13-02-2009

February 13, 2009 at 8:32 am 12 comments

      நேற்றைய அமெரிக்க 200 புள்ளிகளை இழந்து முதல் பாதியில் தடுமாறிக் கொண்டிருந்தது.  பிற்பாதியில் மீண்டு வெறும் ஏழே புள்ளிகளை மட்டுமே இழந்து முடிந்துள்ளது.  இதனை ஊக்கமாக கருதி தற்சமயம் ஆரம்பித்திருக்கிற ஆசிய சந்தைகள் ஏறுமுகமாகவே ஆரம்பித்திருக்கின்றன.

     நம் சந்தை 2875 என்ற நிலையில் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறது.  நானும் கடந்த சில நாட்களாக வங்கி துறை பங்குகள் ஏற்றம் காணும் என சொல்லி வந்திருக்கிறேன்.  ஏனோ அதற்கு வாய்ப்பிருந்தும் இதுவரை இன்னும் நடக்கவில்லை.  இன்றாவது நடக்குமா? என எதிர்பார்க்கிறேன்.

     இன்றைய சந்தை ஏறுமுகமாக ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.  முடிவும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன்.   நேற்றைய சந்தையில் முதல் பாதியில் ப்ளாட்டாக இருந்தாலும், பிற்பாதியில் ஏற்பட்ட சிறிய  செல்லிங் பிரஷர் அமெரிக்க ப்யூச்சர்ஸ் பாதிப்பால் ஏற்பட்டது.  அதை நம் சந்தையால் சமாளிக்க முடியாமல் 30 புள்ளிகளை இழக்க வேண்டியதாயிற்று.

    இன்றைய நமது சந்தை 72 முதல் -28 வரை ஆடும் என நினைக்கிறேன்.  முடிவு சுபமாகதானிருக்க வேண்டும். பார்க்கலாம்.

    300-வது பதிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என காலையில் ஒரு முக்கிய வேலையிருந்தபோது (தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது) எதேச்சையாக கண்டுபிடிக்க நேர்ந்தது.  300- வது பதிவை சிறப்பு பதிவாக போடலாமா (நிறைய வேலை மெனக்கெடும்) அல்லது சிரிப்பு பதிவாக போடலாமா (இது கொஞ்சம் எளிது) என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  நீங்கள் போடும் எல்லா பதிவுகளுமே சிறப்பானது தானே என பின்னுட்டம் இடும் நேயர்களின் வலைப்பூக்களில் பதிலுக்கு நான் மூன்று பின்னுட்டங்கள் இடுவேன் என இச்சமயத்தில் வாக்களிக்கிறேன்.

Read Disclaimer.

Good Morning To You All!

Advertisements

Entry filed under: Market Analysis.

12-02-2009 வேதாள நகரம் – 13 வேதாள நகரம்

12 Comments Add your own

  • 1. Karthikeyan G  |  February 13, 2009 at 9:33 am

    நீங்கள் போடும் எல்லா பதிவுகளுமே சிறப்பானது தானே

  • 2. panguvaniham  |  February 13, 2009 at 9:45 am

    300 வது பதிவை நெருங்கி விட்டீர்களா…வாவ்…வாழ்த்துகள்…

    சநதைநிலவரங்களாயிருந்தாலும்,பிற விவகாரங்களாயிருந்தாலும் சரி, தினமும் பதிவினை படித்து முடிக்கும்போது ஒரு புன்னகையை வரவைக்கிறீர்கள், அதில்தான் உங்களின் வெற்றி இருக்கிறது….இழையோடும் நகைச்சுவையுடன் தொடரட்டும் உங்கள் பணி…

    -சரவணக்குமார்.

  • 3. Jaffer  |  February 13, 2009 at 10:12 am

    300வது பதிவை நோக்கிச் செல்லும் உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    உங்களின் எல்லா பதிவும் சிறப்பானதுதானே! அதனை விட சிறப்பானது, எப்போதாவது நீங்கள் எழுதும் உங்களின் Post Market Analysis.

    300 என்ன? 3000ம் பதிவுக்கும் நாங்கள் உங்களுக்கு வாழ்த்து சொல்லுவோம், உங்கள் வலைப்பூவை பின் தொடர்ந்துக் கொண்டே இருப்போம்.

    என்றும் அன்புடன்,
    Jaffer.

  • 4. batcha  |  February 13, 2009 at 10:56 am

    wow……wht a milestone தொடரட்டும் உங்கள் பணி…

  • 5. vimal  |  February 13, 2009 at 11:11 am

    thank you.

  • 6. ravishankar  |  February 13, 2009 at 8:22 pm

    உங்களின் எல்லா பதிவும் சிறப்பானதுதான் வாழ்த்துகள்

  • 7. ramprasad.v  |  February 13, 2009 at 9:50 pm

    Hi

    Congrats..

    //;;நீங்கள் போடும் எல்லா பதிவுகளுமே சிறப்பானது தானே என பின்னுட்டம் இடும் நேயர்களின் வலைப்பூக்களில் பதிலுக்கு நான் மூன்று பின்னுட்டங்கள் இடுவேன் என இச்சமயத்தில் வாக்களிக்கிறேன்.;;//

    what do u do JACK???

    As i don’t have a personal blog……

    😉

    நகைச்சுவை இன்றி அமையாது ஜோஸ் பதிவு – புது மொழி.

  • 8. விக்னேஷ்குமார்  |  February 13, 2009 at 10:28 pm

    உங்களின் எல்லா பதிவும் சிறப்பானதே!

  • 9. sharehunter  |  February 13, 2009 at 11:00 pm

    நன்றி, நண்பர்களே. கடும் வேலை பளுக்கிடையிலும் இந்த வலைப்பூவை படித்து பின்னுட்டம் இட்டதற்கு நன்றி.

    கார்த்தி, சரவணகுமார், ஜாபர் – உங்கள் அனைவருக்கும் நான் மூன்று பின்னுட்டங்கள் கடன். கூடிய விரைவில் தீர்த்து விடுகிறேன்.

    மற்ற நண்பர்கள் விரைவில் வலைப்பூ ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.

    ஒரு டைரிக் குறிப்பு மாதிரி ஆரம்பித்தத இந்த வலைப்பூவானது இவ்வளவு பதிவுகள் அளவிற்கு வந்திருக்கிறதே என காலையில் ஆச்சர்யப்பட்டதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    மீண்டும் நன்றி நண்பர்களே!
    .

  • 10. simba  |  February 14, 2009 at 12:07 am

    ரொம்ப சந்தோசமா இருக்கு ஜோஸ் சார்..

    300 அடிக்கும் நாளில் சந்தைகள் 300 புள்ளிகள் அடித்து உங்கள் வணிகத்தில்(எங்களுக்கும் சேர்த்து தான்) பயனளிக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்..

    அருண்..

  • 11. nr  |  February 14, 2009 at 10:27 am

    நீங்கள் போடும் எல்லா பதிவுகளுமே சிறப்பானது

  • 12. தண்டபாணி ராஜகோபால்  |  February 15, 2009 at 11:08 pm

    வனக்கம். தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். நன்றாக உள்ளது. தங்களுக்கு தெரிந்த பங்கு வர்த்தக செய்திகளையும்,தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்க்கு ரொம்ப நன்றி. இந்த இடத்தில் என் கருத்தை சொல்லிகொள்ள விரும்புகிறேன். பங்கு மார்கெட் அல்லாத செய்திகளை அறவே தவிர்த்து விட்டு பங்கு செய்திகளையே வெவ்வேறு கோணங்களில் பிரகாசமாக எழுதலாம் என்பதுதான். நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: