இந்தியாவில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை?

January 23, 2009 at 8:58 pm 19 comments

      உலக அளவில் புகழ் பெற்ற சித்திர கதை கதாநாயகர்களை பற்றி எல்லோரும் அறிந்திருப்போம்.  லுயி கிரான்டேல், ப்ரூஸ் வாய்னே, பீட்டர் பார்க்கர் என பல வெளிநாட்டு பெயர்கள்.  விஷ்வா, ரபீக், வெங்கடேஸ்வரன் என்ற பெயரில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என யாராவது யோசித்திருப்போமா? 

       இந்த வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் யாருமே இந்தியாவில் சாகசங்கள் புரிந்ததில்லை. இந்தியாவை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவ்வாறு சாகசங்கள் புரிய வந்தவர்களும் துண்டை காணோம் துணிய காணோம் என ஓடிவிட்டனர்.      அவர்களை இந்தியாவில் சாகசம் புரிய விடாமல் தடுத்த சந்தர்ப்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.                                                       

சூப்பர் மேன்
சூப்பர் மேன்

முதலில் நம் மனம் கவர்ந்த சூப்பர் மேன்.

        சென்னை மெரினா கடற்கரையின் அருகே உள்ள ஒரு கடையில் ஆட்டுக்கால் பாயாவை சூப்பிக் கொண்டு இருக்கிறார் சூப்பர் மேன்.  அப்போது அவரின் அசாதாராணமான கேட்கும் திறனில் கீழ்க்கண்ட உரையாடல் கேட்கிறது.
   ”  Control Tower, This is Air India Flight IC 420 Calling,…..”
  
  (   எளிமை கருதி கீழ்க்கண்ட உரையாடல் தமிழாக்கம் செய்யப்படுகிறது.)
 
‘என்னாய்யா’
   
‘என்னோட பிளேன்ல ஒரு என்ஜின் ஆஃப் ஆயிடுச்சி.’
    
‘அப்ப அத ஆன் பண்ண வேண்டியதுதானே முண்டம்’
    
‘முடியலை.  என்ஜின் எரிஞ்சிக் கிட்டு இருக்கு. ரெண்டாவது என்ஜினுக்கு நெருப்பு பரவிடுச்சி.’
   
‘அப்படியா (உணவு மெல்லும் சத்தம்)  இப்ப எங்க இருக்கே.’
    
’நான் நங்கநல்லுர் மேலே இருக்கேன்.’
    
‘ஐய்யய்யோ, நான் அங்கதான் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கேன்.  நீ முதல்ல மெரினா கடல் பக்கம் போயிடு.’
   
‘சரி போயிட்டேன். இப்ப என்ன பண்றது?’
   
‘என் டூயிட்டி டைம் முடிஞ்சிடுச்சி. குமார் தான் அடுத்து வருவான்.  இன்னிக்கு என்னவோ ஒன் அவர் பர்மிஷன்னு சொன்னான். அப்ப நான் கிளம்புறேன்.  யாராவது உனக்கு பேச்சி துணைக்கு வருவாங்க.’
    
‘யோவ், என்னதுய்யா இது,  Mayday, Mayday’
    
‘யோவ் மாங்காய், இது ஜனவரி மாசம்ய்யா.  மே டேக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு.’
    
         இந்த உரையாடலை கேட்ட சூப்பர் மேனின் சூப்பர் ப்ரெயின் அந்த விமானத்திற்கு ஆபத்து என பல சிக்கலான கணக்குகளை போட்டு கண்டுபிடித்தது.  உடனே தன் ஆடைகளை மாற்ற படகின் பின்புறம் சென்றார்.  பின்னர் அசடு வழிந்துக் கொண்டே, ‘சாரிங்க, நீங்க இருக்கறத நான் கவனிக்கல’ என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்து புதருக்கு சென்றார்.  அங்கும் அதே கதைதான்.
 
       வேறுவழியில்லாமல் கட்டண கழிப்பிடத்திற்கு சென்று, அதிகப்படியான கட்டணம் செலுத்தி, கழிப்பறை வாசலில் உடைமாற்றுவதற்காக நின்றுக் கொண்டிருக்கிறார். 
   
        உங்களில் யாராவது கட்டண கழிப்பிடத்தில் கழிப்பறை திறப்பதற்காக நிற்கையில் உங்கள் அருகில் நிற்பவர்களில் யாரேனும் ஒருவர் சூப்பர் மேனாக கூட இருக்கலாம்.
     
 
batman        அடுத்தது பேட்மேன்.  இரவு நேரம்.  அய்யம்பாளையம் என்னும் கிராமத்தில் ஒரு கூக்குரல் கேட்கிறது. உடனே அவ்விடத்திற்கு பாய்ந்து செல்கிறார் இரவின் பாதுகாவலர், நீதியின் செல்வர் பேட்மேன். 
   
    அங்கு அவர் கண்டது ஒரு வயதான பெரியவர் வெத்திலை பெட்டியுடன் உட்கார்ந்து கொண்டிருப்பதை.
    
   ‘வயதில் மூத்தவரே, இங்கு ஒரு அபல குரல் எழுந்ததே, யார் அது?’
   
 ‘யாரு அது, எசக்கி மவனா?’
         
  ‘இல்லை.  நான் பேட்மேன்’
      
  ‘பத்மநாபனா?’
    
  ‘ நான் பேட்மேன்யா. பேட்மேன்.’
    
   ‘சரியா கேக்கலை.  திருப்பி சொல்லுடா அம்பி’
    
   ‘கட்டையில போறவனே,  நான்தாண்டா பேட்மேன்.  இங்க எந்த நாயோ கத்திச்சின்னு ஓடிவந்து உன்னோட எழவெடுத்துக் கிட்டு இருக்கேன்.  யார்ரா அது?’
     
 ‘பாக்கு நசுக்கும்போது எங்கையில உரல் பட்டுடுச்சி.  அதான் கத்தினேன்.’
    
     கொலைவெறியுடன் பேட்மேன் கோதம் சிட்டிக்கே திரும்பி செல்கிறார்.
     
steelclaw
நம் அனைவரின் மனங்கவர்ந்த இரும்புகை மாயாவி. 
       
          ஒரு வெளிநாட்டு சதியின் ஆணிவேரை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள சாத்தான் குளத்திற்கு நம் இரும்புகை மாயாவி வருகிறார்.  அவரின் துப்பறியும் நோக்கத்தை எதிரி கண்டறிந்து விடுகிறான்.  அவரை இருபது பேர் கொலைவெறியுடன் லுங்கிக் கட்டிக் கொண்டு துரத்துகிறார்கள்.  அவர்களிடம் தப்பி ஒடும் மாயாவி சற்று தொலைவில் ஒரு மின்சார ட்ரான்பார்மரை பார்க்கிறார்.  அவரின் இதழில் புன்முறுவல் பூக்கிறது.
     
       சூப்பர் ஹீரோக்களின் குல வழக்கப்படி மின்சார ட்ரான்பார்மரின் அருகே நின்றுக் கொண்ட மாயாவி கீழ்க்கண்டவாறு பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
     
     ‘சாத்தான் குளத்தில் சாகசம் புரியவந்த என்னை சாகடிக்க பார்க்கும் சண்டாளர்களே,  இரும்புகை மாயாவியிடமா குறும்பு செய்கிறீர்கள்?’
      
        ஆனால் அவர் இருப்பது தமிழ்நாடு. அவரின் பஞ்ச் டயலாக் முடிந்தவுடன் மின் வெட்டு ஆரம்பமானது.  அவர் லுங்கிவாலாக்களால் சிதைக்கப்படும் முன் பேசிய கடைசி டயலாக்.
      
      ‘அடங்கொக்க மக்கா’
      
hulk
    அடுத்து கோபம் வந்தால் ஒரு சுற்று பெருத்து விடும்  ஹல்க். 
    
     சென்னை, தி நகரில் உள்ள இரங்கநாதன் தெருவில் ஹல்க் நடந்துக் கொண்டிருக்கிறார்.  எதிரே வந்த ஒருவர் இடித்தவுடன் கோபம் கொண்டு ஹல்க் பெருக்கிறார்.
    
      அப்போது அவர் அருகில் இருந்த 60-வயது பெண் கடுப்பாகி, ‘டேய் நாற கம்னாட்டி,  எருமை மாதிரி இருந்துக்கீனு ஒரு வயது பொண்ணை இடிக்கிறேயே, அறிவு கீதா?’ என கேட்டார்.
      
      அதற்கு ஹல்க், கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘தாய்க்குலமே, நான் ஹல்க்.  என்னை கோபப்படுத்தி விட்டார்கள்.  நான் என்ன செய்வது?’ என வினவினார்.
     
      ‘பேர பாரு, அல்க் சில்க்னு.  டேய் எருமைக்கடா, போய் ஒன் டவுசர ஒழுங்கா போட்டுகினு வா.’
     
    ஹல்க் வேதனையுடன் சென்னை மீனம்பாக்கம் சென்று அமெரிக்காவிற்கு டிக்கெட் வாங்க செல்கிறார்.
     
      இன்னும் பல சூப்பர் ஹீரோக்கள் ஏன் இந்தியாவிற்கு வரவில்லை என்பதை ஆராய்ந்து வெளியிடுவேன் என்பதை மட்டும் தற்சமயம் சொல்லிக்கொள்கிறேன்.
Advertisements

Entry filed under: காமிக்ஸ்.

23-01-2009 வேதாள நகரம் 12 – டூயட்

19 Comments Add your own

 • 1. SHANKAR VISVALINGAM  |  January 23, 2009 at 10:04 pm

  நண்பரே,

  -விஷ்வா, ரபீக், வெங்கடேஸ்வரன் என்ற பெயரில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என யாராவது யோசித்திருப்போமா?
  கிங் V, COMMICO R, காபூ வெ என்ற உச்ச ஹீரோக்களை தமிழுலகம் கொண்டாடுவது தெரியாதா.

  –மாயாவி சற்று தொலைவில் ஒரு மின்சார ட்ரான்பார்மரை பார்க்கிறார். அவரின் இதழில் புன்முறுவல் பூக்கிறது
  அற்புதமான anty climax. இங்கே தொடங்கிய சிரிப்பு அடங்கொக்காமக்கா தாண்டியும் தொடர்ந்தது
  இருப்பினும் காமிக்ஸ்கிளாசிக்கில் அவரைக் கொல்வது போல் கொல்ல முடியாது.

  தொடருங்கள் உங்கள் ஆராய்சியை

 • 2. King Viswa  |  January 23, 2009 at 10:30 pm

  மிகவும் அருமை. வேதாள நகரத்தை எதிர்பார்த்து வந்தால் “பாதாள நகரம்” போல ஏதோ உள்ளது. ஆனால் நான் கூறிய விஷயத்திற்கும் நீங்கள் எழுதிய பதிவுக்கும் என்ன தொடர்பு? புரியவில்லை.

  ஆனாலும் இந்த பதிவு மிகவும் சிறப்பான ஒன்று. பாராட்டுக்கள். இந்த பெயரில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என்று யார் சொன்னது? அய்யம்பாலயத்திலும், ஆவடியிலும் வந்து கேட்டு பாருங்கள் தெரியும்.

  கிங் விஸ்வா.

 • 3. விக்னேஷ் குமார்  |  January 23, 2009 at 11:20 pm

  Nice and interesting.Please continue sir……

 • இந்த சூப்பர் ஹீரோ பசங்க தொல்லை தாங்க முடியல! பேண்ட்டுக்கு மேல ஜட்டி போட்டவனெல்லாம் சூப்பர் ஹீரோவாம்! ஒலகத்த காப்பாத்த இவனுகள வுட்டா வேற ஆளே கிடையாதா?

  ஏன் இல்ல? நம்ம கேப்டன் விஜயகாந்த் முதல் வீரத்தளபதி ஜே.கே.ஆர். வரை எல்லோருமே சூப்பர் ஹீரோதானே?

  உண்மையச் சொன்னா ஒதைக்க வர்றாங்க. நமக்கெதுக்கு இதெல்லாம்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

 • 5. Karthikeyan G  |  January 24, 2009 at 12:23 am

  🙂

 • 6. ரஃபிக் ராஜா  |  January 24, 2009 at 1:49 am

  வித்தியாசமான பதிவு பங்கு வேட்டையரே…. இக்கேள்வி என் மனதிலும் அடிக்கடி தோன்றும் ஒன்று தான். சரி சொந்த கதை சோக கதை எதுக்கு…. இனி பதிவை பற்றி:

  // படகின் பின்புறம் சென்றார் //
  அங்கு அவர் சந்தித்த ஜோடி யாரோ ? 🙂 பதிவு ஆசிரியர் இல்லையே… 😉

  // ஒருவர் சூப்பர் மேனாக கூட இருக்கலாம் //
  சாரி… கட்டண கழிப்பிட வரிசையில் நின்னு இது வரை பழக்கமில்லை…. நோட்டம் விடுகிறேன் பேர்வழி என்று, ஏற்கனவே உபாதையில் காத்திருக்கும் மக்களை இன்னும் வெறியாக்கி விட்டு உதை வாங்க வைக்க ஆசரியரின் திட்டம் போல இருக்கு. 🙂

  // அய்யம்பாளையம் என்னும் கிராமத்தில் //
  அப்ப அது நம்ம அய்யம்பல்யத்துகாரராக தான் இருக்கும்.

  // வயதான பெரியவர் //
  சீ… சப்புனு ஆயிடுச்சே 🙂 ஒரு வேலை இது “அவரை” குறிக்கும் ரகசிய சொல்லா 🙂

  // மின் வெட்டு ஆரம்பமானது //
  நினைத்தேன், மின்சார மன்னரை கதைக்கு இழுக்கும் போதே, இப்படி தான் முடிப்பீர்கள் என்று…. 🙂

  கடைசியாக என்னுடைய பெயரை தயவு செய்து சூப்பர் ஹீரோ wannabe லிஸ்டில் இருந்து எடுத்து விடவும். என்னுடைய Secret Identity ஐ அது வெளிச்சம் போட்டு காட்டி விட கூடாது இல்லையா … :)… ஹி.ஹீ.ஹி.ஹீ.ஹி.

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

 • 7. Yaathirigan  |  January 24, 2009 at 1:57 am

  :-)))) Sooper….

 • 8. vimal  |  January 24, 2009 at 12:02 pm

  aha… arumai.

 • 9. ramprasad.v  |  January 24, 2009 at 12:23 pm

  Nice.

  😉

 • 10. அதிஷா  |  January 24, 2009 at 2:15 pm

  super thala kalakkal

 • 11. செழி  |  January 24, 2009 at 3:00 pm

  யோவ்,

  உனக்கே இது நல்ல இருக்கா? நானும் எவ்வள்வு நாளா சான்ஸ் கொடு, சான்ஸ் கொடு’ன்னு கேக்குறேன். அட்லீஸ்ட் இந்த பதிவிலாவது எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கலாம்.

  ஆனாலும் நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்.

 • 12. ஒலக காமிக்ஸ் ரசிகன்  |  January 24, 2009 at 6:32 pm

  இந்திய அளவில் புகழ் பெற்ற துப்பறியும் நாயகர்களையும், சூப்பர் ஹீரோக்களையும் நாம் நன்கு அறிவோம். நெருப்பு விரல் சீ.ஐ.டீ. 333, கருமலை தீவு காந்தன், தீக்கால் மாயாவி, ஹெல்மட் மாயாவி, என பல பேர். ஆனால் இவர்கள் எல்லாம் உள்ளூர் பெயர்கள். ஏன் பீட்டர், ராபர்ட், ஜோஸ் என்று இல்லை என யாராவது யோசித்திருப்போமா?

  இந்த இந்திய சூப்பர் ஹீரோக்கள் யாருமே வெளிநாட்டில் சாகசங்கள் புரிந்ததில்லை. அயல் நாட்டை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவ்வாறு சாகசங்கள் புரிய வந்தவர்களும் துண்டை காணோம் துணிய காணோம் என ஓடிவிட்டனர். அவர்களை வெளிநாட்டில் சாகசம் புரிய விடாமல் தடுத்த சந்தர்ப்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

  முதலில் கோதம் சிட்டி: அங்கு வருகிறார் நமது நெருப்பு விரல் சீ.ஐ.டீ. 333. உலக பயங்கரவாதிகள் அங்கு ஏயட்ஸ் ஊசி மூலம் பலரை கொல்ல இருப்பதை உணர்ந்து அங்கு உள்ள ஒரு மனிதரை பாதுகாக்க என்னை அவரிடம் செல்கிறார்.

  நெருப்பு விரல் சீ.ஐ.டீ. 333: யார் நீ? உன் பெயர் என்ன?

  நபர் 1: ஏன் பெயர் ஜார்ஜ் புஷ்.

  நெருப்பு விரல் சீ.ஐ.டீ. 333: நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உலக பயங்கரவாதிகள் ஏயட்ஸ் ஊசி மூலம் பலரை கொல்ல நினைக்கிறார்கள்.

  ஜார்ஜ் புஷ்: அய்யா-ஜாலி, என்னை அவர்கள் ஒன்றும் செய்ய்ய முடியாது.

  நெருப்பு விரல் சீ.ஐ.டீ. 333: என்ன சொல்றீங்க? அது எப்படி? நீங்க ஏதாவது நோய் தடுப்பு வாக்க்சீன் போட்டு இர்க்கீங்களா?

  ஜார்ஜ் புஷ்: இல்ல சார். நான் காண்டம் போட்டு இருக்கேன். எனக்கு ஏயட்ஸ் வராது.

  கொலைவெறியுடன் நெருப்பு விரல் சீ.ஐ.டீ. 333 கோதம் சிட்டி’யை விட்டு திரும்பி செல்கிறார்.

  அடுத்த பதிவு வேண்டுமா?

 • 13. Jaffer  |  January 24, 2009 at 7:08 pm

  வேதாள நகரம் 3 வாரங்களாக இல்லை. விஷ்வா, சதீஷ், கலீல், ஸ்டெல்லாக்கெல்லாம் என்ன ஆச்சோ? ரொம்ப கவலையா இருக்கு. நாளைக்காவது இருக்குமா? இல்லை, அடுத்த வாரம் தானா?

 • 14. ஒலக காமிக்ஸ் ரசிகன்  |  January 24, 2009 at 7:57 pm

  ஜாபர்,

  நீங்க கொடுக்கும் ஆர்டர் //விஷ்வா, சதீஷ், கலீல், ஸ்டெல்லா// தப்பான ஒரு ஆர்டர் ஆகும்.

  சரியான ஆர்டர் இதோ: விஷ்வா, சதீஷ், ஸ்டெல்லா & கலீல்.

 • 15. SHANKAR VISVALINGAM  |  January 24, 2009 at 8:03 pm

  // வயதான பெரியவர் //
  சீ… சப்புனு ஆயிடுச்சே ஒரு வேலை இது “அவரை” குறிக்கும் ரகசிய சொல்லா

  ரஃபிக் நீங்கள் இவ்வளவு குறும்புக்காரப் பையனா.

  ஆசிரியர் செழிக்கு ஒர் வாய்ப்பு அளிக்கவேண்டுமென நானும் கோரிக்கை வைக்கிறேன் – எய்ட்ஸ் வைரஸ் ஊசி போடும் தீவிரவாதியாகவாவது ஒர் வாய்ப்பு கொடுக்க கூடாதா.

  புஸ்ஸு உனக்கு வந்த காலம்டா, அனுபவி அனுபவி.

 • 16. SHANKAR VISVALINGAM  |  January 24, 2009 at 8:12 pm

  FLASH INFO:

  புஸ்ஸுக்கு காண்டம் இருக்குமிடத்தில் கண்டம் இருக்கிறது- கிலிஜோஷ்யர் பரபர அறிக்கை

 • 17. Sathya  |  January 24, 2009 at 8:40 pm

  :-)))))))))))))))

 • 18. King Viswa  |  January 25, 2009 at 7:27 pm

  //ஜாபர்,நீங்க கொடுக்கும் ஆர்டர் //விஷ்வா, சதீஷ், கலீல், ஸ்டெல்லா// தப்பான ஒரு ஆர்டர் ஆகும்.
  சரியான ஆர்டர் இதோ: விஷ்வா, சதீஷ், ஸ்டெல்லா & கலீல்.//
  அய்யா இது கூட தவறான ஆர்டர் தான். ஏனென்றால் ஸ்டெல்லாவும் கலீலும் அருகில் வருகிறார்கள். அதனால் சரியான ஆர்டர் இதோ:விஷ்வா,கலீல், சதீஷ் & ஸ்டெல்லா. என்ன டாக்டர் இப்போ சந்தோஷமா?

  கிங் விஸ்வா.

 • 19. VIJAYASANKAR  |  June 16, 2009 at 9:01 pm

  Venkatu,

  Still lauging.

  luv,
  vijay

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: