Archive for February 11, 2009
11-02-2009
நேற்று எழுதியது போல அமெரிக்க சந்தை கொடுத்த பொருளாதார ஆக்கங்கள் பத்தாது என கருதி ஒரு டைவ் அடித்து 380 புள்ளிகளை இழந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் அதே திசையை நோக்கி செல்கின்றன.
நம்முடைய சந்தையும் இதனால் பாதிக்கப்படும். ஏற்கெனவே சொல்லியிருந்தது போல சந்தையில் உள்ளூர ஒருவித பயம் இருக்கிறது. அல்கொயிதா இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என்ற சொல்லியிருப்பதை ஊடகங்களில் தற்போது பெரிது படுத்தி காட்டப்படுகிறது. இதன் மறைபொருள் என்ன என்பதை இனிதான் காண வேண்டும்.
இன்றைய தினம் நம் மத்திய அரசிடமிருந்து ஏதேனும் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறேன். ஆதலால் நம் சந்தையை பற்றிய கணிப்பு எதுவும் இன்று வெளியிடப்போவதில்லை.
சந்தையின் ஆரம்ப கட்டத்தில் விற்கும் முயற்சி அதிகமாக இருக்கும். அது சந்தையை சரிவுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு இருக்குமா என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய தலைகளை பொறுத்தே அமையும்.
வங்கி வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பான அறிவிப்பு வரும் பட்சத்தில் சந்தையானது யு டர்ன் எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
எச்சரிக்கையாக இன்றைய சந்தையை அணுகுங்கள்.
Read Disclaimer.
Good Morning To You All!
Recent Comments