19-12-2008

December 19, 2008 at 6:05 am 4 comments

      கடந்த இரு நாட்களாக வேலை பளு அதிகமாக இருந்ததால், Post Market சரியாக அப்டேட் செய்ய இயலவில்லை.  இணையம் பக்கமே வர முடியவில்லை.  எதையோ இழந்தது போல இருந்தது.  இணையமும் ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது. 

         நேற்றைய அமெரிக்க சந்தை டைவ் அடித்திருக்கிறது.  ஆசிய சந்தைகளும் டைவிங் போர்ட்டில் இருக்கின்றன.  நமது சந்தை மட்டும்  கடந்த இரு நாட்களாக புதிய நிலைகளை எடுத்து வருகிறது.  அதாவது தொழிற்நுட்ப காரணிகளை எதிர்த்து முடிந்திருக்கிறது.  ரிலையன்ஸ் குருப் பங்குகளை கடந்த இரு நாட்களாக பார்த்தோமென்றால்  அதை வைத்துக் கொண்டு சந்தையை கீழே இறங்க விடாமல் செய்வது புரிகிறது.  இந்த நிலை கண்டிப்பாக மாறிவிடும்.  சிலரின் இலாப நோக்கத்திற்காக இவ்வாறு செய்கின்றனர். 

       இன்றைய தினம் சந்தையை இறக்கும்போது வெள்ளிக் கிழமை என வாங்கி திங்களன்று ஏறிவிடும் என்ற கணிப்பில் பங்குகளை வாங்கும்போது ஒரு தடவை யோசித்து விடுவது நல்லது.  திங்களன்றும் அவர்கள் சந்தையை இறக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

       இன்றைய சந்தை 3125 என்ற நிலையை தாண்டாது என்றே நினைக்கிறேன். பார்ப்போம். சத்யம் (விஷால் படம் இல்லை) மேலும் இறங்க வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.

        இன்றைய மாலை எழுதுகிறேன்.  இன்றைக்கு வேதாள நகரத்தின் வெற்றிகரமான 10ம் பகுதியை எழுதி பதிவேற்ற முயற்சி செய்கிறேன்.  🙂

        Good Morning to You All!

Post Market:

        சந்தையில் இன்று பெரிய அளவில் முன்னேற்றமில்லை.  அமெரிக்க அரசாங்கம்  ஆட்டோ செக்டாருக்கு பெயில் அவுட் பணம் கொடுத்துள்ளது.  தொகை பத்தாது என்றே நினைக்கிறேன்.  கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து வருகிறது.  பொதுவாக பார்த்தால் இது நல்ல விஷயம் என்ற தோன்றினாலும், உலக அளவில் பங்கு சந்தைகளுக்கு இது நல்லதில்லை.

         இந்த வாரக் கடைசியில் ஏதாவது எழுத முயற்சி செய்கிறேன். Till then. Enjoy the Weekend!

Advertisements

Entry filed under: Market Analysis.

18-12-2008 வேதாள நகரம் 10 – தாக்குதல்

4 Comments Add your own

 • 1. V.SURESH, SALEM  |  December 19, 2008 at 6:33 am

  GOOD MORNING TO EVERYBODY AND WISH YOU ALL A HAPPY AND PROFITABLE TRADING.

 • 2. கிங் விஸ்வா  |  December 19, 2008 at 11:44 am

  //இன்றைக்கு வேதாள நகரத்தின் வெற்றிகரமான 10ம் பகுதியை எழுதி பதிவேற்ற முயற்சி செய்கிறேன்// முயற்சியை கை விட முடியாதா? அதற்க்கு எவ்வளவு பெரிய “பொட்டி” வேண்டும் என்றாலும் கொடுக்கிறேனே? இதையும் மீறி நீங்கள் எழுதி பதிவேற்ற முயற்சி செய்தால் வீட்டிற்கு சைக்கிள் அனுப்ப வேண்டி இருக்கும், ஜாக்கிரதை. (வாசகர்கள் கவனிக்க: இவருக்கு எல்லாம் ஆட்டோ அனுப்பினால், அது ஆட்டோவிற்கு தான் அவமானம்)

  இறைவா,
  என்னை (ஜோஸ் போன்ற) நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் (அவர்களின் காலில் விழுந்தாவது).

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

 • 3. basheer  |  December 19, 2008 at 8:29 pm

  இனி என்ன செய்யலாம் பகுதி ரொம்ப நாளாவே காணேம், இனி என்ன செய்யலாம்?

 • 4. Karthikeyan G  |  December 19, 2008 at 9:05 pm

  //இதையும் மீறி நீங்கள் எழுதி பதிவேற்ற முயற்சி செய்தால் வீட்டிற்கு சைக்கிள் அனுப்ப வேண்டி இருக்கும், ஜாக்கிரதை. (வாசகர்கள் கவனிக்க: இவருக்கு எல்லாம் ஆட்டோ அனுப்பினால், அது ஆட்டோவிற்கு தான் அவமானம்) //

  ஜோஸ் அவர்களுக்கு தமிழ்கத்தில் இருக்கும் செல்வாக்கிற்கு இன்னும் இந்த கமெண்டிற்கு எதிர்ப்பு அலை கிளம்பாமல் இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது.


  எங்குற்றான் என் தமிழன்
  இங்குற்ற இழிவுதனை காணாமல்
  செங்குற்று தூணை போல் நிற்கிறானே
  அங்கத்தில் துடிப்பின்றி கிடக்கின்றானே
  ஆய்யோகோ – அவனுக்கு
  சங்கத்தில் பாட்டெழுதி வையுங்கள்
  தங்கத்தில் சிலை ஒன்று செய்திடுங்கள்..

  தமிழினமே வரலாறு உன்னை பழிக்காதிருக்கட்டும். அலைகடலென திரண்டு எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்துவீர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: