நான் கடவுள் – திரை விமர்சனம்

February 7, 2009 at 11:18 pm 21 comments

      முதல் வாரமே தமிழ் படம் பார்க்கக் கூடாது என புதிய வருட தீர்மானம் நிறைவேற்றியிருந்தேன்.  தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்கள் போல்  விதி விலக்குகள் கொடுக்கலாம் என முடிவு செய்து பாலாவின் நான் கடவுள் படம் இன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்தேன்.

     நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்றதால், படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவித ஏமாற்றமே இருந்தது.  நிறைய பேருக்கு அப்படிதான் இருக்குமென நம்புகிறேன்.  படம் பார்த்து விட்டு நிறைய நேரம் யோசிக்கும்போது இன்னும் அதிகம் ஏமாற்றமாக இருக்கிறது. 

    படத்தின் கதை.  ஜெயமோகனின் நாவலான ஏழாவது உலகத்தின் கதை மாந்தர்களுடன் ஒரு அகோரி வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் கதை.  பிச்சைகாரர்களின் இருண்ட உலகத்தை பற்றி தமிழில் வெளிவரும் முதல் படம் இதுவாகதான் இருக்கும் என நினைக்கிறேன்.  ஆனால் வெகுஜன அம்சங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலா.

    இந்த திரைப்படம் வருவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் படத்தின் தொகுப்பில் தளர்வுகள் நிறைய தென்படுகின்றன.  குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சிகள் மற்றும் இறுதிக் காட்சிகள். ஆர்யாவை  அகோரி சாமியார் வேடத்தில் ஒன்ற வைக்க நிறைய முயற்சிகளை இயக்குநரும் நடிகரும் முயன்றிருக்கிறார்கள்.  அந்த உழைப்பு நன்றாகவே தெரிகிறது.  ஆர்யா தொழில்முறை நடிகர்.  நிறைய உழைத்திருக்கிறார். ஆனால் இத்திரைப்படத்தில் மற்ற சக பாத்திரங்கள் மிக அநாயசமாக நடித்திருக்கிறார்கள். ரூத்ரனின் அப்பாவாக வரும் பாத்திரத்தை தவிர. இந்த பெருமையெல்லாம் இயக்குநருக்குதான் செல்ல வேண்டும்.

   படத்தின் வசனங்களை (அனைத்தையுமா என்று கேட்டால் கேள்விக்குறிதான்) எழுதியவர் ஜெயமோகன்.   நறுக்கு தெறித்த, வட்டார மொழியில் உரையாடல்கள் வந்திருக்கின்றன.  சிறந்த வசனத்திற்கான விருது கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம், ஜெயமோகன்.  இன்னும் வில்லு மற்றும் சக்கரக்கட்டி படத்தின் வசனங்கள் தான் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

    இதர கதை நாயகர்களில் மனதை கவர்பவர்கள்.  கவிஞர் விக்கிரமாதித்யன்.  மிக சிறப்பான உடலசைவு.  உங்கள் கவிதையை போல நடிப்பும் நன்றாக உள்ளது.  குருவி ரொட்டி சாப்பிடும் குழந்தை.  அதன் பார்வையை படமாக்கிய ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன். அட்டகாசமாக சிரிக்கும் அந்த சிறுவன்.  மொட்டைத் தலை குரூர வில்லன்.  வெட்க சிரிப்பு சிரிக்கும் எருக்கு.  கண்பார்வை இல்லாத பூஜா.  இன்னும் சில பாத்திரங்கள் விட்டு போயிருக்கலாம்.  விளிம்பு நிலை மனிதர்களாக இவர்கள்  வெளிப்படுத்தியிருக்கும் நடிப்புத் திறன் மிகச் சிறப்பாக உள்ளது.   இந்த படத்தில் நடித்த பிறகு இவர்களின்   வாழ்க்கை முறை சீராக  இயக்குநர் பாலா உதவியிருப்பார்.  இதுவரை அதை வெளியில் சொல்லவில்லையென்றாலும் அதற்கான பாராட்டையும் அவருக்கு அளித்தாக வேண்டும்.

