Archive for December 22, 2008
22-12-2008
எந்தவித க்ளுவும் கிடைக்காமல் ஆசிய சந்தைகள் தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. நமது சந்தை Flat or Negative ஆரம்பத்துடன் துவங்கும் என நினைக்கிறேன்.
Futures காண்ட்ராக்ட் முடியும் வாரம் என்பதால் சந்தையின் ஊசலாட்டம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில்தான் ஆபரேட்டர்கள் சந்தையை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார்கள். வால்யூம் குறைவாக உள்ள நிலையில் எது வேண்டுமானாலும் சாத்தியமே.
கிறிஸ்மஸ் தினம் வியாழனன்று வருவதால் தொடர் வணிக நாட்களில் ஒரு இடைவெளி வந்தால் சந்தையின் நிலை அலைகழிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. இன்றைய சந்தை -85 முதல் 55 வரை ஆடலாம் என்று நினைக்கிறேன்.
சந்தை 2500 என்ற நிலைக்கு வர வாய்ப்புகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். முதலீடு செய்யும்போது ஒரு தடவை யோசித்து கொள்வது நல்லது.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Good Morning to you All!
Post Market:
இந்தியா-பாக்-அமெரிக்கா உள்துறை அமைச்சர்களிடையே நடக்கும் விவாதங்களை செய்திதாட்களில் கூர்ந்து கவனித்து வரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏறக்குறைய கீழ்க்கண்ட மாதிரி தான் இருக்கும். அதற்காக கவனிக்காம இருக்காதீங்க.
ஒருவர் : நிறுத்திடு, வேண்டாம்.
இன்னொருவர் : முடியாது.
ஒருவர் : பலத்த அடி படும்.
இன்னொருவர் : யாருக்கு?
ஒருவர் : யாருக்கோ.
புதியவர் : சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துங்கப்பா.
ஒருவர் : எனக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னே தெரியாது.
இன்னொருவர் : என்ன நடக்கும்?
ஒருவர் : அதான் தெரியாதுன்னு சொல்றோம்லே.
இந்த ரேஞ்ச்ல நடந்தாலும் சுமுகமாக முடியாதுன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
Recent Comments