Archive for March 20, 2009

20-03-2009

      அமெரிக்க சந்தை இறக்கத்தில் முடிந்திருந்த போதிலும், தற்போது ஆரம்பித்திருக்கும் ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் இருக்கின்றன.  அமெரிக்காவில் பொருளாதாரத்தை மீட்க சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.   இன்னும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும்.

     பண வீக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது.  அதனை அளப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன. தற்போதைய அளக்கும் முறையை மாற்றுவது நல்லது.   மிக தவறான குறியீட்டினை நமக்கு இனி வருங்காலத்தில் தரலாம். 

       இன்றைய தினம் நமது சந்தைகள் மேலேறக் கூடும் என எதிர்பார்க்கிறேன்.  3000 என்ற நிலையை எட்டுவது சிரமம் தான் எனினும், சந்தையின் வால்யூம் குறைவாக இருப்பதால், 2900 என்ற நிலையை கடக்கும்போது யாரேனும் ஒரு பெரிய தலை சந்தையை மேலே அழைத்துக் கொண்டு செல்லக்கூடும்.  அந்நிய முதலீட்டாளர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும். 

      வணிக தொலைக்காட்சிகளில் பாஸிட்டிவான செய்திகளை நிறைய பரப்புவார்கள் என நினைக்கிறேன்.  பார்ப்போம்.

     இன்றைய சந்தை -44 முதல் 58 வரை ஆடுமென நினைக்கிறேன்.  முடிவு 10-28 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடியுமென நினைக்கிறேன். 

Read Disclaimer!

Happy Weekend!

March 20, 2009 at 7:57 am 5 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
March 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031