Archive for March 4, 2009
04-03-2009
நேற்றைய சந்தை மிகவும் நிதானமாக தொடங்கி நாளின் முடிவில் 40 புள்ளிகளை இழந்து முடிவடைந்தது. நேற்றைய அமெரிக்க சந்தை ஆடிய சீ-சாவை பார்த்திருப்பீர்கள். இந்த சமயத்தில் அரசிடமிருந்து ஏதேனும் ஊக்கமூட்ட அறிவிப்புகள் வெளிவந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க சந்தை ஒரளவு ஸ்டடியாகிவிட்டது என நினைக்கிறேன். நிறைய விற்றிருக்கிறார்கள். ஒரளவு வாங்க முற்படுவார்கள்.
Short Recovering அநேகமாக இன்றைய ஐரோப்பிய சந்தைகளில் பிரதிபலிக்கலாம். நமது சந்தை இன்று ஏற்றத்துடன் முடிய வாய்ப்பு இருக்கிறது. வங்கித் துறை பங்குகள் தொடர்ந்து அடிவாங்கிய வண்ணம் உள்ளன. இது போன்ற சமயங்களில் மிக சிறப்பாக செயல்படும் வங்கிகளை உங்கள் போர்ட்போலியோவில் வாங்கி வைத்துக் கொள்ள சரியான வாய்ப்பு.
இன்றைய சந்தை -58 முதல் 38 வரை ஆடுமென நினைக்கிறேன்.
Read Disclaimer
Good Morning to you all!
Recent Comments