வேதாள நகரம் – 11 எதிர் தாக்குதல்

January 2, 2009 at 9:01 pm 12 comments

      நமது இலட்சிய குதிரை வீரர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி கடகடவென, படபடவென, மடமடவென, குபுகுபுவென, தடதடவென ஒடிவந்த எஸ்கோபார் ‘அவர்கள் வந்து விட்டார்கள்’ என அலறினார்.

     உடனே உஷாரான விஷ்வா, ‘ஓடுங்கள், பிரிந்து ஓடுங்கள்’ என கதறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

      கலீலும் அந்த இடத்தை விட்டு அப்பீட்டானார்.

      இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட சதீஷ் ஸ்டெல்லாவின் கையை பிடித்து ‘வா, ஒடி விடுவோம்’

      ‘யார் அந்த அவர்கள்?’

      ‘யாரென்று தெரியவில்லை.  ஆனால் அவர்களின் இலக்கு யாரென்று தெரியும்’ என்று சொல்லி விட்டு அவளின் கையை பிடித்துக் கொண்டு உள்ளூர குஷியுடன் ஓடினார்.

==========================================================

       வேகமாக ஒடிய விஷ்வா தன் அறைக்கு போய் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறிய போது, அவரை முறைத்துக் கொண்டே அந்த ஹோட்டலின் உள்ளே ஒருவன் வந்தான்.  அவனின் நோக்கம் என்னவென்று சட்டென்று புரிந்து கொண்ட விஷ்வா புன்னகையுடன் தான் எடுத்து வந்த பொருட்களை அருகிலுள்ள மேசையில் வைத்து விட்டு சண்டைக்கு தயாரானார்.  சின்ன அணிலையே எதிர்த்து வென்ற மாவீரனான விஷ்வா சில கராத்தே முத்திரைகளை செய்து காட்டினார்.

      எதிராளி அவரை இன்னும் வெறித்துக் கொண்டு  இருப்பதை கண்ட விஷ்வா மேலும் சில கராத்தே முத்திரைகளை செய்து காட்டினார்.  அவற்றில் ஆர்வம் இழந்த எதிராளி அருகிலிருந்த பீர் பாட்டில் ஒன்றை எடுத்து அவர் மேல் வீசி எறிந்தான்.

      650 மில்லி  பீரை கொண்டிருந்த அந்த பாட்டில் காற்றில் வெகு வேகமாக சென்று விஷ்வாவின் வயிற்றை பலமாக தாக்கியது.  அதனால் ஏற்பட்ட வலியை சமாளித்துக் கொண்ட விஷ்வா, அவனை பார்த்து கீழ்கண்டவாறு பேசினார்.

     ‘டேய் நாயே, உனக்கு கராத்தே தெரியவில்லை என்றால் அதை எனக்கு முன்னாலேயே சொல்லியிருக்கலாமே.  நான் பாட்டுக்கு பேசாமல் ஒடியிருப்பேனே.  அதை விட்டுவிட்டு இது என்ன பாட்டிலை துாக்கி அடிக்கிறது? சுத்த காவாலிதனமால்ல இருக்கு.’

இவரும் நம் பச்சை மின்னலுக்கு சொந்தகாரர் தான்.

இவரும் நம் பச்சை மின்னலுக்கு சொந்தகாரர் தான்.

     என கூறி, தன் பொருட்களை மேசையிலிருந்து எடுத்துக் கொண்டு அருகிலிருந்து ஜன்னலை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தார்.   ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிக்கும் போது பச்சை மின்னலார் கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்து விட்டு தப்பி ஒடினார்.

             ‘எனக்கு வலிக்கலையே!’

=========================================================================

        கலீல் தன் ஆறடி நீளமுள்ள சாட்டையை  ஒரு தடவை தடவிவிட்டு தாக்குதலுக்கு தயாரானார்.  சாட்டையை எதிராளியை நோக்கி வீசினார்.   அந்த சாட்டை வளைந்து, நெளிந்து, இழைந்து, கலைந்து மற்றும் பல ந்துகளை செய்து இலக்கை தாக்கியது.

       இரத்தத்தை பார்த்த எதிராளி பயந்து தப்பி ஒடினான்.

       

சாட்டையடி வீரன்

சாட்டையடி வீரன்

       தன்னுடைய இரத்தத்தை பார்த்த கலீலுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

===========================================================================

          ஸ்டெல்லாவை கூட்டிக் கொண்டு குஷியாக ஒடிக் கொண்டிருந்த சதீஷின் பாதையை ஒரு முரடன் மறைத்தான்.  

         ‘டேய், நீ எதற்காக என்னை வழி மறைக்கிறாய் என்பது தெரியும்.  ஆபத்தில் சிக்கியிருக்கும் அபலை பெண்ணை காப்பதற்காக நான் யாரையும் எதிர்ப்பேன்.’

       ‘ஆபத்தில் சிக்கி இருப்பது நீதான்.’

       ‘அப்ப இவளை நீ விட்டு விடுவாய். அப்படிதானே?’

        ‘ஆம்.’

        ‘இவளுடைய நண்பனான என்னையும் நீ ஏன் அவ்வாறே விட்டு விட கூடாது?’

        இந்த உரையாடலால் குழப்பம் அடைந்த அந்த முரடன்,

       ‘யோவ், பேசாம சண்டைக்கு வாய்யா.’

       ஸ்டெல்லாவை பார்த்து புன்னகை செய்துக் கொண்டே சதீஷ் சண்டைக்கு தயாரானார்.  முதலில் கையிலிருந்து கைக்கடிகாரத்தை கழற்றினார்.  பின்னர் பேன்ட் பாக்கெட்டிலிரூந்து கைக்குட்டையை எடுத்து அதை ஒரு மேசையின் மீது விரித்தார்.  அதில் அந்த கைக்கடிகாரத்தை மிகவும் பத்திரமாக வைத்தார். பிறகு அந்த கைக்குட்டையை நான்காக மடித்தார்.

       ஸ்டெல்லா ஒரு அழகிய கொட்டாவி விட்டார்.

      அந்த முரடனோ இந்த ஆள்கிட்ட பேச்சு கொடுத்து மாட்டிக்கக் கூடாது என பொறுமையில்லாமல் காத்திருந்தான்.

      ஏதோ நினைத்துக் கொண்ட சதீஷ் அந்த கைக்குட்டையை மீண்டும் ஜாக்கிரதையாக பிரித்தார்.  அதிலிருந்து அந்த கைக்கடிகாரத்தை எடுத்து சாவி கொடுக்க ஆரம்பித்தார்.  நன்றாக சாவி கொடுத்த பின்னர், மீண்டும் அந்த கைக்கடிகாரத்தின் நேரம் சரியாக இருக்கின்றதா என சரிபார்த்தார். பிறகு அந்த கைக்கடிகாரத்தை வெகு பத்திரமாக …….

      ‘யோவ், நீ என்னதாய்யா நினைச்சுகிட்டு இருக்கே.  நான் இன்னும் நாலு இடத்துக்கு போய் நாலு பேர அடிக்கணும்யா.  சீக்கிரம்  சண்டைக்கு வாய்யா.’

      ‘ஏம்பா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.  ஒரு காபி சாப்டுட்டு நம்ம சண்டைய வச்சிக்கிலாமே.’

      பயங்கர கடுப்பான அந்த முரடன் அவரின் வயிற்றில் பலமாக ஒரு குத்து விட்டுவிட்டு,

     ‘சாவுகிராக்கி, வந்து எனக்குன்னு மாட்டுது பாரு.’ என சொல்லி விட்டு வெளியேறினான்.

      அந்த அடியிலிருந்து சமாளித்துக் கொண்டு, சதீஷ் ஸ்டெல்லாவை ஒரக் கண்ணால் காதல் பார்வையுடன், உதடை ஒரு மாதிரி சுழித்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்தார்.

       ‘எவ்வளவோ வாங்கியிருக்கோம்,  இதை வாங்க மாட்டோமோ.’

==================================================================

         குதிரை லாயத்தை நோக்கி ஒடின விஷ்வாவை நோக்கி ஒரு முரடன் ஒரு பிச்சுவா கத்தியை வீசியெறிந்தான். அந்த பிச்சுவா கத்தி விஷ்வாவின் நெஞ்சை நோக்கி  டூர்ரென்று, டர்ரென்று, கிர்ரென்று,     வீர்ரென்று வந்தது.    