         உலகப் புகழ் பெற்ற இந்திய சென்சாருக்கு பயந்து நிறைய காட்சிகளை (உதாரணத்திற்கு அகோரியின் லஞ்ச்)  இலைமறை காயாக காட்டியிருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தை காணும் கலைக் கண்களில் எத்தனை ஜதை கண்களுக்கு இலையை விலக்கி பார்த்து புரிந்துக் கொள்ள போகிறது என தெரியவில்லை.  இந்த படத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்.  ஆனால் அவையெல்லாம் இந்த படத்தை பற்றிய சலிப்பினையே ஏற்படுத்தும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

        பாலா, இளையராஜா,ஆர்தர் ஏ வில்சன், ஜெயமோகன் இவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் பார்த்த பிறகு நமக்கு ஏற்படும் உணர்வுகளால்  மனம் கனத்து ஒருவித சலிப்புடன் வெளிவர நேரிடும். இதனால் இத்திரைப்படம் வணிக ரீதியாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.  எனினும் இது போன்ற புதிய களனை தேர்ந்தெடுத்து, மிக நேர்த்தியான கதை மாந்தர்களை உலவ  விட்டதற்காக இத்திரைப்படத்தினை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே ஆக வேண்டியது அவசியம்.  இல்லாவிட்டால் வில்லு 2க்கு தயாராகுங்கள்.

பின்னிணைப்புகள் :

       கதை நாயகர்களில் ஒருவரான அந்த அழகிய பாப்பாவை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதை படிக்க மதுபாலா.

     ‘நான் கடவுள்’ படத்தின் நீளம் எதற்காகவோ வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது.  காசியில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிகிறேன்.  இந்த படம் தயாரிப்பாளரால் டிவிடியாக வரும்போது நீக்கப்பட்ட பல காட்சிகளை இணைத்தால் ஒருவேளை இந்த படம் தெரிவிக்க விரும்பும் உணர்ச்சிகளை  பார்வையாளர்கள் புரிந்து கொள்ள இயலலாம்.

      நடிகர் ஆர்யா இந்த படத்திற்கு முன் ஒரு Boyish Hero ஆக அறியபட்டார்.  இந்த படம் அவருக்கு ஒரு மெச்சூரிட்டியை ஏற்படுத்திக் கொடுக்குமென்றால், அந்த மூன்று வருடங்கள் ஒன்றும் அவருக்கு பொருட்டில்லை என நினைக்கிறேன்.  இதற்கு அவரின் அடுத்த திரைப் படத்தை பார்க்கும்போதுதான் தெரியும்.

       இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளில் மறைபொருள் பற்றி முழுக்க எழுதினால் பார்வையாளருக்கு நிறைய சலிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  அக்காட்சி வருவதற்கு முன்னே அவரின் மனது ஒருவித பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கும்.  அட, ஜெயமோகன் ஒரு இந்துத்துவ வாதியப்பா.  இது போன்ற தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி விடக்கூடும்.  

         விமர்சனம் எழுதும் திரைப்படத்தினை உலகத் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு தப்பிட்டு எழுதுவது தற்சமயம் ஒரு புதிய வகை திரை விமர்சனம் எழுதும் வகையாக இருக்கிறது.   அதனை தவிர்த்து இருக்கிறேன்.

Advertisements

Entry filed under: திரை விமர்சனம்.

06-02-2009 09-02-2009

21 Comments Add your own

 • 1. RAM  |  February 7, 2009 at 11:44 pm

  எல்லாரும் நல்ல படம் அப்டின்னு தான் பதிவு போடுகிறார்கள்…திரைக்குச்சென்றூ படம் பார்பவர்கள் கவனிக்கவும்…!!! நல்ல பதிவு….!!!

 • 2. SHANKAR VISVALINGAM  |  February 8, 2009 at 12:37 am

  நண்பரே,

  ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன்,பண்டாரமும், அவர்கள் உதவியாளர்களும், பிச்சைக்காரர்களும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். யானைக்கால் நோய் வந்த விதையுடைய அந்த மலையாள பிச்சைக்காரன் பாத்திரம் இன்று நினைத்தாலும் சிரிக்க வைக்கிறது. குரூரமான உலகமொன்றை எங்கள் உலகத்தில் வைத்துக்கொண்டு கண்மூடிகளாகத்தானே இருக்கிறோம். ஜெயமோகன் அப்படிகளில் படுத்துறங்கியவர் என்பதினால் அந்த சிறப்பான நாவல் உருவாகியது.

  நான் கடவுள் படத்தினை நான் பார்க்கவில்லை, உடனடியாக பார்க்கப்போகும் வாய்ப்புக்களுமில்லை.
  நாவலைப்படித்தவன் எனும் ஒர் காரணத்தினால் சில வேளைகளில் நானும் ஏமாறலாம். இருப்பினும் இம்முயற்சியை வரவேற்கும் முகமாக நானும் நண்பர்களை அரங்குகளிற்கு சென்று படத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் நாவலையாவது படியுங்கள்.

  ஜெயமோகன், தான் மட்டும் தனித்து தெரியக்கூடாது எனும் காரணத்திற்காக அடக்கி எழுதியிருப்பார் என்றே தோன்றுகிறது.வணிகவெற்றி எனும் சாபம் எப்போது தமிழ் சினிமாவை விட்டு விலகுமோ. வில்லு 2 மட்டுமல்ல, விட்டால் குருவிவில்லே வரும். விஜயிருக்க, அவரின் சேனையிருக்கப் பயமேன்.

 • 3. Dr.Sintok  |  February 8, 2009 at 12:59 am

  நான் இப்போதான் படம் பார்த்துவிட்டு வறேன்………. படம் பிடிக்க வில்லை… நான் பர்த்த படத்தில் அம்மா உன் கோவிலில் மற்றும் மாத உன் கோவிலில் பாடல்கள் இல்லை…இருதி 30 நிமிடம் சொத்ப்பல்…… இதுக்கு 2.5 ஆண்டு ரொம்ப ஓவர்

 • 4. karki  |  February 8, 2009 at 1:39 am

  //இல்லாவிட்டால் வில்லு 2க்கு தயாராகுங்கள்.
  //

  இதில் வில்லு எங்கிருந்து வந்தது? அப்படியே வில்லு 2 வந்தாலும் நீங்கள் அதை தவிர்க்கலாமே!! கட்டாயம் பார்க்க சொல்லி யார் அழைத்தார்கள்? இப்போதுதான் நான் கடவுள் பார்த்துவிட்டு வருகிறேன். 33 ஆண்டுகள் ஆர்யாவை முடக்க வேண்டிய அவசிய்மே இல்லை. பாலா ஒரு நல்ல படைப்பாளீயாக இருக்கலாம். ஆனால் நிச்சய்ம் நல்ல இயக்குனர் அல்ல. இந்த மாதிரி படஃமெடுக்க மட்டுமல்ல படம் பார்க்கவும் பலாவால் மட்டுமே முடியும். நான் ‘பாலா’ அல்ல.

 • 5. sharehunter  |  February 8, 2009 at 9:36 am

  கார்க்கி,

  எனக்கென்னமோ இயக்குநர் பாலா ஆர்யாவிற்காக அவ்வளவாக மெனக்கெடவில்லை என தோன்றுகிறது. சக பாத்திரங்களை கதை மாந்தர்களாக உலவ விட்டதற்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்.
  வணிக ரீதியான ப்ரஷர் தாங்க முடியாமல் கூட இந்த படத்தை ரீலீஸ் செய்திருக்கலாம் அல்லவா? இது போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றால்கதாநாயகன் அடித்து அடியாட்கள் ட்ரான்பாஸ்மரில் விழ வைக்கும் காட்சி இனி எடுக்கும்போது ஒருநிமிடம் யோசிப்பார்கள். இல்லையா?

 • 6. Jaffer  |  February 8, 2009 at 11:29 am

  எல்லாம் சரிதான், உங்களை வேதாள நகரம் எழுதச்சொன்னால், நீங்கள் ஏழாவது உலகம் (அதான் நான் கடவுள்) படத்தை பார்த்து வந்து, எழுதி இருக்கிறீர்கள். நியாயமா? ரஃபீக் ராஜா, விஷ்வா, சதீஷ் எல்லாம் எங்கே? இதெல்லாம் கேட்க மாட்டீர்களா?

 • 7. திருமூர்த்தி சுப்ரமணியம்  |  February 8, 2009 at 9:59 pm

  நான் கடவுள் படத்தில என்ன பிடிக்கல? ஒரு வேளை ஆர்யா மனசு திருந்தி பூஜாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டு விட்டு; காசி சாமியாரின் ஆசியில் பூஜாவிற்கு பார்வை வரவைத்து அதன் பிறகு வில்லனை துவம்சம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? குத்து பாடலை பேரரசு எழுதி அதனை அழகான தமிழில் உதிட் நாராயணன் பாடியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்லா இருந்திருக்குமோ? சிந்திக்கலான கூட பரவால…சிந்திக்கவாவது விடுங்கப்பா.

