Archive for February 13, 2009
13-02-2009
நேற்றைய அமெரிக்க 200 புள்ளிகளை இழந்து முதல் பாதியில் தடுமாறிக் கொண்டிருந்தது. பிற்பாதியில் மீண்டு வெறும் ஏழே புள்ளிகளை மட்டுமே இழந்து முடிந்துள்ளது. இதனை ஊக்கமாக கருதி தற்சமயம் ஆரம்பித்திருக்கிற ஆசிய சந்தைகள் ஏறுமுகமாகவே ஆரம்பித்திருக்கின்றன.
நம் சந்தை 2875 என்ற நிலையில் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறது. நானும் கடந்த சில நாட்களாக வங்கி துறை பங்குகள் ஏற்றம் காணும் என சொல்லி வந்திருக்கிறேன். ஏனோ அதற்கு வாய்ப்பிருந்தும் இதுவரை இன்னும் நடக்கவில்லை. இன்றாவது நடக்குமா? என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய சந்தை ஏறுமுகமாக ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். முடிவும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். நேற்றைய சந்தையில் முதல் பாதியில் ப்ளாட்டாக இருந்தாலும், பிற்பாதியில் ஏற்பட்ட சிறிய செல்லிங் பிரஷர் அமெரிக்க ப்யூச்சர்ஸ் பாதிப்பால் ஏற்பட்டது. அதை நம் சந்தையால் சமாளிக்க முடியாமல் 30 புள்ளிகளை இழக்க வேண்டியதாயிற்று.
இன்றைய நமது சந்தை 72 முதல் -28 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவு சுபமாகதானிருக்க வேண்டும். பார்க்கலாம்.
300-வது பதிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என காலையில் ஒரு முக்கிய வேலையிருந்தபோது (தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது) எதேச்சையாக கண்டுபிடிக்க நேர்ந்தது. 300- வது பதிவை சிறப்பு பதிவாக போடலாமா (நிறைய வேலை மெனக்கெடும்) அல்லது சிரிப்பு பதிவாக போடலாமா (இது கொஞ்சம் எளிது) என யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போடும் எல்லா பதிவுகளுமே சிறப்பானது தானே என பின்னுட்டம் இடும் நேயர்களின் வலைப்பூக்களில் பதிலுக்கு நான் மூன்று பின்னுட்டங்கள் இடுவேன் என இச்சமயத்தில் வாக்களிக்கிறேன்.
Read Disclaimer.
Good Morning To You All!
Recent Comments