Archive for February 5, 2009
05-02-2009
கடந்த ஒரு வாரமாகவே சந்தையின் வால்யூம் மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் ஒதுங்கி விட்டமாதிரியே தோன்றுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், ம்யூட்சுவல் நிறுவனங்களுமே தான் வணிகம் செய்கின்ற மாதிரி தோன்றுகிறது. இதனால் சந்தை எவ்வித டெக்னிகல் லெவலுக்கும் பிடி கொடுக்காமல் அலை பாய்கிறது.
நிப்டி பங்குகளில் முக்கியமான பங்குகளை பொறுத்த வரை அதிகப்படியான விற்றது என்ற நிலையே இருந்து வருகிறது. மேலும், அமெரிக்க அரசின் பொருளாதார மீட்பு திட்டங்கள் மற்றும் நம் அரசின் திட்டங்களுக்காகவே சந்தை காத்துக் கொண்ருப்பதாக படுகிறது. அமெரிக்க சந்தை 8000 என்ற நிலையை சுற்றியே ஊசலாடுகின்றது.
இன்றைய நமது சந்தை சிறிதளவு பின்னடைந்து தொடங்கினாலும், மெல்ல மெல்ல 10 முதல் 15 புள்ளிகளில் ஆடிக் கொண்டிருக்கும். ஏதாவது செய்திகளோ அல்லது வதந்திகளோ தான் இன்றைய சந்தையை வழி நடத்தும் என தோன்றுகிறது.
நம் சந்தையானது 2900 என்ற நிலையை அடைய இன்னும் வாய்ப்பிருப்பதாகவே நான் நம்புகிறேன்.
ஆசிய சந்தைகளும் கீழிறிங்கி இருந்தாலும் பெரிய அளவில் (இது எழுதிக் கொண்டிருக்கும் வரையில்) இறங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய சந்தை -45 முதல் 78 வரை ஆடலாம் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
Read Disclaimer.
Good Morning to You All!
Recent Comments