Archive for December 12, 2008
12-12-2008
எதிர்பார்த்தது மாதிரியே அமெரிக்க ஆட்டோ பெயில்அவுட் இன்னும் தீர்மானிக்கப்பட வில்லையென்பதால், அமெரிக்க சந்தை 190 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் சிகப்பாகவே காணப்படுகின்றன.
நமது சந்தையும் அவ்வாறே தொடங்க வாய்ப்பு உண்டு. இதை எதிர்பார்த்து தான் நேற்றைய சந்தை தடுமாறிக் கொண்டிருந்தது. நமது ஆட்டோ துறை பங்குகள் பெருத்த அளவில் சரியாது என நினைக்கிறேன். பெட்ரோல் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாவதால், ஒரளவே சரிய ஆரம்பிக்கும். நமது அரசு அத்துறையை சேர்ந்த குழுமங்களுக்கு நிதி வழங்கும் என எதிர்பார்க்க முடியாது
அமெரிக்க ஆட்டோ பெயில்அவுட் இன்றோ அல்லது நாளையோ நிறைவேறி விடும், இன்றையே அல்லது திங்கள் அன்று அமெரிக்க சந்தை மேலேறிவிடும் என்ற நினைப்பில் இன்றைய தினம் லாங் போகும்போது ஒரு தடவை தீர யோசித்து கொள்வது நல்லது.
உலக பொருளாதாரம் குறித்து ஒரு பிரபல ஐரோப்பிய நிதி நிறுவனம் இன்று ஒரு அறிக்கை வெளியிடுவதாக அறிகிறேன். அதை படித்து விட்டு என்னுடைய கருத்துகளை இன்றுமாலையோ அல்லது வாரக்கடைசியிலோ எழுதுகிறேன்.
நமது சந்தை இன்று இறக்கத்தில் முடியவே வாய்ப்பு அதிகம். -140 வரை இறங்க வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.
இன்று காலையில் தமிழக இலக்கிய நண்பர்களுக்கு நான் கொடுக்கும் உற்சாகமான செய்தி என்னவென்றால், வேதாள உலகம் இன்று வழக்கம் போல் வெளிவரும்.
Good Morning to You All!
Recent Comments