தித்துக் கொண்டிருப்போம்.  அந்த சாகச இளவரசனுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என மனதில் கற்பனைகள் ஊறிக் கொண்டிருக்கும்.

             கோட்டை என்பது எப்போதும் ஒருவித பத்திரத் தன்மையை மக்களுக்கு கொடுப்பது.  ஒரு கோட்டையை சுற்றி கிராமங்கள் அமைவதும் அதனால்தான் என நினைக்கிறேன்.  சில நேரங்களில் கோவில்களை சுற்றியும் கிராமங்கள் அமைவதுண்டு. மனித சமுதாயம் எப்போதும் ஒருவித பத்திரமின்மையை பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறது.

     கோட்டைகள், போர்கள் என நம் மனதில் உள்ள பிம்பங்களை திரைப்படத்தில் பார்க்கும்போது ஒருவித ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும்.  அந்த காலத்தில் சரித்திர படங்களின் லட்சணம் அப்படி.   அந்த கதைகள் நம் மனதில் இன்னும் இருந்தாலும் அந்த கற்பனை ஊற்றுகள் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் வற்றிப் போய் விடும் நிலையே தற்சமயம் இருக்கிறது.   

     இது போன்ற சமயங்களில் இத்தகைய படங்களை எடுப்பதற்கு மிகுந்த மனத்திடம் வேண்டும்.  இந்த திரைப்படத்தினை இயக்கியவர் ஹயஒ மியஸகி ( Hayao Miyazaki). பொதுவாக  ஒரு இயக்குநரின் திரைப்படங்களில் மாஸ்டர்பீஸ் என ஒரு திரைப்படத்தினை மட்டுமே குறிப்பிட முடியும்.  இவரின் சித்திர படங்களை பார்த்தால் அது மிகவும் கடினமான காரியம் என்பது தெரியும்.

    

படத்தின் போஸ்டர்

படத்தின் போஸ்டர்

                                     
     படமானது ஒரு கற்பனை ஊரில் ஆரம்பிக்கிறது.  அங்கே  மனதிற்கு பிடிக்காத ஒரு வேலையை செய்துக் கொண்டிருக்கும் சோபி என்னும் பெண்.  அவள் கடைக்கு வரும் ஒரு சூனியக்காரி அவளின் பேச்சை தவறாக எண்ணி அவளை வயதானவளாக ஆக்கி சபித்துவிடுகிறாள்.
 
        மனம் நொந்து அந்த ஊரைவிட்டு மலைப்பாங்கான இடத்திற்கு செல்லும் சோபியை நோக்கி பனிமூட்டத்திற்கு நடுவே ஏதோ ஒரு பிரமாண்டமான ஒன்று வருகிறது.   மெள்ள, மெள்ள பனித்திரை விலக ஒரு கோட்டை அவளை நோக்கி நடந்து வருகிறது.  கற்பனையின் உச்சகட்டம் இது.
எவ்வித வார்த்தைகளாலும் வர்ணிக்கமுடியாத கட்டம் இது. கோட்டை என்பது எப்போதுமே ஒரே இடத்தில் இருப்பது.  அதைச் சுற்றித்தான் காட்சிகள் அமையும்.  கோட்டையே நகருவது என்ற கற்பனையை சுற்றி பின்னப்பட்டிருப்பதே  இந்த சித்திரப்படம்.
நடக்கும் கோட்டை

நடக்கும் கோட்டை

 
      அந்த கோட்டையானது ஹொல் என்ற இளம் மந்திரவாதிக்கு சொந்தமானது.  இளம்பெண்களின் இதயத்தை தின்பவன் என்ற வதந்தி அவனைப் பற்றி உண்டு.   அந்த கோட்டைக்கு சக்தியை அளிப்பது கல்சிபர் என்கிற தீப்பிசாசு. 
 
        அந்த கோட்டையில் தங்கும் சோபி சந்திக்கும் சாகசங்கள்தான் மீதிக் கதை.  உண்மையிலேயே ஹொல் கெட்டவனா?  அவனின் மனதில் உள்ள இரகசியம்தான் என்ன?  அவனுக்கும் தீப்பிசாசுக்கும் உள்ள இரகசிய ஒப்பந்தம்தான் என்ன? சூனியக்காரியின் சாபத்தை அவனால் நீக்க முடிந்ததா? கதையை சொன்னால் படத்தின் சுவாராஸ்யம் குறைந்து விடுமா?  சான்ஸே இல்லை. 
 
      
     அந்த நடக்கும் கோட்டையை ஒரு ஆற்றின் கரையில் நிறுத்தி தேநீர் அருந்தும் காட்சி போல் நிறைய கவிதை மயமான காட்சிகள் இந்த சித்திர படத்தில் உண்டு.  ஆங்கில நாவலின் மூலக்கதை ஒரு சிறந்த ஜப்பானிய சித்திரக் கதை இயக்குநரால் படமாக்கப்பட்டிருக்கிறது.  IMDB யில் இதற்கு 8.1/10 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.  முதல் சிறந்த 250 படங்களில் இதற்கும் இடம் இருக்கிறது.
      ஜப்பானிய மொழியில் ஆங்கில துணையெழுத்துகளுடன் பார்த்தேன்.  வேறு விதமான வெர்ஷன்கள் கூட வந்திருக்க கூடும்.  இணையத்தில் எப்படி கிடைக்கிறது என தெரியவில்லை.  சித்திர படங்களில் முதல் 10 என்ற கணக்கீடு இப்போது எடுக்க நேர்ந்தால் கண்டிப்பாக இப்படத்திற்கு ஒரு இடம் உண்டு. அமெரிக்காவில் பெரிய அளவில் இந்த திரைப்படம் ஏன் கண்டுக்கொள்ளப்படவில்லை என ஆச்சரியப்படுகிறேன். 
     தவறவிடக்கூடாத ஒரு சித்திர படம். 
Advertisements

Entry filed under: திரை விமர்சனம்.

09-04-2009 Accepted – திரை விமர்சனம்

8 Comments Add your own

 • 1. SHANKAR VISVALINGAM  |  April 11, 2009 at 12:31 am

  நண்பரே,

  ஹயஒ மியஷகியின் அற்புதமான படங்களில் இதுவும் ஒன்று. தியாகக் காட்சிகள் மனத்தை நெகிழவைக்கும். இசை பற்றி கூறவும் வேண்டுமோ.
  தொடர்ந்து இப்படியான நல்ல விடயங்களைப் பற்றி எழுதுங்கள்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

 • 2. King Viswa  |  April 11, 2009 at 12:39 am

  அண்ணே,

  நீங்க சொன்ன அந்த “பிறகு” இப்பதான் வந்ததா?

  //https://sharehunter.wordpress.com/2008/10/18/spirited-away-திரை-விமர்சனம்//

  என்ன கொடுமை சார்?

  //அமெரிக்காவில் பெரிய அளவில் இந்த திரைப்படம் ஏன் கண்டுக்கொள்ளப்படவில்லை என ஆச்சரியப்படுகிறேன்// பதில் ஏற்கனவே நான் சொன்ன மாதிரி “NO CUTS” தான். வேறென்ன?

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

 • 3. SHANKAR VISVALINGAM  |  April 11, 2009 at 12:57 am

  அமெரிக்காவில் இத்திரைப்படம் எடுபடாத்திற்கு மிக முக்கிய காரணம் இதற்கு ஸ்லம் டாக் மில்லினர் என பெயர் இல்லாததே.

 • 4. King Viswa  |  April 11, 2009 at 1:07 am

  ஷங்கர் அவர்களே,

  நான் மேலே கூறிய பதிவில் உள்ள என்னுடைய கமெண்ட்’ஐ பாருங்கள்.

