சத்ய சோதனை I

January 8, 2009 at 12:57 pm 17 comments

     இந்த தலைப்பை தற்போது அனைவரும் உபயோகித்து வருகிறார்கள் என்றாலும், முதலில் உபயோகித்தது நான் என்பதால் இதையே மீண்டும் உபயோகப்படுத்துகிறேன்.

       நேற்றைய சந்தையில் நடந்தததை வரிசைக்கிரமமாக பார்ப்போம்.  ஓபனிங்லாம் நல்லாதான் இருந்ததது இல்லையா?  பின்னர், இராமலிங்க ராஜு ராஜிநாமா என்ற செய்தி வர ஆரம்பித்ததும், சரிய ஆரம்பித்தது.  ஆனாலும் ரூ 75-80 என்ற நிலையில் வலுவாக இருந்தது.  அதற்கு பின்னர் அவர் பணத்தில் கொஞ்சம் கசமுசா நடந்திருப்பதை ஒப்புக் கொண்டதும் பங்கு வெகுவாக சரிய ஆரம்பித்தது.

       உடனே, அனைத்து நிபுணர்களும் காய்ச்சி எடுத்து விட்டார்கள், சத்யத்தை.   ஒரு பிரகஸ்பதி அப்பங்கானது ரூ. 0 என்ற நிலைக்கு வரும் என்று கூறினார். இது போன்ற அபத்தத்தை நான் எங்கும் கேட்டதில்லை.  இந்த நிலைக்கு எந்த பங்குமே இது வரை போனதில்லை.  இதிலிருந்தே நிபுணர்களின் கருத்தை அலசி ஆராய வேண்டும் என்ற அரிய பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டையும், கோட்டும் போட்டுக்கொண்டு டீ குடித்துக் கொண்டே டிவியில் பேசினால் நம்பி விடக்கூடாது.  நம்மக் கிட்ட இதுதான் பெரிய பிரச்சினை.  ஒரு சினிமாவில் கதாநாயகன் பத்து பேர் அடிப்பதையும் நம்புகிறோம், அவர் ஆதரவற்ற அபலை பெண்களுக்கு உதவுவேன் என்று சொல்வதையும் நம்பி விடுகிறோம்.  அது போன்றே இவர்கள் சொல்வதையும் நம்பி விடுகிறோம்.

      சரி,உண்மையான நிலை என்ன?  இது வரையில் ஒரு தெளிவான நிலை தெரியாத நிலையில் வரும் ஹேஷ்யங்களை எவ்வாறு நம்புவது?  சத்யம் நிறுவனம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்று பார்த்தோமென்றால், கணக்கு புத்தகங்களை சமைத்தது தான்.(Cooking of Account Books என்பதை இவ்வாசிரியர் எவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருக்கிறார் என்பதை கவனியுங்கள்).

       ஒரு பிரபல அரசியல்வாதி இலஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு விட்டார் என செய்தி வரும் போது நீங்கள் என்ன ரீயாக்ஷன் கொடுப்பீர்கள்?  அவர் இலஞ்சம் வாங்கியது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது.  அவர் மாட்டிக் கொண்டது தான் அதிர்ச்சியாக இருக்கும். அதே நிலைதான் தற்போதும் நடந்துள்ளதாக நினைக்கிறேன்.

       ஏறக்குறைய எல்லாக் குழுமங்களின் கணக்குகளும் அட்சர சுத்தமாக இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.   கடந்த காளை ஒட்டத்திற்கு காரணமே தகவல் தொழில் நுட்ப குழுமங்கள் தான்.  அதாவது I.T. Index குழுமங்கள்தான்.  ஒவ்வொரு காலாண்டிற்கும் அவர் நம்மைவிட அதிகமாக கொடுத்துவிடுவாரோ என பயந்து பயந்து கணக்கினை சமைக்க ஆரம்பித்து விட்டனர் (மீண்டும் இவ்வாசிரியர் புத்திசாலித்தனமான மொழி பெயர்ப்பை உபயோகப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள்). 

     இப்போது எல்லோரும் அவரவர் கணக்கு புத்தகங்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  நானும் என் கணக்கு புத்தகத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.  என் சகோதரனும் அதை இப்போது கவனிக்க ஆரம்பித்திருக்கிறான்.   இந்த வலைப்பூ இன்னும் சில நாட்களுக்குள் Update  செய்யப்படா விட்டால் முடிவினை ஊகித்துக் கொள்ளுங்கள். 

      யோவ், சத்யத்தின் கதி, அதை சொல்லுய்யா என்று நீங்கள் மரியாதையாக கேட்பதனால் ஒரு விஷயம் சொல்லுகிறேன்.  சத்யத்தின் கதி அதோ கதி எல்லாம் கிடையாது.  ஆனால் அக்குழுமம் 0 அளவிற்கெல்லாம் போகும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.  ஆனால் மீண்டும் ரூபாய் 400 என்ற அளவுக்கு போக வெகுநாள் ஆகும் என்று மட்டும் தோன்றுகிறது.  எனக்கே கூட அக்குழுமத்தை வாங்கி விடலாம் ஒரு ஆசை எழுந்தது.  பணம் கொஞ்சம் குறைந்ததால் விட்டு விட்டேன்.  எத்தனை பேருக்கு இந்த மாதிரி தோன்றியிருக்கும்?

      நேற்று சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் இதன் முதல் பகுதியை இப்போது எழுதியிருக்கிறேன்.  இதன் அடுத்த பகுதிகளை தொடர்ந்து வெளியிடுவேன் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால், தயவு செய்து பங்கு சந்தையில் வணிகம் தொடர்ந்து வணிகம் செய்ய வேண்டாம்.  அப்பாவிகளை சந்தை மன்னிக்காது. 

      ஆனால், இது தொடர்பாக எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறன.  நானும் புத்திசாலி என்பதை எப்படியாவது காண்பிக்க வேண்டுமே?  அதனால் இதை தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  நம்பிக்கை தானே வாழ்க்கை.

I think this is the perfect opportunity for the Hero.  A Hero must rise.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

07-01-2009 09-01-2009

17 Comments Add your own

 • 1. Vigneshkumar  |  January 8, 2009 at 1:09 pm

  Nice and enjoyed very much sir….கலக்குறீங்க!

 • 2. vimal  |  January 8, 2009 at 1:18 pm

  கலக்குறீங்க josh sir.

 • 3. Karthikeyan G  |  January 8, 2009 at 1:38 pm

  ராமலிங்க ராஜு ‘தன்னை பற்றி தவறாக எழுத வேண்டாம், சிறப்பாக எழுதவும்’ என்று கூறி அனைவரிடமும் 20 ரூபாய் கொடுத்து வருவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் வாங்கியிருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். 🙂

 • 4. sharehunter  |  January 8, 2009 at 1:44 pm

  ராஜு இவ்வளவு ஏமாற்றுக்காரராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு பத்து ரூபாய் மட்டுமே கொடுத்தார்.

 • 5. DG  |  January 8, 2009 at 4:06 pm

  கலக்குறீங்க

 • 6. S.T.Murugan  |  January 8, 2009 at 4:14 pm

  friends,tamillil eappadi eluthavandum.pls tell me.

 • 7. Karthikeyan G  |  January 8, 2009 at 4:25 pm

  உங்கள் வெள்ளை மனம், தங்க மனம் அறியாமல் இருந்துவிட்டேன். நீங்கள் நிச்சயம் ராஜுவிடம் கையூட்டு பெற்றிருக்க மாட்டீர்கள்.


  தங்கம் எங்கே !
  தங்கம் எங்கே !!

  தரணியிலிருந்த தங்கமெல்லாம்
  தாரகைகள் வசமானதோ !

  கோலாரின் தங்கமெல்லாம்
  கோல மகளிர் கைபோனதோ !!

  தங்கத்திற்கு தட்டுபாடு தரணி யிலிருந்தாலும்
  தமிழகத்தில் இருக்காது.

  நம்மிடத்தில் தங்கத்திற்கு தங்கமாய் ஜோஸ் இருக்கிறாரே !
  அவர்தான் அங்கம் அங்கமாய் ஜொலிக்கிறாரே !!

  (Note:: பத்தில் ஐந்தை கொடுத்து விடவும்)

 • 8. Rajkumar  |  January 8, 2009 at 4:52 pm

  சோதனை (சத்யம் ) மேல் சோதனை (வேதாள நகரம் ) வேணுமடா சாமி

 • 9. செழி  |  January 8, 2009 at 5:10 pm

  (1) இந்த தலைப்பை தற்போது அனைவரும் உபயோகித்து வருகிறார்கள் என்றாலும், முதலில் உபயோகித்தது நான் என்பதால் இதையே மீண்டும் உபயோகப்படுத்துகிறேன். = அப்ப காந்தி அடிகள் இந்த தலைப்ப யூஸ் பண்ணலையா?

  (2) கணக்கு புத்தகங்களை சமைத்தது தான்.(Cooking of Account Books என்பதை இவ்வாசிரியர் எவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருக்கிறார் என்பதை கவனியுங்கள்) = கொய்யால, என்ன தமிழு? என்ன தமிழு?

  (3) ஆனால், இது தொடர்பாக எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறன. நானும் புத்திசாலி என்பதை எப்படியாவது காண்பிக்க வேண்டுமே? அதனால் இதை தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கை = அப்ப நாங்க எல்லாம் என்ன அதி புத்திசாலியா?

  (4) ராஜு இவ்வளவு ஏமாற்றுக்காரராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு பத்து ரூபாய் மட்டுமே கொடுத்தார் // Note:: பத்தில் ஐந்தை கொடுத்து விடவும் = ஆசை, தோசை, அப்பளம் வடை. அவரு கொடுத்தது கள்ள நோட்டு தான்.

 • 10. Rafiq Raja  |  January 8, 2009 at 5:42 pm

  சத்ய சோதனை, அருமையான தலைப்பு.

  உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் பங்கு வேட்டையரே.. சில உயர்ந்த பதவி வகிக்கும் கரை படிந்த ஆட்களினால் ஒரு நாடே பொருளாதார பின்னடைவு ஏற்படுவதை எவ்வாறாவது தடுப்பது நல்ல ஒரு அரசாங்கத்தின் கடமை. சத்யம் நிலை மற்ற நிறுவனங்களுக்கு ஒரு பாடம்.

  ஆனாலும் தற்போது சத்யம் பங்குகள் உள்ள விலையில் அதில் முதலீடு செய்வது ஒரு நல்ல யுத்தியாக இருக்கும். ஆனால் எவ்வளவு பேருக்கு அந்த தெகிரியம் இருக்கிறது என்று விரல் விட்டு எண்ணி விடலாம்.

  அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரின் நிலை சுமூகமாக ஆக பிரர்த்திபதை தவிர வேறு என்ன பண்ண முடியும்.

  சரி உங்களுக்கு குடுக்கப்பட்ட 10 ரூபாய் பணம்மாக தானே…. எங்கயாவது காந்தி கு பதிலாக ராஜு படம் போட்டு கீட்டு இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளுங்கள் 🙂

  Rafiq Raja
  COMICOLOGY & ராணி காமிக்ஸ்

 • 11. sharehunter  |  January 8, 2009 at 7:46 pm

  செழியன்,

  காந்தியடிகள் சத்தியமா இந்த தலைப்ப யூஸ் பண்ணலைங்க. அவரு வைச்சது வேற தலைப்பு. தமிழுல மொழி பெயர்ப்பு செய்த போது வைச்சது தான் சத்திய சோதனை.

  நான் உபயோகித்தது சத்ய சோதனை. எவ்வளவு வித்தியாசம். விஸ்வாவுக்கும், விஷ்வாவுக்கும் உள்ள வித்தியாசம் போல.

 • 13. kvrtex  |  January 8, 2009 at 9:22 pm

  yenaku raju supar idia kudutaru.?

 • 14. V.SURESH, SALEM  |  January 9, 2009 at 8:43 am

  Good Mornig sir.

  good Morning to everybody and wish you all successful trading.

 • 15. Mubaarak  |  January 10, 2009 at 11:59 am

  வணக்கம்,
  பங்குவணிகம் பற்றி எனக்கு அரைகுறை ஞானம் கூட இல்லை. சத்யம் பற்றி பரபரப்பாக பேசிக்கொள்கிறார்களேன்னு இதப்படிச்சேன். 🙂

  உங்க நடை சூப்பரா இருக்கு (எழுத்து நடைய சொன்னேன்)

  //இதன் அடுத்த பகுதிகளை தொடர்ந்து வெளியிடுவேன் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால், தயவு செய்து பங்கு சந்தையில் வணிகம் தொடர்ந்து வணிகம் செய்ய வேண்டாம். அப்பாவிகளை சந்தை மன்னிக்காது. //

  செம சிரிப்பாணி 🙂

  நல்லாருங்க

 • 16. SHANKAR VISVALINGAM  |  January 11, 2009 at 5:13 pm

  நண்பரே,

  துன்பம் வந்தால் சிரியுங்கள் என்று கூறாமல் கூறிச் செல்கிறீர்கள். அருமையான நடை.

  உற்சாகத்துடன் தொடருங்கள்

 • 17. Karthikeyan G  |  January 13, 2009 at 6:54 pm

  http://www.hindu.com/mp/2007/05/15/stories/2007051550570100.htm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: