08-04-2009
April 8, 2009 at 7:53 am 3 comments
ஈஸ்டர் விடுமுறைக் காலம் வருவதால் அமெரிக்க சந்தையில் இந்த வாரம் பெரியதாக எவ்வித மாற்றத்தினையும் எதிர்பார்க்க முடியாது. நேற்றைய சந்தை 180 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. ஜி 20 மாநாடு முடிந்து விட்டதல்லவா!
இன்றைய சந்தையும் சுணக்கமாகவே முடியும் வாய்ப்பு இருக்கிறது. நமது சந்தை உலக சந்தைகளின் எழுச்சியையொட்டி வேகமாக மேலேறியது, இன்று செல்லிங் பிரஷ்ர் கடுமையாக எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக BTST Short Positions அதிகமாக இருக்கும்.
இதையும் மீறி சந்தை மேல்நோக்கி செல்வது என்பது டெக்னிகலுக்கு மீறிய செயலாகதான் இருக்கும். அவ்வாறு செல்கையில் கீழிறிங்கும்போது வெகு வேகமாக இறங்கும் என்பது ஐதீகம். 🙂
இன்றைய சந்தையில் இலாபத்தை உறுதி செய்து கொள்ள சிறு முதலீட்டாளர்கள் விற்க ஆரம்பிக்க நிறைய தரகர் நிறுவனங்கள் ஆலோசனை கொடுத்து இருக்கின்றன. இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றும் நாளை சந்தையை பற்றி பெரியதாக எதுவும் சொல்வதற்கில்லை. In my personal opinion, our market may lose 200 points in the week.
சில வங்கி பங்குகள் இன்னும் கீழேயே இருக்கின்றன. அவை சற்று மேலேற வாய்ப்பு இருக்கின்றன. வங்கிகள் இந்த காலாண்டு சிறப்பான அறிக்கையை தரும் என எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.
Read Disclaimer.
Good Morning to you all!
Entry filed under: Market Analysis.
1.
Anonymous | April 8, 2009 at 8:54 am
THANK YOU JOSH
2.
rajendrann | April 8, 2009 at 9:51 am
200 points !!!!!!!!!!!!!
thanks
3.
ரஃபிக் ராஜா | April 8, 2009 at 12:50 pm
சந்தையில் முதலீடு செய்வது கிலியான ஒரு கால கட்டம் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் புதிய நிதியாண்டு துவக்கத்தில சந்தை உயரும் போக்கில் இருக்கும், இப்போது அதற்கும் வழி வகை இல்லை.
பார்ப்போம்… ஏதாவது ஒளி வெளிச்சம் வராமலா போகி விடும்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்