Archive for March 17, 2009
17-03-2009
நமது சந்தை இப்போது முக்கிய நிலையில் மையம் கொண்டுள்ளது. 2850 என்ற நிலையை கடக்க நிறைய தடவை முயற்சி செய்து பின்னோக்கி சென்றுள்ளதை மறக்கக் கூடாது. 2850 என்ற நிலைக்கு வரும்போது Selling Pressure மிகக் கடுமையாக இருக்கும். அதையும் தாண்டுமளவிற்கு சந்தை ராலி செய்ய அயல்நாட்டு சந்தைகள் தொடர்ந்து மூன்று நாட்களாவது ஏற்றத்தில் இருக்க வேண்டும்.
நேற்றைய அமெரிக்க சந்தை 140 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் இருந்தும், அமெரிக்க பிரபல கிரடிட் கார்ட் குழுமத்தின் அறிக்கை வந்தவுடன் சரசரவென இறங்கி விட்டது குறிப்பிடதக்கது.
இன்றைய சந்தை ஆரம்பத்தில் Selling Pressure சந்திக்கக் கூடும். ஊடகங்களில் வங்கிகளை பற்றிய நல்ல செய்திகளே வந்தவண்ணம் உள்ளன. வங்கிகள் துறை மேலேறக் கூடும்.
இன்றைய சந்தை -28 முதல் 67 வரை ஆடுமென நினைக்கிறேன்.
நிப்டியானந்தர் நம் சந்தையை பற்றி ஒரு புதிய உண்மையை கண்டறிந்துள்ளார். என்னவென அறிய பாருங்கள்.
இந்த வலைப்பூவை பெண்கள் படிக்கிறார்களா என தெரியவில்லை. நிறைய சந்தையை பற்றிய ஜோக்குகள் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் உள்ளன. அதையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
Read Disclaimer.
Good Morning to you all!
Recent Comments