30-12-2008
December 30, 2008 at 6:44 am 5 comments
இணையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நான்கு நாட்களாக இணையத்தில் இயங்க முடியவில்லை. ஏர்டெல் மிக துரிதமாக செயல்பட்டு ஏற்பட்ட கோளாறை சரிசெய்து விட்டனர். அவர்களுடைய சேவை மைய பணியாளர்கள் கனிவான முறையில் சேவையை தருகின்றனர். அதற்காக இந்த விலையில் ஏர்டெல் வாங்கிடாதீங்க. கொஞ்சம் பொறுங்க.
நமக்கும் பெயில் அவுட் பணம்னு ஏதாச்சும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நமது சந்தை நேற்று மேலேறியது. அது பற்றி தெளிவான விவரங்கள் தெரிய வராத நிலையில், இன்றைய ஆசிய சந்தைகள் உயர்ந்து காணப்பட்டிருந்த போதிலும், நமது சந்தை கீழ்நோக்கி பயணம் செய்யவே வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்க சந்தை நேற்றைய தினம் மிகவும் தடுமாறி முடிந்திருக்கிறது குறிப்பிடதக்கது. பொருளாதார சிக்கல் இன்னும் முடிந்துவிடவில்லை. 3000 என்பது நமக்கு இப்போது பெரிய இலக்காக தோன்றுகிறது. அடுத்த மாதத்தில் 2500 என்பது அவ்வாறாக தோன்ற வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன்.
இன்றைய சந்தை -78 முதல் 55 வரை ஆடலாம். முடிவு நெகடிவ்வாக தான் இருக்கும் என நினைக்கிறேன். Ind-Pak Standoff இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தானில் தற்போது இருக்கும் பலவீனமான தலைமையை இந்தியா உபயோகித்துக் கொள்ள முயற்சி செய்யும் என்றே நம்பி வந்துள்ளேன். அந்த விவகாரம் இன்னும் சுமுகமாக முடியாத நிலையில் நாமும் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்வது நல்லது.
மாலையில் விரிவாக எழுதுகிறேன். நிப்டியானந்தா பகுதியை Update செய்திருக்கிறேன்.
Good Morning To You All!
Post Market:
அமெரிக்க சந்தையில் பெயில் அவுட் பேகேஜ் வரபோகிறது என்ற செய்தியின் அடிப்படையில் ஐரோப்பிய சந்தைகள் மேலேற ஆரம்பித்ததன. நம் சந்தையும் அதையொட்டியே நகர்ந்தன. ஆனாலும், 70 புள்ளிகளில் நிற்க இயலாமல் 50 புள்ளிகளில் சரிந்துவிட்டது. இன்றைய அமெரிக்க சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் முடியும் பட்சத்தில் நம் சந்தை நாளை 3000 என்ற இலக்கை அடையும் என எதிர்பார்க்கலாம்.
Entry filed under: Market Analysis.
1.
kannan | December 30, 2008 at 7:13 am
காலை வணக்கம்.உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்.எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
2.
V.SURESH, SALEM | December 30, 2008 at 7:26 am
Good Morning and thank you very much for your views sir.
Good Morning to everybody and wish you all happy and profitable trading .
3.
DG | December 30, 2008 at 7:29 am
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்கும்.எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-bd
4.
Daid Raja | December 30, 2008 at 7:46 am
Good Morning sir , Thank you !
5.
shan | December 30, 2008 at 4:01 pm
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்.எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்