  நோ கட்ஸ் என்று Walt Disney’க்கு சொன்னவர் அவர்.

  இவரின் படைப்புகளை அறிமுகப் படுத்திய இயக்குனர் நண்பர் Mysskin அவர்களுக்கு நன்றி.

  ஷங்கர் மற்ற படங்களையும் பாருங்க.

  டாக்டருக்கு டீ.வீ.டி வாங்கி கொடுத்து அவரும் எல்லா படங்களையும் பார்த்து முடிச்சுட்டார்.

  இப்போ அவர் பாக்குற படங்களே வேற. ஒலக சினிமாவாம். என்ன கொடுமை சார் அது?

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

 • 5. SHANKAR VISVALINGAM  |  April 11, 2009 at 1:36 am

  உண்மைதான் விஸ்வா,

  அதை 1996ல்,அவர் டிஸ்னி ஸ்டுடியோவினுடனான ஒர் ஒப்பந்தத்திலேயே கூறினார் என்று நினைக்கிறேன்.

 • 6. ரஃபிக் ராஜா  |  April 11, 2009 at 2:04 am

  பங்கு வேட்டையரே,

  மங்கா படத்தை பற்றிய அற்புதமான பதிவு.

  // மனித சமுதாயம் எப்போதும் ஒருவித பத்திரமின்மையை பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறது. //

  நீங்கள் கோட்டை, கோவில் சுற்றி வீடுகள் அமைவதை பற்றி கூறியவுடன், முன்பு ஏஜ் ஆஃப் எம்பயர் என்ற பிரபலமான வீடியோ கேம் ஆடிய நினைப்புதான் வருகிறது. அந்த விளையாட்டை எல்லாரும் ஒரு முறையாவது வாழ்க்கையில் ஆடி இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

  அதில் ஒரு நாட்டை கட்ட ஆரம்பித்தவுடன், முதலில் கோட்டை, பிறகு கோவில் என்று கட்டினால் செல்வம், மற்றும் பலம் மேலும் கூடும் என்று விதிமுறை, அதற்கு மூலம் நம் வாழ்க்கை வழிமுறைதான் என்று கூறவும் வேண்டுமா

  // இளம்பெண்களின் இதயத்தை தின்பவன் என்ற வதந்தி //
  நம்ம வயக்கரா தாத்தா கேட்டால் ரொம்ப பொறாமை படுவார்

  // அமெரிக்காவில் பெரிய அளவில் இந்த திரைப்படம் ஏன் கண்டுக்கொள்ளப்படவில்லை என ஆச்சரியப்படுகிறேன். //

  அமெரிக்காவை பொறுத்த வரை ஜப்பான் கலைகள் என்று இது வரை அவர்கள் மதித்து ஏற்று கொண்டது இரண்டை மட்டும் தான். ஒன்று மங்கா காமிக்ஸ், இன்னொன்று அனிமேஷன் வீடியோ கேம்ஸ். அனிமேஷன் படங்களை பொறுத்த வரை இன்னும் அவர்கள் மட்டுமே டாப் டக்கர் வகையறா மற்றவை குப்பை என்ற எண்ணம் அவர்களுக்கு எப்பவும் மேலோங்கி இருக்கும்.

  அதனால், அங்கு இந்த படம் பிரபலமடையாததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஷங்கர் கூறியது போல ஒரு வேளை ஸ்லம்டாக் மில்லியனர் போல ஜப்பானின் டோக்யோ நகர அவல வாழ்க்கையை அவர்கள் படம் பிடித்து காட்டினால் இன்னொரு ஆஸ்கார் விருது கூட வழங்க தயாராக இருப்பார்கள். 🙂

  பொதுவாக மங்கா கதைகள் மற்றும் அனிமேட்டட் படங்களில் அவ்வளவாக எனக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் சமீப காலமாக போக்மேன், ப்ளேடு போன்ற மொக்கை கதைகள் நடுவே இப்படி சில அரிய விஷயங்களும் இருப்பது என்பது தெரிந்தது.

  ஷங்கரும் அவர் பங்குக்கு ஒரு மங்கா காமிக்ஸ கதையை அறிமுகபடுத்தினார் (நானும் ஒன்றை படித்து வருகிறேன் அதன் பின்பு), நீங்கள் இப்போ மங்கா அனிமேஷனை பற்றியும் பரிந்துரைத்துள்ளீர்கள். இனி அதன் மீதான எனது அபிப்ராயமே மாறி விடும். குப்பைகளின் நடுவே தேடி பார்க்க எவ்வளவோ உள்ளது என்று உணர்ந்தேன்

  உங்கள் பதிவின் மூலம் ஹயஒ மியஸகி ( Hayao Miyazaki) என்ற அற்புத கலைஞரை பற்றி அறிமுகபடுத்தியதற்கு நன்றி. அவரின் படங்களை தருவித்து பார்த்து விட்டு மீண்டும் கருத்துகள் பதிகிறேன். உங்கள் முந்தைய பதிவிற்கும் சேர்த்து.

  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

 • 7. யாத்ரீகன்  |  April 11, 2009 at 3:02 am

  இதை இந்த வார இறுதியில்பார்க்க தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.. 🙂 உங்கள் விமர்சனம் மேலும் ஆவலைதூண்டிவிட்டது..

  Spirited Away, My Neighbour Toroto, Princess Monnocco பார்த்து விட்டீர்களா ?!

 • 8. sharehunter  |  April 11, 2009 at 9:47 am

  நன்றி, நண்பர்களே.

  இது போன்ற Superior Imagination படங்களை டிஸ்னி என்றுமே ஊக்குவித்தது கிடையாது. முதலில் பிக்ஸர் நிறுவனத்தையே அவர்கள் மதிக்கவில்லை.

  இப்போது டிஸ்னி படங்களை விட பிக்ஸர் படங்கள் நன்றாக ஓடுவதை பார்க்கும்போது ஒருவித காண்டுவில் இருப்பதாக தெரிகிறது.

  எனவே ஜப்பானிய இயக்குநரை அவர்கள் கண்டுக்கொள்ளாதது ஆச்சரியமே இல்லை.

  அமெரிக்க பத்திரிக்கைகளும் நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ள போதிலும் படம் அங்கு சரியாக ஒட வில்லை.

  அவரின் கிகி, பிரின்ஸஸ் மோனோக்கா இன்னும் கிடைக்கவில்லை. Ponyo படம் ட்ரைலர் பார்த்துவிட்டு பிரமித்து போய் இருக்கிறேன்.

  ஷங்கர்,

  இசை அவர் படத்தில் மிக பிரமாதமாக இருக்கும். ஆனால் அனைத்தையும் மீறி இயக்குநரே படத்தில் தெரிவார்.

  விஷ்வா,

  அவரின் படங்களை இப்போது திரும்ப பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு விமர்சனம் எழுதியிந்தேன் என்றே நினைத்திருந்தேன் 🙂

  ரபீக்,

  அந்த கேம் என் மனதிற்கு மிகவும் விளையாட்டு. அதில் நிறைய சீட் கோடுகள் எனக்கு தெரியும். 🙂 மங்கா கார்ட்டூன் படம் எனக்கும் பிடிக்காது. ஆனால் இப்போது தீவிரமான அபிப்பிராயம் என்று எதையும் வைத்துக் கொள்வது கிடையாது.

  யாத்ரீகன்,

  வார இறுதியில் பார்க்க மிகச் சிறந்த படத்தைதான் வைத்திருக்கிறீர்கள். விரைவில் அவரின் மற்ற படங்களையும் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமே இல்லை Spirited Away பார்த்து விமர்சனமும் எழுதிவிட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

April 2009
M T W T F S S
« Mar   May »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: