வேதாள நகரம் 10 – தாக்குதல்
December 20, 2008 at 7:29 am 5 comments
‘அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லாவாம்’ என இருநுாற்று முப்பத்தியெட்டாவது தடவையாக சதீஷ் சொன்னார். அறையில் இருந்தவர்கள் எல்லாம் எரிமலையாகி கொண்டிருந்தார்கள்.
‘யோவ், வேற எதாவது பேசேன்’
‘பெருசு, அடுத்து என்ன பண்ணலாம்?’
‘கலீல், இன்னும் ஒரு மாசம் இந்த ஊரை நாம காலி பண்ண போறதில்லை.’
‘ஏன்?’

நமது கதாநாயகன் பச்சை மின்னல்.
‘நாம வேதாள நகரத்துக்கு போறது எல்லோருக்கும் தெரியுது. நமக்கு மட்டுந்தான் எங்கே போறோம்னு தெரியலை. இதைப் பத்தி முழுசா தெரியுற வரை நாம இங்கேயே இருக்கறதுதான் நல்லது. உலகம் ரொம்ப பெரிசு. சின்ன அணில், சின்ன குயில் இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.’
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட ஒரு உருவம் அங்கிருந்து விலகி இருளில் மறைந்தது.
‘கலீல்’
‘சொல்லு, சதீஷ்.’
‘அந்த பொண்ணு………….’
‘யோவ், இதே டயலாக்கை திருப்பி சொன்னே கொண்ணே போட்டுருவேன். அந்த பொண்ணுக் கிட்டே போய் இதெல்லாம் பேசு’
‘அதான் எனக்கு பயமா இருக்கு. என்ன பேசணும்? விஷ்வா, எங்கூட வருவியா?’
‘என்ன ஏன்யா இதில இழுக்குற?’
‘இல்ல, நானே சுமாரா தான் இருக்கேன். அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கணும்னா உன்ன கூட்டிட்டு போனாதானே என்கூட பேசுவா.’
விஷ்வா கொலைவெறி ஆக, கலீல் குறுக்கிட்டு ‘யோவ், ஏன்யா தேவையில்லாமா நாம பிரச்சினை பண்ணிக்கிட்டு? அந்தப் பொண்ணுக் கிட்ட ஏதாவது சிரிக்கிற மாதிரி ஒரு சம்பவத்தை சொல்லு. அப்புறம் அவளே உன் கிட்ட பேச ஆரம்பிச்சுடுவா.’
‘சிரிக்கிற மாதிரின்னா? கரடிமலையில விஷ்வாவை கட்டி வைச்சு அடிச்சாங்களே. அந்த கதைய சொல்லவா? செம காமெடி தெரியுமா அது?’
‘யோவ், சொந்த கதையெல்லாம் காமெடி பண்ணக் கூடாது, சரி, நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி கேள்விப்பட்ட ஒரு கதையை சொல்றேன் அதயே சொல்லு.’
===============================================================
பொழுது புலர்ந்து கதிரவன் தன் மென்மையான கதிர்களை வீச தொடங்கியிருந்தான். கதிரின் இதமான உஷ்ணத்தில் மலர்கள் பூத்து நறுமணத்தை வீசத் தொடங்கின. மூடியிருந்த பனி அரசு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போல கரைந்தது. இதெல்லாம் வேறு ஒரு இடத்தில் நடந்தன. நம் கதை நடக்கும் இடமோ பாலைவனம், அங்கு இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும், கதையில் இயற்கை பற்றிய வர்ணணைகள் இல்லையென்ற குறை பின்னாட்களில் வரலாம் என்ற காரணத்தில் எழுதப்பட்டன.
நம் கதை நடக்கும் இடத்தில் சூரியன் தகதகவென உதிக்க தொடங்கியவுடன், நம் இலட்சிய குதிரை வீரர்களுக்கு பகபகவென வயிறு பசிக்க ஆரம்பித்தது. கீழே இறங்கி ஹோட்டலுக்கு வந்தனர்.
‘கலீல், ஸ்டெல்லா அந்த டேபிள்ல தனியா உட்கார்ந்து இருக்கா.’
‘போய் பேசு. ஞாபகம் இருக்குல்ல.’
‘சாப்ட்டு போறேனே பசிக்குதே.’
‘யோவ், உன் காதலை சொல்ல போறே பூரி கிழங்கு சாப்ட்டுட்டா போறது? இந்தா, இந்த கொய்யாப் பழத்தை வாயில போட்டு மென்னுட்டே போ.’
‘ஹாய்’
‘ஹாய்.’
‘நாம் இரண்டு பேரும் ஒரே ஊருல இருக்கோம். ஒரே ஹோட்டல் தங்கி இருக்கோம். இப்ப ஒரே டேபிள்ல உட்கார்ந்து இருக்கோம். இல்ல?’
ஸ்டெல்லா தன் எதிரில் உட்கார்ந்து இருப்பவரின் மனநிலையை பற்றி சிறிது சந்தேகம் கொண்டாள்.
‘ரொம்ப போர் அடிக்குதுல்ல. சரி, நான் ஒரு கதை சொல்லட்டுமா. ஹஹஹஹ…’
‘சரி, சொல்லு.’
‘ஒரு ஊருல தொண்ணுறு வயசு பெரியவரு ஒருத்தரு இருந்தாரு. ஹஹஹஹ…..அவரு ஒருநாள் குடும்ப டாக்டர்க்கிட்ட போய் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு. அதுக்கு டாக்டரு …ஹஹஹஹ… அதெல்லாம் வேலைக்காவது எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிட்டாரு. ஆனா இவரு கேக்கலை. இருபத்தியெட்டு வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
நாலு மாசம் கழிச்சு திரும்ப டாக்டர பாக்க வந்தாரு…ஹஹஹஹ…….. என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே, என் சம்சாரம் இப்ப மூணு மாசம்னு பெருமையா சொன்னாரு. அதுக்கு டாக்டரு நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தபா ஆப்பிரிக்க காட்டுக்கு போனப்ப ஒரு சிங்கம் என் எதிர்க்க வந்துச்சி. பயங்கரமா உறுமிச்சி. எனக்கு வேற வழி இல்ல. நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன். அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சி செத்துப் போச்சி என கதையை முடிந்தார்.
உடனே அந்த பெருசு அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னாடி இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டுருப்பாங்கன்னு சொன்னாரு. அதுக்கு டாக்டரு ஹஹஹஹ உங்க விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னாரு. ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹஹஹ.
சதீஷ் முகத்தில் கும் என ஒரு பலத்த குத்து விழுந்தது. கீழே விழுந்து எழுந்து பார்த்தால் கண்களில் கொலைவெறியுடன் ஸ்டெல்லா நின்று கொண்டிருந்தது தெரிந்தது.
‘ஏன் என்ன அடிச்சே? இது ஒரு சிரிப்புக் கதை தானே?’
‘என் சொந்த தாத்தா கதை உனக்கு சிரிப்பா இருக்கா?
============================================================================
நோவடியின் எல்லையில் குதிரைகளை நிறுத்தி விட்டு துப்பாக்கிக்ளை அந்த மர்ம கும்பல் தயார் செய்து கொண்டது. குதிரைகளை பார்த்துக் கொள்ள ஒருவரை நிறுத்திவிட்டு மீதியுள்ள நபர்கள் நோவடி நகரத்தை நோக்கி கொலைவெறியுடன் நடக்க தொடங்கினர்.
(……………………. தொடரும்…………………..)
Entry filed under: வேதாள நகரம்.
1.
கிங் விஸ்வா | December 20, 2008 at 8:33 am
இறைவா,
என்னை (ஜோஸ் போன்ற) நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்.
//‘அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லாவாம்’ என இருநுாற்று முப்பத்தியெட்டாவது தடவையாக சதீஷ் சொன்னார்// காதலில் விழுந்த கட்டிளம் காளை?
//விஷ்வா, எங்கூட வருவியா?’
‘என்ன ஏன்யா இதில இழுக்குற?’
‘இல்ல, நானே சுமாரா தான் இருக்கேன். அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கணும்னா உன்ன கூட்டிட்டு போனாதானே என்கூட பேசுவா.’// நண்பரே, இனிமே நமக்குள்ள No more சமாதானம்.
//கரடிமலையில விஷ்வாவை கட்டி வைச்சு அடிச்சாங்களே. அந்த கதைய சொல்லவா? செம காமெடி தெரியுமா அது?’// யோவ், போதுமையா. போதும்.
//இருப்பினும், கதையில் இயற்கை பற்றிய வர்ணணைகள் இல்லையென்ற குறை பின்னாட்களில் வரலாம் என்ற காரணத்தில் எழுதப்பட்டன.// சூப்பர்.
//‘யோவ், உன் காதலை சொல்ல போறே பூரி கிழங்கு சாப்ட்டுட்டா போறது? இந்தா, இந்த கொய்யாப் பழத்தை வாயில போட்டு மென்னுட்டே போ.’// நண்பரே, இதுல என் உங்கள் சொந்த கதையை இழுக்குறீங்க?
//ஸ்டெல்லா தன் எதிரில் உட்கார்ந்து இருப்பவரின் மனநிலையை பற்றி சிறிது சந்தேகம் கொண்டாள்.// கண்டிப்பாக.
// ‘ஏன் என்ன அடிச்சே? இது ஒரு சிரிப்புக் கதை தானே?’
‘என் சொந்த தாத்தா கதை உனக்கு சிரிப்பா இருக்கா?// நிஜம்மாலுமே இது சிரிப்பு கதை தானே? உங்க சொந்த கதை இல்லையே?
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
2.
ரஃபிக் ராஜா | December 20, 2008 at 9:06 am
பொழுது புலர்ந்து கதிரவன் …. நடக்கும் இடமோ பாலைவனம், அங்கு இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. // ரசித்தேன்
மனநிலையை பற்றி சிறிது சந்தேகம் கொண்டாள். // டாக்டருக்கே மன-நிலை பாதிப்பா…. பேஷ் பேஷ்
என் சொந்த தாத்தா கதை உனக்கு சிரிப்பா இருக்கா? // அப்ப “அவளா” இவ ?
கொலைவெறியுடன் நடக்க தொடங்கினர் // மூன்று குதிரை வீரர்களில் யாரையாவது போட்டு தள்ளும் எண்ணம் எழுதலாருக்கு உள்ளதா ?
இந்த பதிவில் வழக்கமான விஸ்வா பற்றிய “கும்மாங்குத்து” இல்லை…. அதனால் நான் இதை வெறுக்கிறேன்….. நமது காமெடி ஹீரோ இல்லாத ஒரு கதையா… போங்கயா…
ரஃபிக் ராஜா
ராணி காமிக்ஸ் & காமிக்கியல்
3.
vadivelsamy | December 20, 2008 at 9:11 am
ஏன் என்ன அடிச்சே? இது ஒரு சிரிப்புக் கதை தானே?’
என் சொந்த தாத்தா கதை உனக்கு சிரிப்பா இருக்கா?
யோவ், சொந்த கதையெல்லாம் காமெடி பண்ணக் கூடாது,
அதான் எனக்கு பயமா இருக்கு,
4.
vadivelsamy | December 20, 2008 at 9:12 am
நமது கதாநாயகன் பச்சை மின்னல்.
5.
Mahesh kumar | January 2, 2009 at 12:49 pm
Ha ha ha!!!
Very nice….