Archive for April 2, 2009
02-04-2009
சந்தை நேற்று 40 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. 3100,3150 என்ற இரு வலுவான தடை நிலைகளை தாண்டியாக வேண்டும். அவ்வாறு ஏற்றம் காண்பது ஆபரேட்டர்கள் கைகளில் தற்போது இருக்கிறது என நினைக்கிறேன்.
சந்தை ஏற்றம் பெறும்போது இது நிரந்தரமா என்ற பயம் முதலீட்டாளர்களிடம உள்ளூர இருப்பதை உணர முடிகிறது. ஒரு பொருளாதார மந்தம் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் மூன்று மாதங்களில் முடிந்து விடுவது என்பது நடக்காத ஒரு விஷயம். தற்சமயம் அமெரிக்க அரசாங்கம் நிலைமை சீரடைவதை தடுக்கத்தான் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. அதன் விளைவுகள் இன்னும் ஒரு மாதத்தில் தெரியும். நமக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வருகிறது.
இது போன்ற சமயங்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடந்த வாரத்தில் எல்லா நாட்களிலும் BTST செய்ய வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. நாளை சந்தை விடுமுறை என்பதால், செல்லிங் பிரஷர் உருவாக வாய்ப்பு உண்டு. 3100 என்ற தடை நிலையை எவ்வாறு தாண்டுகிறது என்பது கூர்ந்து கவனியுங்கள். பண வீக்கம் பற்றிய புள்ளி விவரம் சந்தையில் பெருத்த அளவில் தற்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அது பூஜ்யத்திற்கு குறைவாக முடிந்தால் அது நல்ல செய்தியில்லை. தொழிற்சாலைகளின் உற்பத்தியை பாதிக்கும் காரணியாக அது பார்க்கப்படும்.
முதல் அரை மணி நேரத்தில் சந்தையின் ஆட்டத்தை ரிலையன்ஸ் பங்குகளுடன் ஒப்பிட்டு கவனியுங்கள்.
Read Disclaimer.
Good Morning to you all!
Recent Comments