சத்யம் பற்றி பொதுமக்கள் கருத்துகள்
January 9, 2009 at 10:58 pm 11 comments
சத்யம் பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களின் நாடித் துடிப்பை அறிய இந்த வலைப்பூவின் ஆசிரியர் ஸ்டெதாஸ்கோப்புடன் கிளம்பி, மக்களின் கருத்துகளை இங்கே தொகுத்துள்ளார். அவர் இளவயது பெண்களின் கருத்துகளை அறிய அதிக ஆவலை காட்டியதாக சில எத்தர்கள் கிளப்பி விடும் வதந்திகளை நம்ப வேண்டாம் என இதை படிக்கும் அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதலில் கீரை விற்கும் முனியம்மா ( 38 )
‘என்னவோ போங்க. இந்த மாதிரி ஆயி போச்சு. அதுக்காக ஆசப்பட்டு வாங்குனத வூட்டுறலாமா? அம்பது ரூபாய்க்கு சீப்பா கெடக்கிதேன்னு வாங்குன்னேன். இப்போ பேதியில போய் பாதியான மாதிரி இருக்கு. நாந் வித்து, வித்து வாங்கி இலாபம் சம்பாரிக்கிறேன்.
‘என்னது டை கட்டின பார்ட்டிங்களா? அட கண்ணு, இங்க கீர வாங்க வர பார்ட்டிங்கள்ள பேரம் பேசிறவங்களே டை கட்டின பார்ட்டிங்கதான்.’
முனிசிலிபாலிட்டியில் வேலை பார்க்கும் கிஷ்டன் ( 42 )
‘யோவ், நிறுத்துய்யா. பெரிய பருப்பு மாதிரி விளக்க வந்துட்ட. எனக்கும் விஷயம் தெரியும்ல. காலயில டீ குடிச்சுட்டு பேப்பரு படிக்கிறோம்ல. இந்த சத்யங் கம்பெனி ஒனரு ஒரு மைதா மாவு கம்பெனிய வாங்க பாத்தாரு. அது அவரு பங்காளிகளுக்கு புடிக்கல. உடன பிரச்சினைய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த மேரி பங்காளி சண்டையில பாத்தின்னு வைச்சுகோயேன். நிறய விஷயம் டுபாக்கூரா இருக்கும். ஒரு தபா இந்த அலமேலுக்கிட்ட இட்லி வாங்கி சாப்டேன்னு இந்த பசங்க என்னமா கொளுத்தி போட்டுடாங்க தெரிமா? நாந் சாப்ற இட்லியை விட வில குறைவா இருக்கு. சுகுரா கொஞ்ச வாங்லாம்னு பாக்குறேன் நீ என்ன சொல்ற தலைவா?’
தனியார் துறையில் மார்க்கெட்டிங் மேலாளராக வேலை பார்க்கும் விஷ்வநாதன் ( 38 )
‘எனக்கு ஆரம்பத்திலயே சத்யம் பத்தி சந்தேகம் இருந்துச்சி. என் நண்பர்களிடமும் சொன்னேன். நீங்க வேணா கேட்டு பாருங்களேன். ஆனா யாருமே நம்ப வில்லை. செய்தி தாட்களை நன்றாக ஊன்றி படித்தாலே இந்த மாதிரி விஷயங்கள் புலப்பட்டு விடும். ஆனா பாருங்க, யாருமே இந்த மாதிரி செய்யறதில்ல. ஆனா நான் அப்படி இல்ல. ஆபீஸ் நேரத்துல விடாம எல்லா பேப்பரையும் படிச்சுடுவேன். ஆரம்பத்துல நான் சொன்ன மாதிரி என் நண்பர்கள் யாரும் இத நம்பல. நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம முடிவெடுத்துதாங்க. ஆனா நான் இப்ப ஒரு உண்மையை சொல்றேன். நான் போனது நயன்தாராவுக்காக தான்.
பெயர் மற்றும் கட்சி விவரம் தெரிவிக்காத ஒரு அரசியல்வாதி ( 48 )
‘ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள் நல்ல பேரு வாங்கி டெண்டரு எடுத்து பணம் அடிக்கறதுக்குள்ள டாவு தீந்து போய்டுது. இந்த அண்ணாச்சி அப்டி நேக்கா தட்டிட்டாரே. காத கூடு வாத்தியாரே, ஒரு விஷயம் சொல்றேன். நம்ம கச்சியில அண்ணாச்சிய சேக்க இப்ப பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவரு காட்டியும் நம்ம கச்சியில சேந்தாருன்னு வைச்சிகோயேன். அடுத்த கம்பூட்டர் மினிஸ்டரே அண்ணந்தான்.
பெயர் தெரிவிக்காத ஒரு கல்லுாரி மாணவி ( 32 ) (முந்தைய அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருப்பது வயசல்ல)
‘வாவ், சத்யம் இப்டி போகும்ன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. ரொம்ப ஷாக்கா இருந்துச்சி. அக்ச்சுவலி, இவ்ளோ பெரிய தொகையில ஊழல் இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. எங்க நைனா தான் நிறைய ஷேர் வாங்கிட்டு இப்போ நெஞ்சை பிடிச்சிக்கிட்டு இருக்கு. முன்னாடியெல்லாம் நான் போடுற டிரெஸ்ச பாத்து நெஞ்ச பிடிச்சுக்கும். இப்போ சத்யத்தால என்ன கண்டுகறத இல்ல. டேங்ஸ் சத்யம். என் பாய் ப்ரெண்ட் கூட சத்யத்துல தான் வேலை செய்றான். இப்போ அவன கழத்தி வுட்றலாம்னு பாக்குறேன்.
என்னது……தேங்க் யூ, நிஜமா தான் சொல்றீங்களா? ச்சீய் போங்க.
Entry filed under: செய்தி அலசல்.
1.
DG | January 9, 2009 at 11:07 pm
aasiriyaree asathidika
2.
Prabhu Rajadurai | January 9, 2009 at 11:34 pm
it is refreshing to read and smile such timely and more importantly intelligent humor…
nice…
3.
sathanga | January 9, 2009 at 11:45 pm
//முன்னாடியெல்லாம் நான் போடுற டிரெஸ்ச பாத்து நெஞ்ச பிடிச்சுக்கும். //
:))))
ரசிக்கும்படி எழுதியது அருமை.
4.
கேபிள் சங்கர் | January 10, 2009 at 12:28 am
// எங்க நைனா தான் நிறைய ஷேர் வாங்கிட்டு இப்போ நெஞ்சை பிடிச்சிக்கிட்டு இருக்கு. முன்னாடியெல்லாம் நான் போடுற டிரெஸ்ச பாத்து நெஞ்ச பிடிச்சுக்கும். இப்போ சத்யத்தால என்ன கண்டுகறத இல்ல. டேங்ஸ் சத்யம். என் பாய் ப்ரெண்ட் கூட சத்யத்துல தான் வேலை செய்றான். இப்போ அவன கழத்தி வுட்றலாம்னு பாக்குறேன்.//
சூப்பர் ..தலைவாஅ..
5.
V.SURESH, SALEM | January 10, 2009 at 5:13 am
nice sir.keep it up
6.
K.Ravishankar | January 10, 2009 at 9:16 am
ரவிஷங்கர் சொன்னது கிழே சொடுக்கவும்.
(அ)சத்யம் கம்பூயுட்டர்ஸ் – சோதனை மேல் சோதனன
7.
vinoth | January 10, 2009 at 1:57 pm
//ஆபீஸ் நேரத்துல விடாம எல்லா பேப்பரையும் படிச்சுடுவேன். ஆரம்பத்துல நான் சொன்ன மாதிரி என் நண்பர்கள் யாரும் இத நம்பல. நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம முடிவெடுத்துதாங்க. ஆனா நான் இப்ப ஒரு உண்மையை சொல்றேன். நான் போனது நயன்தாராவுக்காக தான்.//
Superuuu..
8.
Chitira Puthaga Maha Rasigan | January 10, 2009 at 10:17 pm
சூப்பர் ஜோக் மச்சீ…
//அடுத்த கம்பூட்டர் மினிஸ்டரே அண்ணந்தான்// ஹி ஹி ஹி
//நான் போடுற டிரெஸ்ச பாத்து நெஞ்ச பிடிச்சுக்கும்// ஹி ஹி ஹி …
//இப்போ அவன கழத்தி வுட்றலாம்னு பாக்குறேன்// ஹி ஹி ஹி…
//நான் போனது நயன்தாராவுக்காக தான்// அப்படீனா இன்னாப்பா ???
9.
SHANKAR VISVALINGAM | January 11, 2009 at 5:21 pm
சத்யத்தை ஒர் காரணமாக வைத்துக் கொண்டு மக்களை “அளந்”திருக்கிறீர்கள், கொடுத்து வைத்த பேர்வழி.
உங்களை பார்த்த பின்பு தான் இளம்பெண்ணிற்கு பாய் பிரண்டை கழற்றி விட தோன்றியதோ. இளம் பெண்ணின் டிரஸைப் பார்த்து நீங்கள் நெஞ்சைப் பிடித்ததாக கூறுகிறார்களே-உங்கள் நெஞ்சைத்தான்.
32 ரொம்ப சின்ன…
10.
Karthikeyan G | January 11, 2009 at 11:12 pm
//( 32 ) (முந்தைய அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருப்பது வயசல்ல)//
அப்ப பற்களின் எண்ணிக்கை தானே?
ஹி ஹி
11.
Rafiq Raja | January 12, 2009 at 12:59 pm
என்ன இங்கு வெளிவந்த கருத்துகள் அனைத்தும் யாரோ உண்மையான நபர்களை சுட்டி வெளியானது போல் தோன்றுகிறேதே…… என்னையா ஆசிரியரே, என்ன விஷயம் 🙂
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்