          (தொடரும்)

===================================================

       என் உயிரினும் மேலான வாசக கண்மணிகளுக்கு,

       இந்த இலக்கிய விருந்தை கடந்த பதினொன்று பகுதிகளை தொடர்ந்து படித்து உவகைக்குட்பட்டு இருப்பீர்கள்.  இதுவரை நடந்த முன்கதை(?) சுருக்கத்தினை நீங்கள் இங்கு பின்னுட்டமாக இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

     நம் எதிர்கால சந்ததியினர் பயன் அடையும் பொருட்டு சிறப்பான முறையில் எழுதப்படும் முன்கதை சுருக்கமானது இந்த இலக்கிய முயற்சி புத்தகமாக வெளிவந்து பெஸ்ட் செல்லர்ஸ் வரிசையில் இடம் பிடிக்கும் போது ஆசிரியரால் வெளியிடப்படும். 

        காலத்தை வென்று சரித்திரம் படைக்கும் இந்த கருத்துப் பெட்டகத்தில் உங்கள் பெயரும் வரக்கூடும்.  முயற்சி செய்யுங்கள்.

                                                                                                – ஆசிரியர்.

Advertisements

Entry filed under: வேதாள நகரம்.

02-01-2009 05-01-2009

12 Comments Add your own

 • 1. மெர்சி  |  January 2, 2009 at 9:37 pm

  சதீசு மாமோவ்,

  யாரு அந்த ஸ்டெல்லா புள்ள? எனக்கு துரோகம் செய்யாதீங்க மாமா.

  செவிலி மெர்சி (ஆங்கிலத்தில் சொல்வதானால் நர்சு மெர்சி)

 • 2. Rafiq Raja  |  January 2, 2009 at 11:25 pm

  அன்பு பங்கு வேட்டையரே…

  // சதீஷ் ஸ்டெல்லாவின் கையை பிடித்து //
  ஆஹா, பேஷ் பேஷ்… கதை இப்போது தன் சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. 🙂

  // தன்னுடைய இரத்தத்தை பார்த்த கலீலுக்கு //
  இதுக்கு தான் சின்ன புள்ள தனமா விளையாட கூடாதுன்னு சொல்றது

  கதை சுருக்கம்: ஒரு ஊரில் மூன்று குதிரை வீரர்களாம், அவர்கள் ஊரு ஊராக சென்று அடி வாங்குவர்களாம், அப்படி அவர்கள் ஒரு கிழவன் பேச்சை நம்பி வேதாளர் நகரம் செல்லும் சாகசத்தில், தற்போது உயிருக்கு பயந்து ஓடி கொண்டு இருகிறார்களாம் …..

  // காலத்தை வென்று சரித்திரம் படைக்கும் //
  போதும் ஐயா… போதும்… தாங்க முடியல 🙂

  ரஃபிக் ராஜா
  ராணி காமிக்ஸ் & காமிக்கியல்

  பி.கு. முதலில் 12 வது அத்தியாயம் என்று தலைப்பு இட்டு விட்டு, தடாலடியாக 11 என்று திருத்தி உள்ளீர்கள். ஆனாலும் தலைப்பு இன்று மாறாமலே இருப்பதினால் மாட்டி கொண்டீர்கள் 🙂 Heeheheheheheeh…..

 • 3. ANTONY BAADSHA....  |  January 2, 2009 at 11:53 pm

  thamby Sinnarasuuuu…… potu thaaku machi…

 • 4. SHANKAR VISVALINGAM  |  January 3, 2009 at 12:41 am

  அற்புதமான சண்டைக்காட்சிகள், குறிப்பாக விஸ்வா தன்னை நோக்கி வந்த பீர் பாட்டிலை தனது வயிற்றினால் தடுப்பது ஒர் புதிய வகை.

  மணிக்கூட்டில் நேரம் பார்த்து அடிப்பது எனும் புதிய கலையை தீரன் சதீஸ் முயற்சித்து இருப்பது, அவர் ஒர் அஞ்சா நெஞ்சன் என்பதினை காட்டுகிறது.

  தான் காயப்படுவதே தெரியாது போராடும் கலீல் ஒர் உண்மை வீரர், விழுப்புண்களே அவர் போற்றும் விருது.

  இந்த 3 வீரர்களில் சிறந்தவர் யார் என அறிய வேதாள நகர மேயர் ஒர் ஓட்டெடுப்பை நடத்துவது நல்லது.

  ஸ்டெல்லாவிற்கு குறுந்தந்தி அனுப்புவது எப்படி என்பதை ஆசிரியர் விளக்கியிருக்கலாம்.

  3குதிரை வீரர்கள்,ஒர் புதையல், வில்லன் பீரோ, பச்சைமின்னல்,ஸ்டெல்லா, காணாமல் போன செழியன், ஒர் சின்ன அணில் இதற்கு மேல் கதையை சுருக்க இயலவில்லை

  உற்சாகத்துடன் பின்னியெடுங்கள்

 • 5. Anonymous  |  January 3, 2009 at 8:59 am

  யோவ், நீ என்னதாய்யா நினைச்சுகிட்டு இருக்கே. நான் இன்னும் நாலு இடத்துக்கு போய் நாலு பேர அடிக்கணும்யா. சீக்கிரம் சண்டைக்கு வாய்யா.’
  அந்த அடியிலிருந்து சமாளித்துக் கொண்டு, சதீஷ் ஸ்டெல்லாவை ஒரக் கண்ணால் காதல் பார்வையுடன், உதடை ஒரு மாதிரி சுழித்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்தார்.
  ஏம்பா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஒரு காபி சாப்டுட்டு நம்ம சண்டைய வச்சிக்கிலாமே.’

 • 6. கிங் விஸ்வா  |  January 3, 2009 at 9:03 am

  இறைவா,
  என்னை (ஜோஸ் போன்ற) நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்.

  //கடகடவென, படபடவென, மடமடவென, குபுகுபுவென, தடதடவென// மட மடவென இதை எழுதிய ஆசிரியர் திபு திபுவென தண்ணீர் குடிக்க ஓடினார்.

  //இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட சதீஷ் ஸ்டெல்லாவின் கையை பிடித்து ‘வா, ஒடி விடுவோம்’// சந்துல சிந்து பாடுவது இது தானா? ஒரு உலக புகழ் பெற்ற மருத்த்துவரை இப்படியா கேவலப் படுத்துவது?

  //விஷ்வா மேலும் சில கராத்தே முத்திரைகளை செய்து காட்டினார்// ஏற்கனவே நம்ம நிலைமை ரொம்ப மோசம். இதுல கராத்தே வேறயா?

  //ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிக்கும் போது பச்சை மின்னலார் கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்து விட்டு தப்பி ஒடினார்.
  ‘எனக்கு வலிக்கலையே!’// அடப் பாவிகளா, அடி வாங்கியது நான். வலி எனக்கு தான் தெரியும். உங்களுக்கு என்ன தெரியும்?

  //அந்த சாட்டை வளைந்து, நெளிந்து, இழைந்து, கலைந்து மற்றும் பல ந்துகளை செய்து இலக்கை தாக்கியது// சூப்பர் லந்து.
  // ஸ்டெல்லாவை கூட்டிக் கொண்டு குஷியாக ஒடிக் கொண்டிருந்த சதீஷின்// இதுல என்னையா குஷி வேண்டி கிடக்கு?

  //அந்த முரடனோ இந்த ஆள்கிட்ட பேச்சு கொடுத்து மாட்டிக்கக் கூடாது என பொறுமையில்லாமல் காத்திருந்தான்// சூப்பர் ஐடியா இது.

  // அந்த அடியிலிருந்து சமாளித்துக் கொண்டு, சதீஷ் ஸ்டெல்லாவை ஒரக் கண்ணால் காதல் பார்வையுடன், உதடை ஒரு மாதிரி சுழித்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்தார்.
  ‘எவ்வளவோ வாங்கியிருக்கோம், இதை வாங்க மாட்டோமோ.’// இவ்வளவு நாலா நான் தான் சிக்கி இருந்தேன். இப்போ மருத்துவருமா? ஐயோ பாவம்.

  //அந்த பிச்சுவா கத்தி விஷ்வாவின் நெஞ்சை நோக்கி டூர்ரென்று, டர்ரென்று, கிர்ரென்று, வீர்ரென்று வந்தது// இதை படித்த எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

  //இந்த இலக்கிய விருந்தை கடந்த பதினொன்று பகுதிகளை தொடர்ந்து படித்து உவகைக்குட்பட்டு இருப்பீர்கள்// ஆமாம், ஆமாம்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

 • 7. vadivelsamy  |  January 3, 2009 at 9:03 am

  நமது இலட்சிய குதிரை வீரர்கள் யார் அந்த அவர்கள்?’சாவுகிராக்கி, வந்து எனக்குன்னு மாட்டுது பாரு.’ என சொல்லி விட்டு வெளியேறினான்.யோவ், நீ என்னதாய்யா நினைச்சுகிட்டு இருக்கே. நான் இன்னும் நாலு இடத்துக்கு போய் நாலு பேர அடிக்கணும்யா. சீக்கிரம் சண்டைக்கு வாய்யா. அந்த அடியிலிருந்து சமாளித்துக் கொண்டு, சதீஷ் ஸ்டெல்லாவை ஒரக் கண்ணால் காதல் பார்வையுடன், உதடை ஒரு மாதிரி சுழித்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்தார்
  ‘ஏம்பா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஒரு காபி சாப்டுட்டு நம்ம சண்டைய வச்சிக்கிலாமே.’

 • 8. செழி  |  January 3, 2009 at 9:45 am

  (1) அற்புதமான சண்டைக்காட்சிகள், குறிப்பாக விஸ்வா தன்னை நோக்கி வந்த பீர் பாட்டிலை தனது வயிற்றினால் தடுப்பது ஒர் புதிய வகை = என்ன ஒரு அற்புதமான யுத்தி. இதை என் நம்முடைய கதாநாயகர்கள் பின்பற்றுவதில்லை?

  (2) மணிக்கூட்டில் நேரம் பார்த்து அடிப்பது எனும் புதிய கலையை தீரன் சதீஸ் முயற்சித்து இருப்பது, அவர் ஒர் அஞ்சா நெஞ்சன் என்பதினை காட்டுகிறது. = ஆமாம், ஆமாம்.

  (3) தான் காயப்படுவதே தெரியாது போராடும் கலீல் ஒர் உண்மை வீரர், விழுப்புண்களே அவர் போற்றும் விருது = அவர் தான் உன்னதமான வீரர். கடமையில் என்ன நடந்தாலும் அது அவரது கவனத்தை கவராது.

  (4) இந்த 3 வீரர்களில் சிறந்தவர் யார் என அறிய வேதாள நகர மேயர் ஒர் ஓட்டெடுப்பை நடத்துவது நல்லது. = இன்னும் ஒரு வோடேடுப்பா?

  (5) ஸ்டெல்லாவிற்கு குறுந்தந்தி அனுப்புவது எப்படி என்பதை ஆசிரியர் விளக்கியிருக்கலாம்.= அவர் காதல் வாழ்க்கையில் என் இப்படி தடங்கல் செய்கிறீர்?

  (6) 3குதிரை வீரர்கள்,ஒர் புதையல், வில்லன் பீரோ, பச்சைமின்னல்,ஸ்டெல்லா, காணாமல் போன செழியன், ஒர் சின்ன அணில் இதற்கு மேல் கதையை சுருக்க இயலவில்லை = சூப்பர்.

 • 9. செழி  |  January 3, 2009 at 12:12 pm

  யோவ்,

  நீயெல்லாம் ஒரு ஆசிரியனா? நானும் எவ்வள்வு நாலா எனக்கு ஒரு “வாய்ப்பு” கொடு’ன்னு கேட்டுட்டு இருக்கேன். நீங்க என்னடா’ன்னா அதை கண்டு கொள்ளவே இல்லையே?

  என்னுடைய வெறுப்பை காட்டவே நான் கதைக்கு கமெண்ட் போடாமல், கமெண்ட்’க்கு கமெண்ட் போட்டேன்.

  செழியன்.

 • 10. காமிக்ஸ் பிரியன்  |  January 4, 2009 at 8:23 am

  நண்பரே,
  உங்கள் கதையில் மேலோங்கி இருக்கும் நகைச்சுவை உணர்வு சமீப காலத்தில் வேறு யாருடைய எழுத்திலும் இருந்ததில்லை (மொக்கை காமிக்ஸ் உட்பட). 4th Dimension என்ற யுத்தி பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா? அதனை மிகவும் சரளமாக உபயோகிக்கிறீர்களே?

  தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் எத்ததனை வாரங்கள் எழுத உத்தேசம்?

  காமிக்ஸ் பிரியன்.

 • 11. chezhiyan  |  January 6, 2009 at 8:24 pm

  what is that 4th dimension? is it related with movies and drama?

 • 12. Chitira Puthaga Maha Rasigan  |  January 8, 2009 at 3:17 am

  //கடகடவென, படபடவென, மடமடவென, குபுகுபுவென, தடதடவென//
  //டூர்ரென்று, டர்ரென்று, கிர்ரென்று, வீர்ரென்று//

  ஒரே சிரிப்பு தான் இவற்றை படித்து விட்டு..
  தொடருங்கள் நண்பரே…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: