வேதாள நகரம் – 08 மர்ம கும்பல்

December 9, 2008 at 8:51 am 12 comments

       நோவடியிலிருந்து அறுபது மைல்கள் தொலைவில் வந்து கொண்டிருக்கிறது ஒரு கோச் வண்டி.

      ‘நாம் எப்போது நோவடி போய் சேருவோம்?’

       ‘இன்னும் நான்கு மணி நேரத்திற்குள் போய் சேர்ந்து விடுவோம், அம்மா.’

       ‘நல்லது.  பொழுது சாய்வதற்குள் நான் அங்கு இருக்க வேண்டும். புரிந்ததா?’

       ‘அதற்குள் போய்விடலாம், அம்மா.’

——————————————————————————————————————————————–

     சண்டைத் திடலின் உள்ளே விஷ்வாவும், சின்ன அணிலும் நின்று கொண்டிருக்கிறார்கள்.  சின்ன அணிலை பார்த்து நேசத்துடன் ஒரு புன்னகையை விஷ்வா வீசினார்.  பதிலுக்கு சின்ன அணிலிருந்து ஒரு உறுமல் எழுந்தது.  இவ்வளவு கிட்டத்தில் அதாவது ஐந்தடி தொலைவில் சின்ன அணிலை பார்க்கும்போது விஷ்வாவின் உடல் ஆஃப் பண்ணாத போர்ட் மோட்டார் கார் போல உதறிக் கொள்ள ஆரம்பித்தது.

       கடைசி நேர சிந்தனைகள் மனதில் ஒட ஆரம்பித்தன.  ஒரு ஒசி பீருக்கு ஆசைப்பட்டு, அது புதையல் ஆசையில் முடிந்து, இப்போ நம் கதையே முடியப் போகிறதே.  அடுத்தப் பிறவி என்றிருந்தால், நல்ல வாட்டசட்டமான நண்பர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.   ஒற்றைக்கு ஒற்றை என்றாலே சண்டைதானா,  இதை தீர்ப்பதற்கு வேறு நிறைய முறைகள் உள்ளனவே.  பல்லாங்குழி, தாயப்பாஸ், பரமபதம், ஒடிப்பிடிச்சு இது போன்ற விளையாட்டுகள் நடத்தி அதில்  யார் ஜெயித்தது என தேர்ந்தெடுக்க மாட்டார்களா?   

     ‘வீரர்களே, அருகில் வாருங்கள்.  அந்த புனித துணிச்சுருளை எடுத்து வாருங்கள்.’

     புனித துணிச் சுருள் என்பது ஒரு பழைய துணிச் சுருளாக, ஆறடி நீளத்தில்,  நிறைய எம்பிராய்டரி செய்யப்பட்டதாக இருந்தது. அந்த துணிச் சுருளில் சில இடங்களில் இரத்தக் கறை இருந்தது நம் சுத்த வீரனின் இரத்தத்தை உறைய செய்வதாக இருந்தது.

       ‘வீரர்களே, இந்த துணிச் சுருளின் ஒவ்வொரு முனையையும் உங்கள் வாயில் கவ்விக் கொண்டு இந்த மரண விளையாட்டில் ஈடுபடுங்கள்.  எக்காரணம் கொண்டும் துணிச் சுருளை வாயிலிருந்து நழுவ விடக்கூடாது. வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?’

       ‘இதை துவைக்கவே மாட்டீங்களா?’

      ——————————————————————————————————————————————–

    நோவடியில் உள்ள ஒரு விடுதி.

    ‘செழிக்கண்ணு, இனி இந்த அறையை விட்டு நாம வெளியே போகவே கூடாது.  அந்த கும்பல் இங்கேதான் வந்து தங்கும்.  அவங்க புதையலை தேடி போகும்போது யாருக்கும் தெரியாம நாம அவங்கள பாலோ பண்ணணும்.  நாம பாலோ பண்ணுறது யாருக்குமே தெரியக்கூடாது.’

    ‘நமக்கு கூடவா?’

——————————————————————————————————————————————–

       மரணத்தைப் பற்றி நாம் எல்லோருமே ஒரு கட்டத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறோம்.  ஒரு சிறிய பிரச்சினை வந்தாலும், அதிலிருந்து மரணம் வரை நம் மனம் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது.  ஆனால் உண்மையிலேயே உயிர் போகிற பிரச்சினை என்றால் நம் மூளை மிக வேகமாக சிந்திக்க ஆரம்பித்து, அந்த மரணத்திலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என பல புதிய எண்ணங்களை தோற்றுவிக்கும்.  நம் கதாநாயகனை பொறுத்த வரையில் மரணம் அவன் எதிரில் ஒரு துணிச் சுருளை வாயில் கவ்விக் கொண்டு, சிக்ஸ்டீன் பேக்குடன் நின்றுக் கொண்டிருந்தது.

      இந்த நேரத்தில் மின்னலென ஒரு எண்ணம் விஷ்வாவின் மூளையில் உதயமாயிற்று.  வாயில் கவ்வியிருந்த துணிச் சுருளை ஒரு ஒரமாக கவ்விக் கொண்டு, சண்டைத் திடலுக்கு வெளியே கேட்காமல் சின்ன அணிலுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

      ‘சின்ன அணிலு,  உனக்கு ஏன் இப்படி ஒரு பேர் வைச்சாங்கன்னு யோசிச்சியா?  நான் யோசிச்சேன்பா.  உன் உடம்புல எல்லா பார்ட்டும் பெருசா இருக்கறச்ச உனக்கு ஏன் சின்ன அணிலுன்னு பேரு வைச்சாங்க.’

       சின்ன அணிலின் கண்களிலிருந்து பொறி பரக்க ஆரம்பித்தது.  அவனின் தாடைகள் இறுகி, உறுமல் எழுந்தது.

       ‘நானும் இங்கே நிறைய பேருக்கிட்ட விசாரிச்சேன்.  யாருக்குமே தெரியலை.  அப்பால, உன்னோட கேர்ள் ப்ரெண்டுக்கிட்ட போய் கேட்டேன்னு வைச்சுகோயன்.  அவ தான் சரியா அதுக்கு விளக்கம் சொன்னா.’

       இப்போது சின்ன அணிலின் உடல் ஆஃப் செய்யாத அசோக் லேலண்ட் லாரி போல் குலுங்க ஆரம்பித்தது.

      ‘அவ சொல்றா.  உன் உடம்புல எல்லா பார்ட்டும் பெருசா இருந்தாலும், ஒரு பார்ட் மட்டும் சின்ன அணில் சைசில் இருக்குன்னு.  அதனாலேதான் உனக்கு சின்ன அணில்ன்னு பேரு வந்துச்சின்னு.  என்ன, நான் சரியா தானே பேசிக்கிட்டு இருக்கேன்.’

        கோபத்தை அடக்க, பற்களை அரைத்துக் கொண்டு விஷ்வாவை நோக்கி கன வேகத்துடன்  வரும்போது, அவன் வாயில் வைத்திருந்த பழைய துணிச் சுருளானது துண்டாகி கீழே விழுந்தது.

       உடன் விஷ்வா, ‘நான் ஜெயிச்சுட்டேன். என்னை காப்பாத்துங்க. நான் ஜெயிச்சுட்டேன். என்னை காப்பாத்துங்க’ என கூவியவாறே சண்டைத் திடலை விட்டு வெகு வேகமாக வெளியேறினார்.

        ‘நல்லது வீரனே, சின்ன அணில் தன் வாயில் வைத்திருந்த துணிச் சுருளை நழுவ விட்டதால், நீ வெற்றி பெற்று விட்டாய்.  சின்ன அணில் எப்போதும் தோற்பவன் அல்ல.  உங்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது.  கிராமத்தை விட்டு நீங்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம். ’

  ——————————————————————————————————————————————–

        ‘அவன் ஜெயித்து விட்டான். அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.’

       ‘சிறிது தொலைவு செல்லட்டும்.  பிறகு நமது அடுத்த திட்டத்தை செயல்படுத்துங்கள்.’

       ‘அப்படியே செய்து விடுகிறோம்.’

  ——————————————————————————————————————————————–

          நமது இலட்சிய குதிரை வீரர்கள் மற்றும் எஸ்கோபாருடன் அந்த கிராமத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறுகிறார்கள்.

       சிறிது தொலைவு சென்றதும், கலீல், ’விஷ்வா, அங்கே பார்த்தாயா?  இருபது குதிரை வீரர்கள் அங்கே நம்மையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். ’

        ‘அவர்கள் நிற்கும் தோரணையை பார்த்தால் நம் இரசிகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. ’

      முன்னால் நிற்கும் குதிரை வீரனின் சைகையை தொடர்ந்து அவர்கள் சுட ஆரம்பித்தார்கள். 

        சதீஷ், ‘வேகமாக இந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவோம்.  குதிரைகளை நோவடிக்கு விரட்டுங்கள், சீக்கிரம்.’

       நமது இலட்சிய வீரர்கள் ஆபத்தை பார்த்ததும் குதிரையில் ஏறி சிட்டென பறந்தனர்.  ஆனால் அவர்களுக்கும், அந்த மர்ம கும்பலுக்கும் இடைவெளி குறுகிக் கொண்டே வந்தது.

                            (…………………………………………………………….தொடரும்…………………………………………)

Advertisements

Entry filed under: வேதாள நகரம்.

08-12-2008 10-12-2008

12 Comments Add your own

 • 1. King Viswa  |  December 9, 2008 at 9:17 am

  இறைவா,

  என்னை (ஜோஸ் போன்ற) நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்.

  //விஷ்வாவின் உடல் ஆஃப் பண்ணாத போர்ட் மோட்டார் கார் போல உதறிக் கொள்ள ஆரம்பித்தது// என்ன அய்யா, இந்த அவமானம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று கேட்பது போல இருக்கிறதே? போதுமையா உங்க நட்பு. இனி உங்க சங்காத்தமே வேணாம்.

  //ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?’
  ‘இதை துவைக்கவே மாட்டீங்களா?’// சூப்பர். அதாவது அழுக்கான துணியை நாங்கள் வாயில் கவ்வ வேண்டும்?

  //நாம பாலோ பண்ணுறது யாருக்குமே தெரியக்கூடாது.’
  ‘நமக்கு கூடவா?’// செழி மானம் போச்சு.

  // ‘அவ சொல்றா. உன் உடம்புல எல்லா பார்ட்டும் பெருசா இருந்தாலும், ஒரு பார்ட் மட்டும் சின்ன அணில் சைசில் இருக்குன்னு. அதனாலேதான் உனக்கு சின்ன அணில்ன்னு பேரு வந்துச்சின்னு// ஏற்கனவே இந்த கதைய பத்தி பலர் பல விதமா பேசுறாங்க. இப்போ இது போன்ற பிரச்சினையா? இது போன்ற Unparlimentary எண்ணங்களை இந்த மகோன்னதமான கதையில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? குடும்பத்திலுள்ள பெண்கள் யாருமே இந்த கதையை படிக்க கூடாது என்று ஆசிரியர் முடிவெடுத்து விட்டாரா என்ன?

  //‘அவர்கள் நிற்கும் தோரணையை பார்த்தால் நம் இரசிகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. ’// இது வேறயா? ரசிகர்கள் சங்கம் வச்சு எங்க மானத்தை வாங்கனுமா?

  கிங் விஸ்வா.

  Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்

 • 2. chezhi  |  December 9, 2008 at 5:47 pm

  (1) முதல் பத்தியை படிக்கும் போதே அதில் ஒரு பெண் உள்ளதாக தெரிகிறது. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? (கச-முசா செய்ய)

  (2) ஒற்றைக்கு ஒற்றை என்றாலே சண்டைதானா, இதை தீர்ப்பதற்கு வேறு நிறைய முறைகள் உள்ளனவே. பல்லாங்குழி, தாயப்பாஸ், பரமபதம், ஒடிப்பிடிச்சு இது போன்ற விளையாட்டுகள் நடத்தி அதில் யார் ஜெயித்தது என தேர்ந்தெடுக்க மாட்டார்களா? = உலக நாடுகளுக்கு இந்த ஐடியாவை ஐ.நா சபை மூலமாக அனுப்ப உத்தேசம்.

  (3) அந்த துணிச் சுருளில் சில இடங்களில் இரத்தக் கறை இருந்தது நம் சுத்த வீரனின் இரத்தத்தை உறைய செய்வதாக இருந்தது. = அற்புதம். அதி அற்புதம்.

  (4) நாம பாலோ பண்ணுறது யாருக்குமே தெரியக்கூடாது.’
  ‘நமக்கு கூடவா?’ = நான் என்ன கேக்குரன்? நீங்க என்ன எழுதறீங்க?

  (5) சின்ன அணிலின் உடல் ஆஃப் செய்யாத அசோக் லேலண்ட் லாரி போல் குலுங்க ஆரம்பித்தது = சூப்பர்.

  (6) நீ வெற்றி பெற்று விட்டாய். சின்ன அணில் எப்போதும் தோற்பவன் அல்ல = யோவ், இதுக்கு என்ன அர்த்தம்? இவனும் தோக்கல, அவனும் ஜெயிக்கல? இங்க என்ன அரசியலா நடக்குது?

  (7) () நமது இலட்சிய வீரர்கள் ஆபத்தை பார்த்ததும் குதிரையில் ஏறி சிட்டென பறந்தனர் = கதா நாயகர்கள்’ன்னு சொல்லி அவங்கள இதுக்கு மேலயும் கேவலப்படுத்த முடியாது.

  (8) எனக்கு ஒரு விஷயம் இன்னும் புரியல. இவ்வளவு நடந்தும் நம்ம விஸ்வா இன்னும் தொடர்ந்து Respond பன்னுராரே?

 • 3. Venkateswaran  |  December 9, 2008 at 9:26 pm

  பங்கு வேட்டையரே!

  பங்கு வேட்டையர், சுவாமி நிப்டியானந்தா போன்ற வார்த்தைகள் எல்லாம் உங்களை பற்றி ஒருவித பயத்தையே என்னிடம் ஏற்படுத்தின. எனக்கு ‘பொருளாதாரம்’ எல்லாம் புரியாத ஒன்று! கணக்கு வாத்தியார் போல அறுத்து விடுவீர்கள் என்று பயந்தே உங்கள் பதிவுகளை பார்ப்பதில் ஒருவித தயக்கம் என்னிடம் இருந்தது.

  ஆனால், வேதாள நகரம் தொடர் எனது தயக்களை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டது. கிங், பிரின்ஸ் என்று எல்லா பதவிகளையும் தனக்கே வைத்து கொண்ட விஷ்வாவை – ‘சாதா நாயகனாக்கி’ எங்களை போன்ற எளியோர் உள்ளம் மகிழ வைத்து விட்டீர்கள். சாதாவோ, சோதாவோ ‘நாயகன்’ என்றோ சொல்லே நளினமான ஒன்றுதான். எலிக்கு வாலாக இருப்பதை விட சிங்கத்திற்கு தலையாக இருபது எவ்வளோவோ மேல்! (விஸ்வா! கண்ணை தொடச்சிகுன்ங்க, இதெற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட கூடாது!)

 • 4. ரஃபிக் ராஜா  |  December 9, 2008 at 9:47 pm

  கதை அருமையாக இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. விஸ்வா வும் விடாமல் படித்து தனது கருத்தை பதிந்து வருகிறார். எவ்வளவு கிண்டினாலும், இந்த மனுசம் விடாமல் படிகிராரென்று ஒரு இறக்கம் வேண்டாம், இப்படியா வாருறது.

  பிரின்ஸ் ஒப் கொல்கத்தா என்று கங்குலி தன்னை தானே கூறி கொள்வது போல, கிங் விஸ்வா என்று ஊரில் உள்ள எல்லார் மனதிலும் தானே விதைத்த விஷத்தை, இப்படி damage பண்ணிடீன்களே தலை….

  ஆமா, செழி யை பற்றி என் அதிகமாக வாரவில்லை…. ஒருவர் மாறுமே படும் துன்பத்தை இனியும் என்னால் பொறுக்க முடியாது (கவனகிவும், நான் என்னை இங்கு எவ்விதத்திலும் குறிப்பிடவில்லை 🙂 அப்பா தப்பிச்சேன்டா…. )

  சரி, கதை ஆசிரியர் ஜோஸ் மட்டும் கதையில் கதாபதிராமாக என் வரலை…. spoof என்றால் தன்னையும் வருத்தி கொள்ள வேண்டாமோ….. சரி அடுத்த பாகத்தில் வந்து கலக்கிறேன்………

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

 • 5. கிங் விஸ்வா  |  December 10, 2008 at 9:07 am

  இறைவா,

  என்னை (ஜோஸ் போன்ற) நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்.

  //கிங், பிரின்ஸ் என்று எல்லா பதவிகளையும் தனக்கே வைத்து கொண்ட விஷ்வாவை// என்ன கொடுமை சார் இது? இந்த பதவி, பட்டம் எல்லாம் தானாக என்னை தேடி வந்தவை. நானாக எதையும் தேடி செல்ல வில்லை என்பதை சான்றோர்களும், தமிழர்களும் நன்கு அறிவார்கள். பொது வாழ்வில் இது போன்ற பல அவதுருகளை நான் சந்திக்க தயாராக இருந்தாலும், என்னை பற்றி நன்கு அறிந்த (வேண்டப்பட்ட விரோதிகளே) இவ்வாறு கூறுவது மனதிற்கு வருத்தம் அளித்தாலும், ராமனையே சந்தேகப்பட்ட உலகம் தானே இது என்று என்னை நானே தேற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

  //‘சாதா நாயகனாக்கி’ எங்களை போன்ற எளியோர் உள்ளம் மகிழ வைத்து விட்டீர்கள்// அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் எளியோரை நான் வாழ்த்துகிறேன்.

  //விஸ்வா வும் விடாமல் படித்து தனது கருத்தை பதிந்து வருகிறார். எவ்வளவு கிண்டினாலும், இந்த மனுசம் விடாமல் படிகிராரென்று ஒரு இறக்கம் வேண்டாம்// நன்றிகள் பல நண்பரே.

  கிங் விஸ்வா

 • 6. 123investor  |  December 10, 2008 at 5:39 pm

  தங்களது கட்டுரை மிகவும் அருமை சார்.வெப்சைட் முகவரியை லிங்க்(link) பார்மட்டில் கொடுப்பது எப்படி என்று தெரிவித்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

 • காமிக்ஸ் ரசிகர்களே, பங்கு சந்தை வேட்டையர்கலே,

  இனிமேல் பேரரசர் என்ற பட்டத்தை என்னை தவிர வேறு யாரும் உபயோகப் படுத்தகூடாது என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

  (யப்பா, இந்த பட்டத்தை வாங்குறதுக்குள்ள இன்னா கஷ்டம், இன்னா கஷ்டம். உயிர் போய் மறு பிறவி எடுத்து விட்டேன்.)

  மக்களே, இனிமேல என்னை பேரரசர் என்றே விளிக்க வேண்டும்.

  பேரரசர் வெங்கி

 • 8. sharehunter  |  December 10, 2008 at 8:32 pm

  மகாராஜா வெங்கி வாழ்க, வாழ்க, வாழ்க. மகாராஜாவின் அந்தபுரம் எங்குள்ளது?

 • யாரங்கே,

  பேரரசரை வெறும் மஹாராஜா என்று அழைத்த இந்த ஷேர் ஹன்டர்’ஐ உடனடியாக நாடு கடத்தவும்.

  அதுவும் பெண்களே இல்லாத நாட்டிற்கு.

  பேரரசர் வெங்கி.

 • 10. ரஃபிக் ராஜா  |  December 11, 2008 at 10:38 am

  காதை கிழிக்கும் உங்க கூத்து தாங்க முடியல…. ஒருவர் தண்ணி வேட்டையர் என்று கூறி கொள்கிறார், ஒருவர் ராஜா, இப்போது இன்னொருவர் மகர்ராஜா..

  உண்மையாக பேரிலேயே ராஜா வைத்து கொண்டு இருக்கிற, நானே சும்மா இருக்கேன்…. அடங்குங்கப்பா 🙂

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

 • பேரரசர் வெங்கியின் அந்தப் புறத்தில் நான் நெடு நாட்களாக இருப்பதால் அங்கு மற்ற அனைவருக்கும் (பேரரசர் வெங்கி உட்பட) நோ என்ட்ரி.

 • 12. யோகு  |  December 29, 2008 at 6:20 pm

  என்ன சார் எல்லா ஆட்டத்தையும் நீங்களே ஆடிக்குறீங்க?

  எப்ப அடுத்த பகுதி? ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள்.
  நான் மட்டும் என் போட்டி முன் அமர்ந்து தனியாக சிரிச்சுகிட்டு இருக்கேன் உங்களால…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: