Archive for December 15, 2008
15-12-2008
ஆசிய சந்தைகள் எல்லாம் உயர்ந்து காணப்படுகின்றன. காரணம், கடந்த வெள்ளியன்று மிகவும் இறங்கி துவங்கிய அமெரிக்க சந்தை நாளடைவில் பெயில் அவுட் வந்து விடும் என்ற நம்பிக்கையில் 60 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
இன்று நம் சந்தையானது 3000 என்ற நிலையை எட்டக்கூடும். தக்க வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகம். ஏனென்றால் வெள்ளியன்று சந்தை ஷார்ட் கவரிங் நடந்ததால்தான் மேலேறியது என்பதை மறந்து விடக்கூடாது. அதனால் இன்றைய தினம் சந்தை புதிய தடைகளை கடக்கையில் புதிய ஷார்ட் பொஸிஷன்ஸ் துவங்க வாய்ப்பு உள்ளதால், சந்தையின் முன்னேற்றம் வெகுவாக தடைப்படும் என்றே நினைக்கிறேன்.
குறிப்பிடும் வகையில் செய்திகள் இல்லாத பட்சத்தில் இன்றைய தினம் சந்தை 125 முதல் -25 வரை ஆடலாம். சந்தையின் நடுவில் வரும் செய்திகளால் சந்தை பாதிக்கப்படலாம்.
மாலை விரிவாக எழுதுகிறேன். Again, don’t go too long!
Good Morning To You All!
Post Market:
இன்றைய தினத்தின் நிறம் பச்சை. அனைத்து சந்தைகளுமே ஏற்றத்துடன் முடிந்தன. நமது சந்தை 3000 என்ற இலக்கினை கடந்தும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. அமெரிக்க ஜனாதிபதி கார் தயாரிப்பாளர்களை இனி கார்களில் பெடல் வைத்து தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிகிறது. இன்றைய அமெரிக்க சந்தை இறங்கு முகமாக இருக்கும் என நினைக்கிறேன். இதன் விளைவை நாளை அனைத்து சந்தைகளிலும் (நம் சந்தை உட்பட) பார்க்கலாம்.
சந்தையின் வால்யூம் ஏறியதாக தெரியவில்லை. மிக எச்சரிக்கையான கட்டம் இது.
Good Night!
Recent Comments