 • 8. Rafiq Raja  |  February 9, 2009 at 1:56 pm

  ஜாபர் அன்பர் நம்மை பெயர் சொல்லி அழைத்த பின்பும் நாம் தலையிடாமல் இருக்க முடியாது என்பதால், இதோ என் தாக்குதல் – கதாசிரியர் வர வர வேதாள நகரத்தை பாராமுகம் காட்டி வருகிறார். இப்போது நான் கடவுளுக்கு விமர்சனம் மட்டும் செய்ய மட்டும் நேரம் கிடைக்கிறதா ? உடனே குதிரை வீரர்கள் சங்கத்தில் இவரை பற்றி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டியது தான் போல.

  இருந்தாலும் படம் பற்றி கூற என்னிடம் ஒன்றும் இல்லை. வில்லு போன்ற படங்களில் இருந்து காப்பாற்ற பாலா ஒன்றும் முனைந்த மாறி தெரியவும் இல்லை. அவர் மனம் போக்கில் படம் எடுத்து விட்டு வெகு ஜன அபிப்ராயத்துக்கு ஆசை படுவது அவ்வளவு சரியாக தெரியவில்லை.

  இப்படி ஒரு படத்திற்காக அவர் வளர வேண்டிய ஆரியா போன்ற நடிகரின் 2,3 வருடங்களை கால விரயம் ஆக்காமல் இருந்து இருக்கலாம்.

 • 9. SANTIL  |  February 9, 2009 at 6:10 pm

  THERE IS NO LOGIC AND MAGIC .BUT,THERE IS SOME VIBRATION.

 • 10. Karthikeyan G  |  February 9, 2009 at 8:20 pm

  பார்க்கலாம்.. C.D வரட்டும் 🙂

 • 12. Santhosh  |  February 10, 2009 at 11:15 pm

  Ada pongappu!!!! Jora lollyaa pichayedutha maathiri irundhuchuppa indha padathai paarthathu!!!

 • 13. perinba  |  February 11, 2009 at 12:07 am

  படத்தையும் மீறி சில விஷயங்கள் இருக்கின்றன அதையும் விமர்சித்து இருக்கலாம்

 • 14. நிராதன்  |  February 24, 2009 at 2:40 pm

  உங்களுக்கெல்லாம் ஹீரோ இருபது பேரை போட்டு அடிக்கிற மாதிரி கதை எடுத்தா தான் பிடிக்கும். அதோட நயந்தாரா two piece ஓட வந்து எல்லாத்தையும் காட்டினா தான் சந்தோசம். உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரைக்கும் நல்ல படைப்புக்கு வரவேற்பிருக்காது. இந்த படத்தில பாலா ஒவ்வொருத்தரையும் செதுக்கியிருக்கிறார். முதல்ல அதை பாராட்டுங்கப்பா. அது சரி வில்லு படத்துக்கு முதல் நாள் அடிபட்டு ticket வாங்கின கூட்டம் தானே நீங்கள் எல்லாம்.

 • 15. surya  |  February 27, 2009 at 11:51 pm

  நிறைய எதிர்பார்த்து சென்றால் சொதப்பலாகத்தான் தெரியும். பா.ராவின் பதிவை படித்துவிட்டு அரைமனதாகத்தான் பார்க்க சென்றேன். ஆனால் பாலாவின் ரசிகன் அல்ல நான். நல்ல சினிமா ஆதங்கன். உலக சினிமா காதலன். மஜித் மஜிதியையும் கொரிய இயக்குநர் கிம் கிடக்கையும் நேசிப்பவன்.

  இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் என எத்தனை பேட்டிகளை நம்பி ஏமாந்தது போதும்.

  இன்று பாடல் பதிவுடன் ஆரம்பம் என்று பாண்டிபஜார், கோடம்ப்பாக்கம் சுவரெல்லாம் ஒட்டிய பல போஸ்டர்களை பார்ந்து பார்க்க வேண்டும் என எண்ணி நிறைய செலவு செய்துவிட்டு படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன். ஆனால் பாலா ..??? அப்படி செய்யவில்லை என்றுதான் கூற முடியும். எதையும் எதிர்பார்த்து செல்லவில்லை.

  பாலாவின் மற்ற மூன்று படங்களை விட இதில் அழுத்தம் அதிகம். ஒருவேளை ஜெயமோகனின் வசனமும் ராஜாவின் இசையும் ஆர்த்தரின் கைவண்ணமும் நன்றாக இருந்ததால் இருக்கலாம்.

  சிறப்பு சப்தம் ராஜீ ..வாவ்.. Xlent performance. உலக படங்களுக்கு டெக்னீஷியன்கள் பலர் சென்னைகாரர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

  Ganesh Kumar has won an award for his soundtrack for the Hollywood flick “9 Lives of Mara” இதில் என்ன சிறப்பு இவர் சென்னையை சேர்ந்தவர் மட்டுமல்ல. மேற்கு மாம்பலத்தில் உட்கார்ந்து கொண்டே இந்த திரைப்ப்டத்திற்கு சவுண்ட் மிக்சிங் செய்தவர். விருது வாங்க மட்டுமே அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

  இது போல பலர் இருக்கிறார்கள். நாம் கண்டு கொள்ளாத பலரை ஹாலிவுட் அணைத்து அவார்டு வாங்கி கொடுத்து அனுப்புகிறார்கள்.

  ஒரு தேசிய விருது கூட கொடுக்காத கண்ணதாசனையும் நாகேஷ் அவர்களையும் பெருமை படுத்தியவர்கள் இந்தியர்கள்..

  வித்யாசமாகவும் யதார்த்தமாகவும் இருக்கவேண்டும் என நினைக்கும் மிகச்சிலரையும் நாம் கண்டுகொள்ளாவிட்டால் சுந்தர்.சி யின் 100வது படம் வெகுதூரத்தில் இல்லை. { Minimum Gurantee }அதை டைரக்ட் செய்ய போவது பேரரசுவாக இருந்துவிட்டு போகட்டும். அதில் தமிழ் ரசிக பெருமக்கள் திளைக்கட்டும்.

  வாழ்க தமிழ் சினிமா…

 • 16. rathan  |  December 31, 2009 at 6:40 pm

  ர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:

  ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:

  “இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” அல்லது “வாடி என் கப்பக்கிழங்கே”.

  (நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)

  1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -“என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா” (இதுவும் நினைவிலிருந்துதான்).

  திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, “சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது” என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். “ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா” என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.
  இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.

  இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை – இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.

  பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் – அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.

  http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html

  ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

  இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

  இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் – இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.

  தற்போதைய சர்ச்சை – பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் –

  “I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job’ என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.

  இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் – “நான் பொல்லாதவன்” எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், “நாடு பார்த்ததுண்டா” என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து – அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.

  அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.

  நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

 • 17. lks.sundaram  |  January 28, 2010 at 2:49 pm

  Every man think present & future plan : they wantto live good life. But every day chaging the human charactors depontupon day to day activities of man relationship life.

  Nobody try to know Who am I ???????????
  Ans : fully moulded of love to every one but can’t able to love to every things Becuase We does not’t the love.
  sombody not feel in the self love.
  When we relase the ourself what we have what is me what we do what we will do to other like me
  The above sujects simple you just know your self everyman think like this it will shown path of enlightment happen in every soul.

  1.society
  2.family
  3.friends
  4.business
  5.activities
  6.goodwill
  7.timing sense
  8.no

 • 18. lks.sundaram  |  January 28, 2010 at 3:08 pm

  Nothing but nonsens. U just know your senses – find out with self interest. When you ready to know about you & enlightment “Guru near by u with help to your birth fullfilment & enlightment will appear immediately in your presence -lks.

  ANY BODY WANT TO KNOW U ?
  MY PRESENCE WILL BE FOLLOWS :

  HOW REACH

  1.SELF INTEREST
  2.PRACTICAL LIFE – TEACH YOU HOW TO LIVE
  3.THINKING IS VERY MUST
  4.SEARCH YOUR SELF
  5.GURU ALLWAYS WITH U

  LKS

 • 19. lks.sundaram  |  January 28, 2010 at 3:34 pm

  FIND WHAT IS THE LOVE ?
  YOU SHOULD LOVE IN YOUR SELF
  WHEN LOVE YOUR LIFE AUTOMATICALLY GRACEFUL.
  WHEN YOU FEEL OTHERS PAIN ?
  GRACEFUL HEART MELTED.
  WE HAVE SEEN TEARS FROM YOUR EYES.

  YOUR LIFE SHOWN GOOD PATH TO EVERYBODY
  TO EVERY THINGS

  1.WHAT YOU THINK ?
  2.YOU FIND WHAT IS MEAN BY THINK ?
  3.THINK COME FORM WHERE ?
  ALL IT WILL COME WITH YOU

  YOU IN ALL
  ALL WITH YOU
  – THE STAGE IS LIKE EVERY THINKINGS LIKE ME

  LKS.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: