Archive for March 12, 2009
12-03-2009
அமெரிக்க சந்தை கடந்த இரு நாட்களாக ஏற்றத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் தடுமாறினாலும் மேலேறும் என நம்பிக்கை உள்ளது. நமது சந்தை தற்போது உள்ளூர் காரணங்களை விட வெளியூர் நிலவரங்களை வைத்தே நகர்கிறது.
இன்றைய விலைவாசி உயர்வு புள்ளி விவரமும் சந்தையை பாதிக்கும் என நான் நம்பவில்லை. கடந்த இரு நாட்களின் ஏற்றமும் நம் சந்தையில் இன்று ஒரு ஷார்ட் கவரிங் தோற்றுவிக்கலாம். சந்தையானது ஏற்றத்தில் முடிய வாய்ப்புள்ளது.
சந்தையின் போக்கு திங்களன்றே சரிவர தெரியவரும். ஏறக்குறைய அனைத்து தின வணிகர்களும் இன்றைய தினம் லாங் ஸ்ட்ராஜி எடுக்க உள்ளார்கள். பார்ப்போம். முதல் அரை மணி நேரம் கழித்து களத்தில் இறங்குங்கள்.
சந்தையானது 88 முதல் 28 வரை ஆடலாம்.
Read Disclaimer
Good Morning to you all!
Recent Comments