வேதாள நகரம் 12 – டூயட்

January 26, 2009 at 6:00 am 10 comments

       ஒரு கயவன் வீசியெறிந்த பிச்சுவா இலட்சிய வீரன் விஷ்வாவின் மார்பை நோக்கி வேகமாக வந்தது.

இது நடப்பதற்கு பதிமூன்று நிமிடங்களுக்கு முன்பு …….

      அறையில் அமர்ந்திருந்த இலட்சிய வில்லன் செழிக்கு அறையிலே அடைந்து கிடப்பது சோர்வாக இருந்தது. எனவே ஒரு பீர் வாங்கி வரலாம் என எண்ணி கீழே இருந்த பாருக்கு சென்றார்.

‘ஒரு பீர்  கொடுங்க. எவ்வளவு?’

‘மூன்று டாலர்கள் தான் சார். ஆனால் இப்போது கம்பெனி சார்பாக ஒரு புதிய தள்ளுபடி கொடுக்கிறோம். மூன்று பீர் பாட்டில்கள் வாங்கினால் வெறும் பத்தே டாலர்கள்தான்.’

‘அடடே, ரொம்ப நல்ல திட்டமா இருக்குதே. எனக்கு மூன்றே கொடுங்க. உங்களுக்கு எப்படி கட்டுபடியாகுது?’

‘ஏதோ உங்கள மாதிரி கஷ்டமருக்கு சேவை செய்யதான் நாங்க இருக்கோம்.’

     ஒரு பீர் பாட்டிலை சுவைத்துக் கொண்டே மாடிக்கு சென்ற செழி வழிமறித்து நிறுத்தியது கலவர சத்தம்.  போதையில் பீதியுடன் ஓடிய செழி நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்த சாட்டிலைட் போல பிச்சுவாவின் பாதையில் புகுந்தார்.

       விஷ்வாவின் நெஞ்சை நோக்கி வந்த பிச்சுவா செழியின் …  செழியின்…..செழியின் பின்னால் பாய்ந்தது.

‘அய்யோ’

    அலறியது யார்?  விஷ்வாவா?  செழியா?  இல்லை. கத்தியை எறிந்த கயவன் தன் குறி தப்பியதை எண்ணி அலறிய சத்தமே அது.

‘அய்யோ’

     அலறியது யார்?  கத்தியை எறிந்த கயவனா? விஷ்வாவா?  இல்லை.  செழியின் பின்னால் பாய்ந்திருந்த பிச்சுவாவை பிடிங்கி அந்த கயவனின் நெஞ்சை நோக்கி விஷ்வா விட்டெறிந்ததால் ஏற்பட்ட வலியில் செழி போட்ட அலறல்தான் அது.

‘அய்யோ’

      யோசிக்கவே வேண்டாம். இது பிச்சுவா அந்த கயவனின் காலில் பாய்ந்ததால் ஏற்பட்ட அலறல்.

‘அய்யோ’

     ஹலோ! இது ரொம்ப ஓவர்.  கதை படிக்கும்போது நீங்க ஏன் சத்தம் போடுறீங்க?

——————————————————————————————————

             ‘சதீஷ், என் உயிரை காப்பாற்றியவர் இவர்.  இவருக்கு சிகிச்சை அளித்து இவரின் உயிரை நான் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளேன்.  ஒரு நல்ல டாக்டர் பக்கத்தில இருந்தா கூட்டிட்டு வாயேன்.’

         ‘யாருமே இல்லை.  நான்தான் இந்த சிக்கலான ஆபரேஷனை தனியா மேற்கொள்ள வேண்டும்’

     எல்லோரும் செழியை பரிதாபமாக பார்த்தனர்.  செழி மனதை உருக்கும் குரலில் சதீஷை கேட்டார்.

     ‘டாக்டர், இனி பெண்களை நான் கசமுசா செய்ய முடியுமா?’

     ‘தம்பி,  பிச்சுவா ஆழமாக பாய்ந்திருக்கிறது.  குறைந்தது ஆறு மாசம் எந்த பெண்ணும் உன்னை கசமுசா செய்யாமல் பார்த்துக் கொள்.’

      ‘எனக்கென்னவோ இந்த கதையில் உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது’ என கலீல் தன் உள்ளத்தை திறந்தார்.

——————————————————————————————————

         வேகமாக வந்த கோச்சு வண்டி அவர்களிடையே நின்றது.  கதவை திறந்த பாப்பா …..ச்சீச்சீ… ஸ்டெல்லா ‘அனைவரும் வண்டியில் ஏறுங்கள். கலவரம் இன்னும் பெரிய அளவில் வரும் போலிருக்கிறது. வாங்க,  ஓடி போய்டலாம்.’

       ஒரு இளம்பெண் இவ்வாறு சொன்னபிறகு அதை பெருந்தன்மையாக மறுக்க நம் இலட்சிய வீரர்கள் என்ன கனவான்களா? இல்லையே.  உடன் அனைவரும் செழியை கோச்சு வண்டியின் உள்ளே படுக்க வைத்து (மல்லாக்க) அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்.

     அந்த சமயத்தில் ஸ்டெல்லா கை நம் இலட்சிய வீரன் விஷ்வாவின் கையுடன் உரச, ஒரு கனவுலக டூயட் சிச்சுவேஷன்ஐ எப்படி தவற விட முடியும்? 

         பாடல் வகை = டூயட்     ஆண்=விஷ்வா,  பெண்=ஸ்டெல்லா இடம்=கனவுலகம் கோரஸ் கலீல் சதீஷ், செழி.

இராகம்=கபோதி,  பாடல் ஆசிரியர்=நாந்தேன்.  கோரஸ் வரிகளை எழுதியவர்=தற்சமயம் பெயர் தெரிவிக்க விரும்பவில்லை.

பெ :                               டேய் விச்சு, வாடா வாடா ஆ……..ஆ
                                          இச்சு ஒன்னு தாடா தாடா ஆ……..ஆ

    
சத்.கலீ.செழி கோரஸ்.     போங்கண்ணா விச்சு, குடுங்கண்ணா இச்சு

     
ஆ                                    விச்சு நான் வந்துட்டேன் ஆ……..ஆ
                                          பிச்சு பிச்சு நான் தந்துட்டேன் ஆ……..ஆ

சத்.கலீ.செழி கோரஸ்.    தள்ளிக்கடா விச்சு, நாங்க கொடுக்கப் போறம் இச்சு

      
பெ                                 நேத்து பெஞ்ச மழையிலே ஆ……..ஆ
                                       நனைஞ்ச எனக்கு அச்சு அச்சு ஆ……..ஆ

 

சத்.கலீ.செழி கோரஸ்.ஜிங்கு ஜிக்கு ஜிக்கு நாங்க பூசி விடுவோம் விக்ஸு

        
ஆ                               அச்சு அச்சு இருந்தாலும் நான் ஆ……..ஆ
                                     உனக்கு இச்சு இச்சு தரேன் ஆ……..ஆ
 
சத்.கலீ.கோரஸ். இச்சு இச்சு விச்சு, ஆஃப் பண்றம் லைட் சுவிட்ச்சு

பெ                                  எங்கப்பன் நொச்சு நொச்சுனு ஆ……..ஆ
                                         உன்னப் பாத்த பிச்சு பிச்சு ஆ……..ஆ

ஆ                                 அவன பாத்தா நான் நச்சு நச்சு ஆ……..ஆ
                                       அவந் மக உனக்கு தாரென் இச்சு இச்சு ஆ……..ஆ

————————————————————————————————

      கோச்சு வண்டி அந்த நகரத்தின் எல்லையை தாண்டிய உடனே கோச்சு வண்டியை ஒட்டிய ஒட்டுநர்  ‘வண்டிய எந்தபக்கம்  திருப்பணும்?’ என வினவினார்.

     ஸ்டெல்லா  நம் இலட்சிய வீரர்களை பார்க்க, அவர்களும் இவளை மையலுடன் பார்த்தனர்.  ஒரு ஐந்து நிமிடம் கழித்து குறுக்கே புகுந்த கோச்சு  வண்டியின் டிரைவர் ‘யோவ், புண்ணாக்குகளா, வண்டிய எந்தபக்கம் திருப்பறதுன்னு மேடம் உங்களை பாத்தா, இப்டி பதிலுக்கு ஏன்யா ரொமன்டிக் லுக் வூடுறீங்க’ என கேட்டு அந்த மையல் பார்வையை கலைத்தார்.

     விஷ்வா திரும்பி எஸ்கோபாரை காதில்  ‘நிறைய பிரச்சினைகள் வந்துக் கொண்டே இருக்கு.  இந்த கோச்சு வண்டி நம்ம கூடவே இருந்தா நல்லாருக்கும் இல்ல.  கிடைக்கிற புதையல்ல இவங்களுக்கு கொஞ்சம் குடுத்துறுவோம்.  என்ன சொல்ற’  என  கிசுகிசுத்தார்.

      எஸ்கோபாரும் தீவிர யோசனைக்கு பிறகு சம்மதித்தார்.  பிறகு வண்டி ஒட்டியிடம் திரும்பி ‘வண்டியை கிழக்கே பாலைவனத்தை நோக்கி விடு. ’

      ‘பாலைவனத்திற்கா? யோவ், அங்க யாருய்யா இருக்கா?’

      விஷ்வா ஸ்டெல்லாவை பார்த்து ‘இப்போது எதுவும் கேட்காதீர்கள்.  எல்லாம் முடிந்த பிறகு சொல்கிறேன்.  அப்போதும் எதுவும் கேட்காதீர்கள்.’

       ‘சரி, இவர்கள் சொல்கிற பக்கமே வண்டியை திருப்பு.’

      கோச்சு வண்டி பாலைவனத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

 

                                                                                                                                            (தொடரும்)

Advertisements

Entry filed under: வேதாள நகரம்.

இந்தியாவில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை? 27-01-2009

10 Comments Add your own

 • 1. Jaffer  |  January 26, 2009 at 6:18 am

  ஹி….ஹி….,

  அந்த கோச்சு வண்டி ஓட்டுபவராகவாவது, எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா? ஸ்டெல்லாவை சின்ன வயசுலேர்ந்தே தெரியும் எனக்கு. ரொம்பவா வழிசல் தெரியுது. அப்படி ஒன்னும் இல்லைலே?

 • 2. King Viswa  |  January 26, 2009 at 11:18 am

  இறைவா,
  என்னை (ஜோஸ் போன்ற) நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்.

  //‘ஒரு பீர் கொடுங்க. எவ்வளவு?’
  ‘மூன்று டாலர்கள் தான் சார். ஆனால் இப்போது கம்பெனி சார்பாக ஒரு புதிய தள்ளுபடி கொடுக்கிறோம். மூன்று பீர் பாட்டில்கள் வாங்கினால் வெறும் பத்தே டாலர்கள்தான்.’// என்ன ஒரு கணக்கு.அற்புதம். அபாரம். சூப்பர். நீங்கள் பெங்களூருவில் ஏமாந்த விஷயத்தை கூட இப்படி வேறு ஒரு பாத்திரத்தின் மூலம் கதையில் புகுத்திய உங்களை எப்படி பாராட்டுவது என்றே எனக்கே தெரிய வில்லை.

  //விஷ்வாவின் நெஞ்சை நோக்கி வந்த பிச்சுவா செழியின் … செழியின்…..செழியின் பின்னால் பாய்ந்தது.// அடப் பாவிகளா, கதையில் ஒரு சான்ஸ் கேட்டதுக்குகே இப்படியா?

  //‘சதீஷ், என் உயிரை காப்பாற்றியவர் இவர். இவருக்கு சிகிச்சை அளித்து இவரின் உயிரை நான் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளேன். ஒரு நல்ல டாக்டர் பக்கத்தில இருந்தா கூட்டிட்டு வாயேன்.’// இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான், சொல்லிபுட்டேன்.

  //எல்லோரும் செழியை பரிதாபமாக பார்த்தனர். செழி மனதை உருக்கும் குரலில் சதீஷை கேட்டார்.
  ‘டாக்டர், இனி பெண்களை நான் கசமுசா செய்ய முடியுமா?’// ஒரு சான்ஸ் கூட இல்லாமல் போறாரா?

  //அந்த சமயத்தில் ஸ்டெல்லா கை நம் இலட்சிய வீரன் விஷ்வாவின் கையுடன் உரச, ஒரு கனவுலக டூயட் சிச்சுவேஷன்ஐ எப்படி தவற விட முடியும்?
  பாடல் வகை = டூயட் ஆண்=விஷ்வா, பெண்=ஸ்டெல்லா இடம்=கனவுலகம் கோரஸ் கலீல் சதீஷ், செழி.
  இராகம்=கபோதி, பாடல் ஆசிரியர்=நாந்தேன். கோரஸ் வரிகளை எழுதியவர்=தற்சமயம் பெயர் தெரிவிக்க விரும்பவில்லை.// அந்த பூரி கட்டையில் அடி வாங்கிய நபரின் பனி என்று நீங்கள் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தெளிவாக உள்ளது.

  //பெ :டேய் விச்சு, வாடா வாடா ஆ……..ஆ, இச்சு ஒன்னு தாடா தாடா ஆ……..ஆ
  சத்.கலீ.செழி கோரஸ். போங்கண்ணா விச்சு, குடுங்கண்ணா இச்சு// யோவ், உனக்கே இது நல்ல இருக்கா? ஏற்கனவே எனக்கும் சதீஷுக்கும் வாய்க்கா தகராறு. இப்ப இது வேறயா?

  //கோச்சு வண்டி பாலைவனத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.// கதை எங்கே செல்கிறது என்பது யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகி விட்டது.

  கிங் விஸ்வா.

 • 3. batcha  |  January 26, 2009 at 2:31 pm

  Mudiyala !!!! venam aluthuduven !!!!!

 • 4. shankar  |  January 26, 2009 at 5:58 pm

  நண்பர்க்கு,

  – ஒரு கயவன் வீசியெறிந்த பிச்சுவா இலட்சிய வீரன் விஷ்வாவின் மார்பை நோக்கி வேகமாக வந்தது.

  விஷ்வாவின் நெஞ்சை நோக்கி வந்த பிச்சுவா செழியின் … செழியின்…..செழியின் பின்னால் பாய்ந்தது.-

  ஆக விஸ்வாவின் நெஞ்சு, செழியின் பின்பக்கமளவு உயரம் என்கிறீங்க.

  -ஒரு பீர் பாட்டிலை சுவைத்துக் கொண்டே மாடிக்கு சென்ற செழி வழிமறித்து நிறுத்தியது-
  அச்சச்சோ, பீர் பாட்டில்களிற்கு என்னவாயிற்று, பாதுகாப்பாக உள்ளனவா.

  – ‘தம்பி, பிச்சுவா ஆழமாக பாய்ந்திருக்கிறது. குறைந்தது ஆறு மாசம் எந்த பெண்ணும் உன்னை கசமுசா செய்யாமல் பார்த்துக் கொள்.’-
  ஒர் வாய்ப்பு கேட்டதிற்கு இவ்வளவு கொடிய தண்டனையா. இட்ஸ் எ பாட், பாட் வேர்ல்ட்.

  ‘எனக்கென்னவோ இந்த கதையில் உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது’
  அந்தப் பொன்னான வாய்ப்பு யாரிற்கு கிடைக்கப் போவுதோ.

  பாடல் வரிகள் ஒவ்வொன்றும் முத்து,மணி, மாணிக்கம் ,பவளம். உணர்வைக் குழைத்து, உயிரினை பிழிந்து எழுதப்பட்டுள்ள வைர வரிகள்.
  அதிலும் கோரஸ் வரிகள் ஆகா, ஒகோ,பலே, பலே
  ஆஸ்காரை தட்டப்போகும் பாடல் இதுதான். தயவு செய்து பாடல்களிற்கு ஆஸ்காரில்லை என என்கவுண்டர் செய்யாதீர்கள்.

  கதையின் உண்மையான வில்லன், கோச் வண்டி டிரைவர் தான், அப்படியில்லா விட்டாலும் 3 குதிரைவீரர்களும் அவரிற்கு வைகுந்த வாசலைக் காண்பிப்பார்கள்.

  -‘இப்போது எதுவும் கேட்காதீர்கள். எல்லாம் முடிந்த பிறகு சொல்கிறேன்-
  எல்லாம் என்றால், என்ன எல்லாம், எல்லாம் எல்லாமா!!

  உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் அதிர்வேட்டுக்களை.

 • 5. vadivelsamy  |  January 26, 2009 at 6:47 pm

  விச்சு நான் வந்துட்டேன் ஆ……..ஆ
  பிச்சு பிச்சு நான் தந்துட்டேன் ஆ……..ஆ

 • 6. Karthikeyan G  |  January 26, 2009 at 6:54 pm

  🙂

 • 7. செழியன்  |  January 26, 2009 at 7:41 pm

  யோவ்,

  நான் உங்கிட்டே என்ன கேட்டேன்? ஒரே ஒரு கச-மூஸா சான்ஸ் தானே? அதுக்கு இப்படியா பண்றது?

  எங்களுக்கும் ப்ளாக் இருக்கு மாமோவ். நாங்களும் எழுதுவோம்ல.

  தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை ஒரு ………… எழுப்பி விட்டுடுச்சி. பாக்கலாம்.

 • 8. sharehunter  |  January 26, 2009 at 8:14 pm

  கன்னித்தீவு மந்திரவாதி லைலா தாசன் என்றைக்காவது முறை தவறி நடந்திருக்கிறாரா?

 • 9. Rafiq Raja  |  January 27, 2009 at 12:46 pm

  வெகு நாளாக எதிர் பார்த்த வேதாளர் நகரம் பராக் பராக்… ஒரிஜினல் குதிரை வீரர்கள் பீதியில் உறைந்து போய் இருப்பது நன்றாக உணர முடிகிறது :)… இனி பதிவை பற்றி:

  // உங்களுக்கு எப்படி கட்டுபடியாகுது? //
  இப்படியும் ஒரு (அப்)பாவியா…. 🙂

  // செழியின் பின்னால் பாய்ந்திருந்த பிச்சுவாவை பிடிங்கி //
  ஏன்யா அது என்ன கத்தி குத்தி வைக்கிற ஸ்டாண்டா ? 🙂

  // ஹலோ! இது ரொம்ப ஓவர். கதை படிக்கும்போது நீங்க ஏன் சத்தம் போடுறீங்க? //
  பின்ன இப்படி ஒரு கதையை பொறுமையுடன் தொடருகிரோமே….

  // நல்ல டாக்டர் பக்கத்தில இருந்தா கூட்டிட்டு வாயேன்…. யாருமே இல்லை //
  என்ன ஒரு சத்தியமான ஒப்பு கொள்ளுமை…. வாழ்க டாக்டர்…. Oops… டாக்டரின் வாடிகயாளர்கள் (???!!) யாரும் இந்த கதையை படிக்காமல் இருக்க வேண்டும்.

  // குறைந்தது ஆறு மாசம் எந்த பெண்ணும் //
  ரொம்ப நாளாக ஆசை பட்டு இருந்த செழியை, கடைசியில் இப்படி ஏமாத்தி விடீர்களே…. சரி டாக்டர் சொன்னபடி எந்த பெண்ணும் தான் கசமுசா பண்ண முடியாது, நான் பண்ணலாமே என்று செழி கேக்காமல் இருந்தாரே, அதற்க்கு நன்றியையா 🙂

  // கனவுலகம் கோரஸ் கலீல் சதீஷ், செழி. //
  கடவுளே, ஆரம்பத்தில் என்னை ஏன் குதிரை வீரர்கள் பட்டியலில் சேர்க்க வில்லை என்று ஏங்கியதை மறந்து விடுங்கள்… இப்படி ஒரு வேலை செய்வதிலிருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றிகள் கோடி.

  // புகுந்த கோச்சு வண்டியின் டிரைவர் //
  யாருயா அவன், bloddy nonsense….

  // இப்போது எதுவும் கேட்காதீர்கள் //
  கதாசிரியர் கதையை எங்கே கொண்டு போகிறார் என்று யாரும் கேட்க கூடாதுன்னு இப்படி ஒரு பிட்டா…. 🙂 ஒரு வேலை அவருக்கே தெரியாதோ என்னவோ ?

  // ஆக விஸ்வாவின் நெஞ்சு, செழியின் பின்பக்கமளவு உயரம் என்கிறீங்க.//
  ஷங்கரே…. குறும்புக்கு எல்லையே இல்லையா….. என்னை குறும்பு பயன் என்று சொல்லி விட்டு நீங்கள் அதில் Ph.D. வாங்கிடுவீங்க போல 🙂

  மொத்ததில், மானம் போச்சு பிச்சு பிச்சு…. இனிமே என்னடா இச்சு இச்சு…. 🙂

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்
  ரா-கா

 • 10. Karthikeyan G  |  January 27, 2009 at 6:08 pm

  //பாடல் வகை = டூயட் ஆண்=விஷ்வா, பெண்=ஸ்டெல்லா இடம்=கனவுலகம் கோரஸ் கலீல் சதீஷ், செழி.

  இராகம்=கபோதி, பாடல் ஆசிரியர்=நாந்தேன்.
  //

  இந்த பாடலின் டியூன் இத்தாலிய பாடகர் Alan Sorrenti இன் ஒரு புகழ் பெற்ற பாடல் போல் உள்ளதே? copyஆ அல்லது inspirationஆ??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: