07-01-2009
January 7, 2009 at 6:36 am 9 comments
அமெரிக்க சந்தை நேற்று 60 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் ஒரளவு எழுச்சியுடன் இருப்பதாக படுகிறது. நமது சந்தை இன்று டெக்னிகல் ரெசிஸ்டென்ட்டான 3160 என்ற இலக்கை உடைக்க முயற்சி செய்யக்கூடும். அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தில் 3195 வரை மேலே செல்லும் என எதிர்பார்க்கிறேன்.
ஆனால் அந்த இலக்கை தற்போது தக்க வைத்துக் கொள்ள இயலாது என்றே நினைக்கிறேன். Selling Pressure 3200 என்ற இலக்கில் மிகக் கடுமையாக இருக்கக்கூடும். அதனையும் உடைப்பதற்கு வேறு புதிய நல்ல செய்திகள் தேவை. அடுத்த வாரம் வரவிருக்கும் குழுமங்களின் காலாண்டு அறிக்கைகளில் நல்ல செய்திகள் இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.
ரிலையன்ஸ் இன்ட்ஸ்ரிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு அறிக்கைகள் நல்லவிதமாக இருக்காது என்ற வதந்தி தற்போது பரவி வருகிறது. சந்தையை பாதிக்கும் காரணிகளுள் அவைகளும் ஒன்று. ஆக்ஸிஸ் வங்கியின் காலாண்டு அறிக்கை வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவர உள்ளது. மிக வலுவான அடிப்படையை கொண்ட தனியார் வங்கிகளில் அதுவும் ஒன்று என்பதால் நல்ல காலாண்டு அறிக்கையை அளிக்கக் கூடும்.
இன்றைய சந்தையின் ஆரம்பத்தில் Selling Pressure ல் சந்தை சிறிதளவு தடுமாறக்கூடும் என நினைக்கிறேன். சமாளித்துக் கொண்டு மேலே செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சந்தையானது -45 முதல் 65 வரை ஆடும் என நினைக்கிறேன்.
இன்று மாலை விரிவாக எழுதிட முயற்சி செய்கிறேன்.
Dislclaimer படிங்கய்யா.
Good Morning to You All.
Post Market:
சத்யம் என்ற வார்த்தைக்கு இன்று வேறு அர்த்தம் இருப்பது நிருபணமாகி இருக்கிறது. ஒரு குழுமத்தை ஆரம்பித்து உலக அளவில் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்த்தவரே இவ்வாறு செய்திருப்பது அதிர்ச்சியை தருகிறது.
இது குறித்து விரிவாக சத்தியமாக நாளை எழுதுகிறேன். சத்திய சோதனையால் இன்றைய சந்தை 200 புள்ளிகளை இழந்த பின்னர் மீளவே இல்லை. நாளை விடுமுறை என்பது நிம்மதி. அடுத்த வாரத்திற்குள் சத்தியத்தின் பாதை தெளிவாக தெரிந்து விடும்.
இந்திய பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அது குறித்து ஒரு பிரபலம் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.
‘ஒரு ஆலமரம் சாயும்போது நிலம் அதிரதான் செய்யும்.’
Entry filed under: Market Analysis.
1.
V.SURESH, SALEM | January 7, 2009 at 6:43 am
GOOD MORNING TO EVERYBODY AND WISH YOU ALL HAPPY AND PROFITABLE TRADING.
2.
DG | January 7, 2009 at 7:13 am
என் இனிய காலை வணக்கம்
3.
j.saravanan sivampatti | January 7, 2009 at 7:14 am
thankyou sir,
4.
Vimal | January 7, 2009 at 7:36 am
அடுத்த வாரம் எவ்வளவு நாள் விடுமுறை ?
யாராவது சொல்லுங்கள் .
5.
Karthikeyan G | January 7, 2009 at 9:04 am
//Dislclaimer படிங்கய்யா. //
பார்த்தேன்! படித்தேன்!! ரசித்தேன்!!!
6.
vimal | January 8, 2009 at 8:50 am
sebi announced that it will removes satyam from nifty on 12-th january’2009.
சத்யம் ஸ்டாக் வைதுள்ளர்வர்களின்
கதி என்ன ?
7.
vimal | January 8, 2009 at 11:53 am
dear josh.
please give your view about the following details.
—————–
Taken from rediff
In an hour-long chat on rediff.com on Wednesday, market expert Pranav Sanghavi offered some valuable tips to our readers.
01. v@rediff.com asked, is unitech is nex t followed by satyam
PRANAV SANGHAVI answers, There are doubts on various large, midcap and smaller companies about their honesty and integrity. Unitech could now be scrutinized minutely.
02. laxmikant asked, I have purchase Unitech at 42.what will be the status in the present scenario
PRANAV SANGHAVI answers, Unitech going the Satyam way was the rumour floating around the markets and the stock tanked heavily today.
03.babu asked, Hi i ve suzlon, Unitech and Rs 100 and above per share what should i do
PRANAV SANGHAVI answers, They have taken a beating as there are rumors they will also go the Satyam way. If there is no such fraud in these companies one should not be worried. If you hold with a long term view
—————–
please give your view about the following details.
8.
sharehunter | January 8, 2009 at 11:59 am
விமல்,
நான் மாலைக்குள் இது தொடர்பான எழுதி கொண்டிருப்பதை வெளியிடுகிறேன்.
9.
Karthikeyan G | January 8, 2009 at 12:44 pm
//sebi announced that it will removes satyam from nifty on 12-th january’2009.
சத்யம் ஸ்டாக் வைதுள்ளர்வர்களின்
கதி என்ன ?
//
i think Satyam will be remove only from NIFTY, not from NSE.