Archive for December 16, 2008
16-12-2008
அமெரிக்க சந்தை தள்ளாடி 60 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் தற்சமயம் வரை தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இது நம் சந்தையை பாதிக்கும் என்றே தோன்றுகிறது.
நேற்றைய தினம் 3000 என்ற நிலையை தாண்டியிருப்பதால், ஒருவித நம்பிக்கை நிறைய பேருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 3200, 3400 என்ற நிலைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதிகபட்சம் 3125க்கு மேல் போவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பாசி படிந்த கிணற்றில் மாட்டிக் கொண்ட தவளை தான் நினைவுக்கு வருகிறது.
நமது அரசும் ஒரு பெயில்அவுட் தயார் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறது. அதன் ஆட்சி இன்னும் சில மாதங்களே என்னும்போது இந்த முயற்சி எவ்வாற பயனளிக்கும் என்பது தெரியவில்லை. அதற்கு பதிலாக வேறு சில முயற்சிகள் செய்யலாம். நாட்டில் சிறு தொழில் முதலாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு வரி விகிதங்களை குறைக்கலாம். ஆனால் ஒட்டு விழாது.
சில முக்கிய பொருட்களுக்கு வரியை குறைப்பதன் மூலம் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கலாம். அதையும் செய்ய மாட்டார்கள். குறிப்பாக பெட்ரோலை நம் நாட்டு பொருளாதார மேதைகள் கற்பகதருவாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வரிகளையும் அதிலேயே போட்டு விடுகிறார்கள். பெரும்பாலான வருவாய் அதிலிருந்தே எடுக்கிறார்கள். இதைப் பற்றிக் கூட தனியாக எழுதலாம். சோம்பேறிதனம் தான். வேறு என்ன?
இன்றைய சந்தை 75 முதல் -65 வரை ஆடும். முடிவு ப்ளாட் அல்லது நெகடிவாகதான் முடியும் என்று நினைக்கிறேன்.
வழக்கம்போல் மாலை எழுதுகிறேன்.
Good Morning to You all!
Post Market:
இன்றைய சந்தை 60 புள்ளிகளுக்கு மேல் முடிந்திருக்கிறது. நம் அரசின் அறிவிப்பும் ஒரு காரணம் எனலாம். அமெரிக்க நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட ஊழல் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவின் ஆட்டோ செக்டர் மிகவும் பலம் வாய்ந்த ஒன்று. அது மிகவும் ஆடி போயிருக்கிறது அது குறித்து தெளிவான அறிவிப்பு வரும்வரை உலக சந்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாது.
It’s time for cautious. Watch your steps! That’s what i think right now!
Recent Comments