Archive for February 17, 2009
17-02-2009
பட்ஜெட்டில் பலப்பல புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என காத்திருந்து ஏமாற்றமாகி போன உடனே சந்தை சரிய ஆரம்பித்தது. இந்த பட்ஜெட்டை பற்றி நேரமிருந்தால் இன்று மாலை எழுதுகிறேன். பொதுவாக சொல்லப்போனால், இந்த பட்ஜெட் அவ்வளவு மோசம் இல்லைதான். இதைபோய் நாம் ஏன் கொடுக்கணும்னு நினைச்சிதான் நம் பிரதமர் நகர்ந்து விட்டாரா என தெரியவ்லலை. 🙂
ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் ஆரம்பித்து மெள்ள மெள்ள மீண்டு வருகின்றன. நம் சந்தையில் இன்றும் பட்ஜெட் பாதிப்பு இருக்கும். முதல் பகுதிக்கு பிறகு மீள வாய்ப்பிருப்பதாக எண்ணுகிறேன். 75 புள்ளிகள் சடாரென இறங்காத வரை சந்தைக்கு பாதிப்பு இருக்காது என நினைக்கிறேன்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் கொண்டு வந்த மாதிரி தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எப்படி இந்த பட்ஜெட்டில் கொண்டு வருவார்கள்? இரண்டு மாதங்கள் என்பது சற்று நீண்ட காலம். மக்கள் மறந்து விடமாட்டார்களா?
இது போன்ற பொருளாதார ஊக்கங்கள் தனியாக பின்னர் அறிவிக்கப்படும். அநேகமாக பிரதமரால் அறிவிக்கப்படும் என நினைக்கிறேன். அடுத்த பிரதமர் வேட்பாளரும் இவர்தான் என அறிவித்திருக்கிறார்கள். இதை கேட்டுதான் அவருக்கு உடல்நலம் சீர்குலைந்துவிட்டது எனவும் தலைநகரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
சிமென்ட் மற்றும் கட்டுமானம் சார்ந்த துறைகள் இன்று சிறிது ஏற்றம் காணலாம். பட்ஜெட்டை மேலோட்டமாக படித்து பார்க்கும்பொழுது அவ்வாறு தோன்றுகிறது என்பதால் இத்துறைகள் இன்று ஒரு சிறிது ஏற்றம் காணும் என நினைக்கிறேன். முழுக்க முழுக்க புரிந்து கொள்ள குறைந்தபட்சம் ஒரு வாரமேனும் எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். அதற்கு முன் வரும் எல்லா விமர்சனங்களும் மேலோட்டமாக தான் இருக்கும்.
இன்றைய நமது சந்தை -68 முதல் 82 வரை ஆடும் என நினைக்கிறேன். இவ்வளவு கேப் ஏனென்றால் சந்தையின் வால்யூம் இன்னும் குறைவாக இருப்பதால் சந்தையை வெகு எளிதாக அலைகழித்து விட முடியும். சில கோடிகள் கையில் இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு நிப்டி பங்குகளை உங்களால் ஆட்டுவிக்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது.
Read Disclaimer.
Good Morning To You All!
Recent Comments