300!!!!!
February 24, 2009 at 9:00 am 14 comments
கடந்த இரு தினங்களாக அமெரிக்க சந்தை புதிய பள்ளங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் அமெரிக்க அரசு வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்கும் வண்ணம் ஊக்கங்கள் கொடுத்திருந்த போதிலும், தொழில்நுட்ப குழுமங்கள் இறங்கி மற்றொரு புதிய பள்ளத்தில் இறங்கியிருக்கிறது.
இன்றைய தினம் அமெரிக்க சந்தை 200 புள்ளிகள் வரை ஏறும் என எதிர்பார்க்கிறேன். இந்த இடத்தில் வாங்கும் நிலை அதிகமாக இருக்கும் என்பதால். நல்லவேளை, நேற்றைக்கு நமது சந்தை விடுமுறை என்பதால் இறங்காமல் தப்பித்தது. ஐரோப்பிய சந்தைகளும் இதை எதிர்பார்த்து நண்பகலில் ஒரு எழுச்சியை சந்திக்கும் என்று நம்புகிறேன்.
நமது சந்தை கடந்த வாரத்திலிருந்தே இறங்கி வந்திருப்பதால், இன்றைய தினம் சிறிது வாங்கும் நிலையுடன் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். நமது வங்கிகள் அடிப்படையாக பொருளாதார பலம் கொண்டு விளங்குவதால் நமது வங்கித் துறை பங்குகள் மீண்டு எழும் என நினைக்கிறேன்.
சந்தை முதல் பகுதியில் இறக்கத்துடன் காணப்பட்டால் மீளும் வாய்ப்பு இரண்டாம் பகுதியில் இருக்கிறது. ஆனால் எதையேனும் எதிர்பார்த்து Flat ஆக தான் காணப்படும் வாய்ப்பும் இருக்கிறது. F & O Closing வேறு இன்னும் மூன்று தினங்களில் நிகழ இருக்கிறது. சந்தை அலைபாயும் வாய்ப்பும் அதிகம்.
இதை எழுதும் வரை இன்றைய சந்தை ஏற்றத்துடன் தான் முடியும் என நினைக்கிறேன்.
================================================================
இது 300-வது பதிவு என்பதால் சிறிது உற்சாகத்துடன் இருந்தேன்.
‘என்ன, காலையிலிருந்து லேப்டாப்யே பார்த்துக் கிட்டு இருக்கியே. பழைய நியூஸ் பேப்பர் இதையெல்லாம் கொண்டு போய் கடையில போட்டு காலி பண்ணலாம்ல.’ இது அம்மா.
‘எங்க, ராத்திரியெல்லாம் உட்கார்ந்து உலக சந்தையை வாட்ச் பண்றாராம் நான் ஒரு படம் டவுன்லோட் பண்ணப் போறேன் சொன்னா வுட மாட்டேங்கறான்.’ இது சகோதரன்.
இதையெல்லாம் கேட்டு என் இரத்தம் கொதிக்காமல் இருக்குமா?
‘உலகத்தின் எந்த மூலையிலும், எந்த நாட்டிலிருந்தும் தேடிப் பாருங்க. தமிழில் பங்கு சந்தையை பற்றி தினமும் எழுதும் பதிவுகளில் ஐந்தாவது இடம் எனக்குதான்.’
வீட்ல இருக்குறவங்க கொஞ்சம் இம்ப்ரஸ் ஆன மாதிரி தெரிஞ்சுது.
சமாளித்துக் கொண்டு சகோதரன் கேட்டான். ‘எத்தனை பேரு எழுறாங்க’
‘அஞ்சு’
‘அடச்சே.’
Entry filed under: Market Analysis.
1.
சுரேஷ் குமார் வீ | February 24, 2009 at 9:33 am
வணக்கம் நண்பரே,
தாங்களின் 300வது பதிப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்களின் வலைப்பக்கத்திற்கு தினந்தோறும் வந்து செல்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் வந்த சுவடு தெரியாமல் பின்னூட்டம் இடாமல் சோம்பேறியாக சென்றுவிடுவேன். தாங்களின் இன்றைய பதிவை படித்ததில் ஒரு இனம் புரியாத சந்தோசம். வாழ்த்துக்கள்.
மற்றும் உங்கள் பக்கத்தில் பிடித்தது நகைச்சுவையுடன் கூடிய எழுதும் திறன்.
நன்றி நண்பரே….
2.
Rafiq Raja | February 24, 2009 at 1:14 pm
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பங்கு வேட்டையரே… வாரம் ஒரு முறையோ, இரு வாரம் ஒரு முறையோ பதிவு இடுவதிலேயே எனக்கு எல்லாம் பெண்டு கலந்து விடுகிறது…. ஆனால் தினமும் பதிவிடுவது ஒரு இமாலய சாகசம் தான்…
தொடர்ந்து உங்கள் பணியை திறம்பட செயலாற்றுங்கள்…. உங்களை நம்பி ஒரு பங்கு சந்தை அன்பர் கூட்டம் இருக்கும் வரை, நீங்கள் உற்சாகத்துடன் தொடரலாம்….
முதலில் தலைப்பை பார்த்து நீங்கள் 300 காமிக்ஸ் காவியத்தை பற்றி தான் ஏதோ கூற போகிறீர்கள் என்று நினைத்தேன் 🙂
ÇómícólógÝ & ரா-கா
3.
nandhansp | February 24, 2009 at 2:05 pm
//தாங்களின் 300வது பதிப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்களின் வலைப்பக்கத்திற்கு தினந்தோறும் வந்து செல்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் வந்த சுவடு தெரியாமல் பின்னூட்டம் இடாமல் சோம்பேறியாக சென்றுவிடுவேன். தாங்களின் இன்றைய பதிவை படித்ததில் ஒரு இனம் புரியாத சந்தோசம். வாழ்த்துக்கள்.////
அப்படியே வழிமொழிகிறேன்……………..
4.
ravishankar | February 24, 2009 at 2:23 pm
appadi sir eppadiellam yocica mudiethu,hahaha nice joke-t you
5.
nr | February 24, 2009 at 3:46 pm
வாழ்த்துக்கள். தாங்களின் 300வது பதிப்பிற்கு, நன்றி.
6.
ramprasad.v | February 24, 2009 at 4:57 pm
Hi
Congrats for the PROLONGED Effort of writing SOAKED in FUN..
🙂
//..சமாளித்துக் கொண்டு சகோதரன் கேட்டான். ‘எத்தனை பேரு எழுறாங்க’
‘அஞ்சு’
‘அடச்சே.’
..//
ithukku peruthaan sontha selavula sooniyam vachukirathaa…..???
With regards.
7.
SHANKAR VISVALINGAM | February 24, 2009 at 5:27 pm
நண்பரே,
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள். விரைவில் திருமணம் நடக்கவேண்டுமெனப் பிரார்திக்கிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள்
8.
எல்லாளன் | February 24, 2009 at 6:36 pm
முன்னூறு மூவாயிரமாகப் பல்கிப் பெருக வாழ்த்துக்கள்.
அரிய முயற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள் ..இன்னும் சற்று விரிவாக…
மாற்றான் தோட்டத்து மாங்காய்க்குத் தான் கிராக்கி அதிகம் ..நம்மைப்பொருத்த அளவில்.. கவலைப்படாதீர்கள்… உங்கள் பெருமைகளையும் புரிந்து கொள்வார்கள்..
-எல்லாளன் கனடா
9.
Karthikeyan G | February 24, 2009 at 8:07 pm
வாழ்த்துக்கள்!! && நன்றி!!
10.
kannan | February 25, 2009 at 8:39 am
வாழ்த்துக்கள். தாங்களின் 300வது பதிப்பிற்கு, நன்றி.
11.
pcmohan | February 25, 2009 at 9:00 am
வாழ்த்துக்கள்
12.
காத்தவ் | February 25, 2009 at 8:55 pm
வாழ்த்துக்கள்
13.
batcha | February 25, 2009 at 10:37 pm
Congratulation Hunter we will see 3000
14.
t.soundarapandi | February 26, 2009 at 9:40 am
congrats continue your service