Archive for March, 2009
24-03-2009
அமெரிக்க அரசு அறிவித்த ஊக்கத் திட்டங்களால் அமெரிக்க சந்தையானது நேற்று 490 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. ஆனால் இது தற்காலிகமே. 8000 புள்ளிகளில் வலுவாக இருந்தது என நிபுணர்களால் சொல்லப்பட்ட சந்தை ஒரே வாரத்தில் 7000 புள்ளிகள் வரை சரிந்தது அச்சந்தை அடிப்படையில் இன்னும் பலவீனமாகவே உள்ளதை காட்டுகிறது.
இந்த பொருளாதார சீர்குலைவிற்கு பின் வேகமாக முன்னேற்றம் அடையும் சந்தையாகவே இதுவரை அமெரிக்க சந்தை பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலைமை சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருக்கிறது. அடுத்த பொருளாதார மந்தத்திற்கு ஆசிய சந்தைகளையே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
நேற்றைய சந்தை மிக மிக உற்சாகத்துடன் ஷார்ட் கவரிங் காணப்பட்டது. 3000 என்ற இலக்கு வெகு எளிதில் என்ற பேச்சும் அடிப்படுகிறது. 3000 என்ற நிலையில் நிறைய இலாபம் உறுதி செய்யும் நோக்கு இருக்கும். சந்தை அந்த நிலையில் சிறிது தடுமாறவே செய்யும் என நினைக்கிறேன். அதனை தக்க வைத்துக் கொள்ளும் நிலையும் இன்று உள்ளது. ஒருவேளை அந்நிலையை கடந்து முடியுமானால் மேலும் ஒரு சிறிய ஷார்ட் கவரிங் ஏற்பட்டு சந்தையானது 3100 வரை போகுமென நினைக்கிறேன்.
இன்றைய சந்தையானது ஆரம்பத்தில் ஏற்றத்துடன் தொடங்கினாலும், போகப்போக செல்லிங் பிரஷர் சந்தை ஏற்றத்தினை தடுக்குமென தோன்றுகிறது. மேலும் ஆபரேட்டர்கள் காளை மன ஒட்டத்தையே சந்தையில் பிரதிபலிக்கின்றார்கள். ப்யூச்சர்ஸ் முடியும் நாள் இந்ததடவை மிகவும் சுவாரஸ்யமாக இருக்குமென தோன்றுகிறது.
தின வணிகர்கள் மற்றும் ஸ்விங் ட்ரேடர்கள் மிகவும் எச்சரிக்கையாக சந்தையை அணுகுங்கள். இன்றைய சந்தையானது 68 முதல் -28 வரை ஆடுமென நினைக்கிறேன்.
Read Disclaimer.
Good Morning to you all!
23-03-2009
இன்றைக்கு ஆரம்பித்திருக்கும் ஆசிய சந்தைகள் எல்லாம் மிக உற்சாகமாக ஆரம்பித்திருக்கின்றன. நமது சந்தை அவ்வாறு ஆரம்பிக்கும் என சொல்வதில் சில சிக்கல்கள் உள்ளன.
முதலில் ப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட் முடியும் நாள் மூன்று தினங்களில் வர உள்ளன. அடுத்த நிலையான 2900 என்ற நிலையில் இலாபத்தை உறுதி செய்தல் மிக அதிகமாக இருக்கும். அதையும் மீறி சந்தை முன்னேற வேண்டுமென்றால் உலக சந்தைகள் குறிப்பாக அமெரிக்க சந்தையானது மீண்டும் 7700 என்ற நிலையை தாண்ட வேண்டும்.
இன்றைய தினம் சந்தையில் துவக்கத்தில் இலாபம் உறுதி செய்தல் நடப்பதால் சந்தை துவக்க நிலையில் தடுமாறும் நிலை உள்ளது. அதை சமாளித்துக் கொண்டு முன்னேறுமென்றால் 48 புள்ளிகள் அளவிற்கு ஏற்றத்துடன் நிற்கும் என எதிர்பார்க்கிறேன்.
கீழே இறங்கினால் பெருத்த அளவில் இறங்காது என தோன்றுகிறது. அவ்வாறு இறங்கினாலும் 28-34 என்ற புள்ளிகளில் ஆடுமென நினைக்கிறேன்.
இந்த வாரம் எப்படி இருக்குமென்பதை இன்றைய தினம் சந்தை சொல்லிவிடும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
தின வணிகர்கள் இன்று எச்சரிக்கையாக வணிகம் செய்யவும்.
Read Disclaimer
Good Morning to you all!
20-03-2009
அமெரிக்க சந்தை இறக்கத்தில் முடிந்திருந்த போதிலும், தற்போது ஆரம்பித்திருக்கும் ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் பொருளாதாரத்தை மீட்க சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும்.
பண வீக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. அதனை அளப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன. தற்போதைய அளக்கும் முறையை மாற்றுவது நல்லது. மிக தவறான குறியீட்டினை நமக்கு இனி வருங்காலத்தில் தரலாம்.
இன்றைய தினம் நமது சந்தைகள் மேலேறக் கூடும் என எதிர்பார்க்கிறேன். 3000 என்ற நிலையை எட்டுவது சிரமம் தான் எனினும், சந்தையின் வால்யூம் குறைவாக இருப்பதால், 2900 என்ற நிலையை கடக்கும்போது யாரேனும் ஒரு பெரிய தலை சந்தையை மேலே அழைத்துக் கொண்டு செல்லக்கூடும். அந்நிய முதலீட்டாளர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும்.
வணிக தொலைக்காட்சிகளில் பாஸிட்டிவான செய்திகளை நிறைய பரப்புவார்கள் என நினைக்கிறேன். பார்ப்போம்.
இன்றைய சந்தை -44 முதல் 58 வரை ஆடுமென நினைக்கிறேன். முடிவு 10-28 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடியுமென நினைக்கிறேன்.
Read Disclaimer!
Happy Weekend!
Recent Comments