Archive for December 24, 2008

24-12-2008

       நேற்றைய தினமும் அமெரிக்க சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இறக்கத்துடன் முடிவடைந்தது. இன்றைய ஆசிய சந்தைகளும் 1-2 சதவீதம் அளவிற்கு இறக்கத்துடன் காணப்படுகின்றன. 

       இன்று  F & O Closing Date.   Volume குறைவாக இருப்பதால் சந்தையின் முதல் இரண்டு மணி நேரத்தில் சந்தையை இறக்கத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன்.    சரியாக Homework செய்து கொண்டு போனால் இன்று தின வணிகர்கள் நல்ல இலாபம் ஈட்டலாம். 

      நிப்டி குறியீட்டில் இருக்கும் சத்யம் குழுமம் பற்றி  மேலும் மேலும் மோசமான செய்திகள் அல்லது வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.  இரண்டு இலக்கத்திற்கு வந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன்.  Satyam has very strong foundation and let’s see how the management save from this crisis. Maybe we could learn a thing or two from this fiasco.

       புதிய வருடம் ஜனவரி 2009 அவ்வளவாக உற்சாகமான மாதமாக பங்கு சந்தைக்கு இருக்காது என நினைக்கிறேன்.  புதிய பள்ளங்களை தொடப் போகும் மாதம் அது என்றே நினைக்க தோன்றுகிறது.

        இன்றைய சந்தை -115 முதல் 45 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவு Flat or Negative. 

       Good Morning to You All!

       Merry Christmas!

December 24, 2008 at 6:24 am 9 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031