12-01-2009

January 12, 2009 at 8:27 am 1 comment

      கடந்த வெள்ளிக்கிழமை வரை அமெரிக்க சந்தை மற்றும் அதன் உறவினர்கள் அனைத்தும் படாத பாடு பட்டு முடிந்திருக்கின்றன.  இரு தின இடைவெளிக்கு பிறகு நல்லபடியாக தொடங்கும் என்ற பொது விதியின் படி இன்றும் அவ்வாறே தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

      தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் இறங்குமுகமாக இருந்தாலும், ரெகவர் ஆக வாய்ப்பு இருக்கிறது.  நமது சந்தையும் ஏறுமுகமாகவே தொடங்கும் என எதிர்பார்க்கிறேன்.  Positive முடிவையே எதிர்பார்க்கிறேன். 

      Axis Bank நல்ல காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ள போதிலும் வெள்ளியன்று அதனை கலங்கடித்து விட்டார்கள்.  இன்று அப்பங்கில் Short Covering நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்.

      சத்யம் கம்யூட்டர் இன்றைய தினம் ஏற வாய்ப்பு இருக்கிறது.  தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்ட்டிருப்பவர்கள் அனைவரும் பழுத்த அனுபவசாலிகள்.  அவர்கள் தலைமையில் அக்குழுமத்திற்கு புத்துயிர் ஊட்ட முயற்சி செய்வார்கள் என நம்பலாம்.  அல்லது டிங்கரிங் செய்து மற்றவரிடம் விற்பதற்கு முயற்சியும் செய்யலாம்.  எது எப்படி இருந்தாலும், சத்யம் பங்கின் விலை இன்று ஏற வாய்ப்பு இருக்கிறதாகவே நினைக்கிறேன். 

        நாளை முதல் பல முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் வெளிவர இருக்கின்றன.  சொல்லும்படியான காலாண்டு அறிக்கைகள் வராது என நினைக்கிறேன்.  பொங்கல் விடுமுறை ஏதும் சந்தைக்கு கிடையாது என்பதால், அனைவரும் இந்த வாரம் பொங்கலை சுவைத்துக் கொண்டே சந்தையில் பங்கு பெறலாம்.

      Disclaimer ர படிச்சுங்கய்யா.

     மாலையில் எழுதுகிறேன்

     Good Morning To You All!

Post Market:

      உலக சந்தைகள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை ஒரு வித பயம் இருந்ததை இன்று உணர முடிந்தது.  ஆனால் நம் சந்தை 2700 என்ற நிலையில் வலுவாக இருக்கின்றது.  இந்தியா-பாக் பற்றிய பேச்சு வார்த்தைகள் தடித்து அடபுடா என்ற அளவிற்கு தற்சமயம் வந்திருப்பது சற்று கவலை அளிக்கும் செய்திதான். 

      இன்றைய அமெரிக்க சந்தை முன்னேற்றத்துடன் முடிய வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்,  அவ்வாறு முடியும் பட்சத்தில் நாளை நமது சந்தையில் ஏற்றத்தை எதிர்பார்க்க வாய்ப்புண்டு.  பார்க்கலாம்.

Advertisements

Entry filed under: Market Analysis.

சத்யம் பற்றி பொதுமக்கள் கருத்துகள் 13-01-2009

1 Comment Add your own

  • 1. V.SURESH, SALEM  |  January 12, 2009 at 8:57 am

    good morning sir .

    good morning to everybody and wish you all a successful trading.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: