சித்திரங்களின் இரசிகன் I

December 20, 2008 at 3:10 pm 4 comments

        என்னுடைய பால்ய கால சிநேகிதனை நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தேன்.  உண்மையை சொல்ல வேண்டுமானால் அவன்தான் என்னை முதலில் அடையாளம் கண்டுக் கொண்டான்.  முற்றிலும் மாறி போயிருந்தான்.   பால் வடியும் அழகிய முகங்களுடன், ஸ்லிமான உடலுடன் ஊரைச் சுற்றி திரிந்த நாங்கள் நீண்ட காலத்திற்கு பின் சந்திக்கும் போது எனக்கு அவனை அடையாளம் தெரியாமல் போனது.  ஆனால் அவனோ நான் இன்னும் அப்படியே இருக்கிறேன் என்றும், அதனாலேயே என்னை அடையாளம் கண்டுக் கொண்டதாகவும் கூறினான்.

        பேச்சுக்கு அவனுடைய பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம்.  சிறு வயதில்    இருவருமே சித்திர கதை இரசிகர்கள்.  இராணி காமிக்ஸ் மற்றும் இலயன் காமிக்ஸ் போன்ற சித்திர கதைகளை படித்து அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்போம்.   வகுப்பறைகளில் வாத்தியார் வரவில்லையென்றாலும், அது பற்றியே பேச்சு போகும். இரு சித்திர கதை கதாநாயகர்களை ஒப்பிடும்போது வாத்தியார் வந்தாலும் எங்களின் பேச்சு அதுபற்றிதான் இருக்கும்.   நீண்டகாலத்திற்கு பின் சந்தித்ததால் பேச நிறைய விஷயம் இருந்தன.

       பங்கு சந்தை குறித்து அறிய நிறைய ஆர்வம் காட்டினான்.  இணையத்தில் காமிக்ஸ் குறித்து நிறைய வலைப்பூக்கள் இருப்பது பற்றி நான் பேச ஆரம்பித்தபோது ஒருவித அசிரத்தையுடன் கேட்டுக் கொண்டான்.  இணைய தொடர்பு, வலைப்பூக்கள் என்ற தொழிற்நுட்ப காரணிகள் அவனுக்கு புரியாமல் இருக்கும் என்று முதலில் நினைத்தேன்.   பிறகு அவன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், அவனுடைய வீட்டில் இணைய தொடர்பும் (Broadband, of course) இருந்தது எனக்கு தெரிய வந்தது. 

        மதிய உணவிற்கு பிறகு அவனிடம் மீண்டும் காமிக்ஸ் பற்றிய வலைப்பூக்கள் பற்றி உற்சாகமாக பேச தொடங்கினேன்.  அப்போதும் அதே அசிரத்தை தான்.  இன்னும் காமிக்ஸ் படிக்கின்றாயா என நீண்ட நேரமாக அடக்கி வைத்திருந்த கேள்வியையும் கேட்டு விட்டேன்.   அதற்கு அவன் சொன்ன பதில் என்னை மிகவும் காயப்படுத்தியது. 

 ‘அதெல்லாம் சின்ன வயசில, விவரம் புரியாமல் செஞ்சது.  இப்ப நிறைய வேலைகள் வந்துடுச்சி.  இன்னும் சின்னப்புள்ள தனமா அதுலேயே இருந்தா எப்படி?’

      ‘அதுக்காக வேலை, வேலை அதைய கட்டிக் கிட்டு அழுவியா, என்ன?  பொழுது போக்குன்னு ஒன்னு வேண்டாமா?’

      ‘குமுதம், ஆனந்த விகடன், ஜுனியர் விகடன்னு பெரிய லெவலுக்கு போயாச்சி. நீ இன்னும் அதையேவா படிச்சிக்கிட்டு இருக்கே?’

      ‘என்ன பேசறா? நானும் இன்னும் பத்தாவதா படிச்சிக்கிட்டு இருக்கேன்?  என் வட்டமும் பெருசா ஆயிடுச்சி.  நீ சொன்னது அதுக்கும் மேல நிறைய பத்திரிக்கைகளை நானுந்தான் படிக்கிறேன்.  அதுக்கும் காமிக்ஸ் படிக்காம விடுதறதுக்கும் என்ன சம்பந்தம்?  எனக்கு அதுவும் பிடிக்கும், இதுவும் பிடிக்கும்.  உனக்கும் பிடிச்ச ஒன்னு தானே.  அப்புறம் படிக்க மாட்டேங்கறே.’

        இந்த உரையாடலை அவன் தொடர விரும்பவில்லை என்பது அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது.  நானும் தொடர விரும்பவில்லை.  ஆனால் அவன் என் பால்ய வயது சிநேகிதன்.  அவன் நட்பை இதற்காகவெல்லாம் துண்டித்து கொள்ள முடியாது.  அவனுக்கும், எனக்கும் அப்போது சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்.  கொடுமை என்னவென்றால், எங்களுக்கு இப்போதும் அவரை பிடிக்கிறது.

      ஆனால் அவன் இழந்தது என்ன?  நான் இழக்காதது என்ன?   நானும் ஒரு நடுத்தர வாழ்க்கைதான் வாழ்கிறேன்.  வேலை, விடுமுறை  என்பது எனக்கும் உண்டு.   நாலு கழுதை வயசான்ன பிறகும் எனக்கு சித்திர கதைகள் இன்னும் பிடிக்கிறது. நானும் அவனும் ஏறக்குறைய ஒரே அலைவரிசையில்தான் சிந்தித்தோம். எந்த இடத்தில் அவன் பிரிந்தான் என்பதுதான் தெரியவில்லை.

            என்னுடைய சிறிய வயது  காமிக்ஸ் தொடர்பான நினைவுகளை (சுவாரஸ்யமானதை) மட்டும் வரிசைப்படி இல்லாமல் நினைவுக்கு வருவதையெல்லாம் இந்த தொடரில் எழுதலாம் என்றிருக்கிறேன்.  

          இந்த தொடரில் வரும் என் பால்ய கால நண்பர்களில் பலர் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள் என்பது தெரியாத நிலையில்  உண்மையான பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்றே நினைக்கிறேன்.  அதற்காக பேரரசு போல் சனியன் சகடை, பெருச்சாளி  போன்ற பெயர்களை பயன்படுத்த மாட்டேன் என உத்திரவாதமும் அளிக்கிறேன்.

Entry filed under: காமிக்ஸ். Tags: .

வேதாள நகரம் 10 – தாக்குதல் சித்திரங்களின் இரசிகன் II – மை நேம் இஸ் பில்லா

4 Comments Add your own

  • 1. SHANKAR VISVALINGAM  |  December 20, 2008 at 8:45 pm

    நண்பரே,
    என் நிலையும் இதுதான், காமிக்ஸ்களை வாங்க வசதியில்லாதபோது எனக்கு காமிக்ஸ்களை இரவல் கொடுத்த நண்பர்கள் கூட முற்றாக மாறிவிட்டார்கள்.

    என்ன எங்களிடம் இருந்த அந்த சிறுவயது கற்பனை உலகம், இன்றும் எங்களுடன் உயிருடன் இருக்கிறது.அவர்கள் இழந்ததைப்பற்றி நான் மனம் வருந்துகிறேன், அதே சமயம் உங்கள் கற்பனை உலகின் ஒர் பகுதியில், துயில் கொள்ளா வெள்ளைக்கரடியாகிய நான், நீங்கள் கொண்டு வரப்போகும் அந்த அற்புதத்திற்காக, சின்ன அணிலுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றேன்.

    “ என்ன சின்ன அணில் , விளையாட ஆரம்பிச்சு 2 நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள படுத்திட்ட, எழுந்திடப்பா, எழுந்திடு“

  • 2. Shakthiprabha  |  December 20, 2008 at 11:40 pm

    //அதுக்கும் மேல நிறைய பத்திரிக்கைகளை நானுந்தான் படிக்கிறேன். அதுக்கும் காமிக்ஸ் படிக்காம விடுதறதுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு அதுவும் பிடிக்கும், இதுவும் பிடிக்கும். உனக்கும் பிடிச்ச ஒன்னு தானே. அப்புறம் படிக்க மாட்டேங்கறே.’ //

    இதைத் தான் ‘தொலைந்த குழந்தைப் பருவம்’ என்று சொல்கிறோமோ?! சிலர் அதைத் தொலைக்கின்றனர் (அதுவே இயல்பு என்றுரைத்து). வேறு சிலர் அதை பொக்கிஷமாய் பாதுக்கின்றனர்.

    //அவனுக்கும், எனக்கும் அப்போது சூப்பர் ஸ்டாரை பிடிக்கும். கொடுமை என்னவென்றால், எங்களுக்கு இப்போதும் அவரை பிடிக்கிறது.///

    :))))))))))

  • 3. Jaffer  |  December 21, 2008 at 8:15 am

    எனக்கு மட்டும் மறுபடியும் ஒரு சான்ஸ் கிடைத்தால், அழகாக அம்புலிமாமா, பூந்தளிர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் படிச்சுகிட்டு ஜாலியா…லைப்ல மிஸ் பண்ணிட்டது நமகெல்லாம் கிடைக்காதான்னு இருக்கு, உங்கள் நன்பர் என்னடான்னா….

  • 4. Rafiq Raja  |  December 22, 2008 at 9:20 am

    இளமை கால எண்ணங்களை அசை போடுவது என்றுமே எல்லாருக்கும் பிடித்த ஒரு விஷயம் தான்.

    நானும் ஜூனியர் விகடன், இந்தியா டுடே, என்று வளர்ந்த பிறகு படிபவன் தான். ஆனால் நாங்கள் வளந்தவர்கள் என்று சொல்லி கொண்டு தன்னை தானே ஒரு வட்டத்துக்குள் ஒடுங்கி கொள்வதில் என்ன பயன். என்னுடன் சேர்ந்து சித்திரக்கதைகளை ரசித்த என்னுடைய பால்ய நண்பர்கள், மற்றும் உறவினர்கள், இன்று அதை குழந்தைகள் சாமாச்சாரம் என்று ஒதிக்கி உள்ளனர். ஆனால் அவர்களே குடும்பம், குழந்தை குட்டிகளோடு Bat-Man, Super Man, Spider Man, James Bond படங்களை காண சினிமா கொட்டகைகளை தஞ்சம் அடைவது, அவர்கள் வெளி உலகத்திற்காக நடித்து கொண்டு இருக்கிறார்கள் என்றே பறை சாற்றுகிறது.

    இன்றும் பழைய காமிக்ஸ்களை படிக்கும் பொது, வேலை பளு மற்றும் அந்நிய இன்னல்களில் உழலும் நமக்கு, ஒரு மன நிம்மதி, மற்றும் கற்பனயில் திளைக்க ஒரு காரணி கிடைகிறதே. அந்த எண்ணம் தொடரும் வரை, நானும் படிப்பேன்… மற்றவர்களையும் தூண்டுவேன். அந்த சந்தோசத்தை இழக்கும் மற்றவர் பற்றி நமக்கு என்ன.

    உங்கள் வலைபூ என்னுடைய பால்ய கால அனுபவங்களை பற்றி பதியும் என்னத்தை வளர்த்து விட்டது….. நேரம் கிடைக்கும் பொது அதற்கும் ஒரு ஆரம்பம் செய்கிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: